பங்ளாதேஷுக்கு 203 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை

நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் இன்று நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில்பங்களாதேஷு க்கு 203 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்தது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 48.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை சார்பாக மூவர் மாத்திரமே சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். வெறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை. இதன் மூலம் இலங்கையின் துடுப்பாட்ட வரிசை எளிதில் சரியக்கூடியது என்பது […]
கனடாவிற்கு வந்தால் கட்டாயம் கைது செய்வோம் – இஸ்ரேலிய பிரதமருக்கு எச்சரிக்கை!

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு கனடாவிற்குள் நுழைந்தால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவிராந்து கட்டளையை கட்டாயம் நிறைவேற்றுவோம். அதன்படி இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவவை கைது செய்வோம் என கனேடிய பிரதமர் மார்க கார்னி தெரிவித்துள்ளார்.
நாளையும் இரத்து செய்யப்பட்ட 4 ரயில் சேவைகள்

சீரற்ற வானிலை காரணமாக, இஹல கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவும், ரயில் ஒன்று தடம்புரண்டமையினாலும் இன்று (20) இடம்பெறவிருந்த பல ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே, பலான மற்றும் இஹல கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் பாதையில் இரண்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, இன்றைய தினம் 18 ரயில் சேவைகளை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்த நிலையில், நாளைய தினமும் 4 […]
இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணி […]
பலத்த மழை – வீட்டின் மீது இடிந்து விழுந்த சுவர்

பலத்த மழையின் காரணமாக பொகவந்தலாவ, ஆரியபுர பகுதியில் வீடொன்றின் மீது பெரிய பாதுகாப்பு சுவரொன்று இடிந்து விழுந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை எனவும் அனைவரும் கொழும்பிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டின் இரு படுக்கையறைகள் மற்றும் சமையலறைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
தங்காலையில் ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை பருகிய இரு நாய்கள் உயிரிழப்பு

தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை பருகிய ஐந்து நாய்களில் இரு நாய்கள் நேற்று மரணமடைந்துள்ளதாக தங்காலை மிருக வைத்தியசாலை நிறுவனத்தின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு கடலில் மிதந்த நிலையில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள நீரை பருகிய ஐந்து நாய்கள் ஒரே இடத்தில் சுற்றி வழமைக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. குறித்த நாய்களை கொண்டு செல்வதற்கு அரச மிருக வைத்தியர்கள் வராததால் மிருக வைத்திய தனியார் […]
இரண்டு இளைஞர்களை மோதிவிட்டு தப்பிச் சென்ற லொறியின் சாரதி கைது!

தலவாக்கலை நகர மையத்தில் பட்டாசுகள் கொளுத்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை மோதிவிட்டு தப்பிச் சென்ற பொலேரோ வகை லொறியின் சாரதி இன்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றது. தலவாக்கலை நகர மையத்தில் பட்டாசுகள் பற்றவைத்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது, நகர மையத்தின் வழியாக அதிக வேகத்தில் சென்ற லொறி மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட […]
இன்றிரவு பொழியவுள்ள விண்கல் மழை

இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழை இன்று (20) இரவு பொழியவுள்ளது. இந்த விண்கல் மழைக்கு ஓரியோனிட்ஸ் (orionids) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை காண முடியும் என வானியலாளர்கள் மேலும் கூறுகின்றனர். முன்னதாக இந்த விண்கல் பொழிவு “சதன் டெல்டா அக்வாரிஸ்” என்ற பெயரில் ஜுலை மாதம் 29 ஆம் திகதி தென்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இஷாரா செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்

இஷாரா செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு தலைமை நீதிமன்றத்தில் இன்று (20) அவர் முன்னிலைப்படுத்தியபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இஷாரா செவ்வந்தி வெளியிட்ட மேலும் முக்கிய தகவல்கள்

இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, கணேமுல்ல சஞ்சீவ கொலை குறித்த பல முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய நாட்டொன்றுக்கு செல்வது தான் தனது வாழ்நாள் கனவு என தெரிவித்துள்ளார். அந்த கனவை நனவாக்குவதாக கெஹெல்பத்தர பத்மே கூறியதன் காரணமாகவே தான் கொலை சம்பவத்திற்கு உதவியாகச் செயல்பட்டதாகவும் குறித்த சம்பவத்திற்கான தான் எந்த வகையான பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லையெனவும் இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். இஷாராவுடன் கைதுசெய்யப்பட்ட ஜே.கே. பாய் என்ற நபருக்கு ரூபா 6.5 இலட்சம் வழங்கி, போலி பயண […]