மத்திய வங்கி ஆளுநருக்கு ’’ஏ கிரேடு’’ விருது!

வாஷிங்டனில் நடைபெறும் IMF-உலக வங்கி வருடாந்திர கூட்டங்களுடன் இணைந்து நடத்தப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த மத்திய வங்கி ஆளுநர்கள் விருதுகளில், குளோபல் ஃபைனான்ஸ் பத்திரிகையால் மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்கவிற்கு மதிப்புமிக்க “ஏ கிரேடு” விருது வழங்கப்பட்டுள்ளது. டாக்டர் வீரசிங்கவின் விவேகமான பணவியல் கொள்கைகள், இலங்கையின் நிதி அமைப்பை நிலைப்படுத்துவதில் வலுவான தலைமைத்துவம் மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மூலோபாய மேலாண்மை ஆகியவற்றை இந்த விருது அங்கீகரிக்கிறது. கொள்கை நம்பகத்தன்மை, […]
”மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டமே சிக்கல்”

மாகாண சபைச் சட்டம் பாராளுமன்றத்தால் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதன் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க கூறினார். தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரங்கள் கிடைத்த பிறகு, மாகாண சபைத் தேர்தல்கள் மாகாண மட்டத்தில் தனித்தனியாக நடத்தப்படுமா அல்லது ஒன்றாக நடத்தப்படுமா என்பதை அது முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார். முந்தைய மாகாண சபைத் தேர்தல்கள் இவ்வாறு தனித்தனியாக நடத்தப்பட்ட வழக்குகள் உள்ளன […]
ஆளும் தரப்பினர் பாடசாலைகளுக்கு மூடுவிழா நடத்துகின்றனர் – சஜித் சாடல்!

ஒரு பாடசாலை திறக்கப்படும் போது, ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்று பழமொழியொன்று காணப்படுகின்றது. இருக்கும் பாடசாலைகளை மூடுவதை விடுத்து, தற்போதுள்ள பாடசாலை முறையை வலுப்படுத்தும் நடவடிக்கையையே நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பாடசாலை கட்டமைப்பில் காணப்பட்டு வரும் பௌதீக மற்றும் மனித வளங்கள் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்து, காலத்துக்கு ஏற்றால் போல் நவீன இற்றைப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தகவல் தொழிநுட்பக் கல்வி, ஆங்கில மொழி மற்றும் பிற […]
ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களினால் பல்கலைக்கழக பட்டப்படிப்பு பாடநெறிகளில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் அவற்றை குறித்த காலத்தில் நிறைவு செய்ய முடியாமை காரணமாக பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உருவாகியுள்ள சிக்கல்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் தொடர்பிலும் இங்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் (FUTA) பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினர். அவ்வாறு தாமதமான பட்டப்படிப்புகளின் […]
பிள்ளையானின் முக்கிய சகாக்கள் தப்பியோட்டம் ; ஆபத்தாகும் விசாரணைகள்

இஷாரா செவ்வந்தி விவகாரம் ஒருபுறமிருக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் விவகாரமும் ஒரு பக்கம் முக்கிய நகர்வுகளில் தீவிரப்படுத்தப்பட்டு கொண்டு தான் இருக்கின்றது. குறிப்பாக, பிள்ளையானின் முக்கிய சகாக்கள் தலைமறைவாகியமை தொடர்பில் பல இரகசிய தகவல்கள் புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. அந்தவகையில், புலனாய்வுத்துறை நிப்ராஸ் மற்றும் பிள்ளையானின் முக்கிய சகாக்கள் நாட்டிலிருந்து தப்பியோடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள், கனடா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளுக்கு தப்பியோடி வருவதாகவும் கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன என்று […]
உலக சாதனை ; தீபாவளி தினத்தில் அமைச்சரின் சாகசம்

இந்தியா உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், 26 இலட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றியமைக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் பெற்றார். உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மகா தீபத்திருவிழாவை நேற்று நடத்தியது. […]
தனியார் காணி ஒன்றில் புதையல் தோண்டிய மூவர் கைது

குருணாகல் நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவின் பின்னபோலேகம பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிக்கவெரட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபர்கள் 20, 32 மற்றும் 51 வயதான நிக்கவெரட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து நிக்கவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளை: பிரான்ஸ் நாட்டின் அருங்காட்சியகம் மூடல்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள இலூவா அருங்காட்சியகம். இங்கு மோனோலிசா ஓவியம் உட்பட வரலாற்று சிறப்புமிக்க 33,000 கலைப் பொருட்கள், சிற்பங்கள், நகைகள், ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கலைப் பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் பல முறை திருடுபோயுள்ளன. கொள்ளை முயற்சி சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. ஸ்கூட்டரில் வந்த கொள்ளையர்கள் அருங்காட்சியகத்தில் கட்டிட பராமரிப்பு நடைபெற்ற இடத்தின் வழியாக ஊடுருவியுள்ளனர். ஹைட்ராலிக் ஏணியை பயன்படுத்தி […]
சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘ரூம் பாய்’

அறிமுக நடிகர் சி.நிகில் ஹீரோவாக நடிக்கும் படம், ‘ரூம் பாய்’. இதில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ள இப்படத்தை, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, “இது ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம். […]
ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லியின் விளம்பர படம்

இயக்குநர் அட்லி, ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’மூலம் இந்திக்குச் சென்றார். அந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதையடுத்து அவர், அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தை இயக்கி வருகிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘சிங் தேசி சைனிஸ்’ என்ற சீன உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரம் படம் ஒன்றை அட்லி இயக்கி வருகிறார். இதன் டீஸர் […]