பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பதுளை , கொழும்பு, காலி, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலமடைந்துவருகிறது மொட்டு கட்சி – நாமல் ராஜபக்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்துவருகின்றது. மாகாணசபைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே தேர்தலில் போட்டியிடும் விதம் பற்றி முடிவெடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். ” மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனு வழங்கும்போது, வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸ் சான்றிதழொன்று பெறப்படும். போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களா என்பது பற்றி ஆராயப்படும். குற்றவாளிகள் நாட்டைவிட்டு தப்பியோடுவதற்கு கடவுச்சீட்டு செய்து கொடுக்கும் தரப்புகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட […]

கூட்டு பயணம் குறித்து கட்சியே முடிவெடுக்கும்: சுமந்திரன் அறிவிப்பு

” மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பது பற்றி ஆராய்வதற்காக தமிழ்த் தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். எனினும், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எனில் அதில் பங்கேற்பது குறித்து கட்சியே தீர்மானிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நீண்டகாலம் நடத்தப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வரும் மாகாண […]

தமிழரக் கட்சியின் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை, திட்டமிட்ட செயலா?

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவாநந்தனின் வீடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்றபோது தான் வீட்டில் இருக்கவில்லை எனவும் தனது தயார் மாத்திரமே இருந்தாகவும் சிவாநந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்களில் வந்த சிலர் வீட்டுக்குத் தீயிட்டதாக சிவாநந்தனின் தாயர் தெரிவித்துள்ளார். அதேவேளை தீ விபத்து இயல்பாக ஏற்படவில்லை எனவும் திட்டமிட்ட செயல் என்றும் […]

நாமலுக்கும் செவ்வந்திக்கும் தொடர்பு! – CIDயில் முறைப்பாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட கட்சியையும் அதன் தலைமையையும் இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்ட முறையில் பொய்யான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு அளித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிற மூத்த உறுப்பினர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான இணையவழி அவதூறு பிரச்சாரத்தை மேற்கோள் காட்டி, இன்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக, SLPP தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ ஊடகங்களுக்கு […]

யானை தாக்கியதில் தாய் பலி

  மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில் குறித்த பெண் தனது வீட்டில் திங்கட்கிழமை (20)அதிகாலை தூங்கிக் கொண்டிருக்கையில், தகரத்தினால் அமைத்த வீட்டினுள் இருந்த நெல்லினை உண்பதற்காக வந்த காட்டு யானையை கண்டு பயத்தில் வெளியே ஓடிய போது யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதாக அறிய முடிகிறது. இச்சம்பவத்தில் மரணமானவர் நான்கு பிள்ளைகளின் தாயான வைரமுத்து மலர் […]

தங்கத்திற்காக வடக்கு முஸ்லீம் மக்களை வெளியேற்றிய விடுதலைப்புலிகள்

தங்கத்திற்காக வடக்கு முஸ்லீம் மக்களை  வெளியேற்றிய விடுதலைப்புலிகள் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக  வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக  வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம்  முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார். கறுப்பு ஒக்டோபர் எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம்  ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற   விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் […]

தீபாவளி தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள்

தீபாவளி தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் நடைபெற்றது.

யாழில். ஆலயத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

யாழ்ப்பாணம் – அராலி வீரபத்திரர் கோவில் மண்டபத்திலிருந்து முதியவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அராலி பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் (வயது 81) என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று மதியம் வழிபாட்டுக்காக ஆலயத்திற்கு சென்ற நிலையில், ஆலய மண்டபத்தினுள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுவாச நோய்களுக்கு இந்தியாவில் மருந்து கண்டுபிடிப்பு

இந்தியாவில் முதல் முறையாக ‘நபித்ரோமைசின்’ என்ற பெயரில் ஆன்டிபயாட்டிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுவாச நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, புற்று நோயாளிகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும். இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் மூலக்கூறாகும். இது மருந்துத் துறையில் இந்தியாவின் தன்னிறைவை நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்றம் ஆகும். இந்தியா இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தி […]