மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர் உயிரிழப்பு!

மொசாம்பிக் நாட்டில் படகு கவிழ்ந்து 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்று மொசாம்பிக். இங்கு ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மொசாம்பிக் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள பெய்ரா துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் காலை ஒரு படகு புறப்பட்டது. துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு ஆட்களை ஏற்றிச் செல்ல அந்த படகு சென்றது. செல்லும் வழியில் அந்தப் படகு கடலில் திடீரென கவிழ்ந்தது. இதில் இருந்த 9 பேரும் மூழ்கினர். இந்த விபத்தில் 3 […]
‘ரோஹித், விராட் உடனான பிணைப்பு எப்போதும் போல வலுவாக உள்ளது’ – ஷுப்மன் கில்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி உடனான பிணைப்பு எப்போதும் போல வலுவாகவே உள்ளது என இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். அவர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி உடன் 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் […]
உலகக் கோப்பை வில்வித்தை: வெண்கலம் வென்று ஜோதி சுரேகா சாதனை!

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் 8-வது சீசன் சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் தனி நபர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னாம், அமெரிக்காவின் அலெக்ஸிஸ் ரூயிஸுடன் மோதினார். இதில் ஜோதி சுரேகா 143-140 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான மெக்சிகோவின் ஆண்ட்ரியா பெசெராவை எதிர்கொண்டார் ஜோதி சுரேகா. இதில் ஜோதி சுரேகா […]
ரிஷாத் ஹோசைன் சுழலில் வீழ்ந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. மிர்பூரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்தேச அணி 49.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தவூஹித் ஹிர்டோய் 90 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், மஹிதுல் இஸ்லாம் அன்கோன் 76 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்களும் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் […]
சேம் கரண் அதிரடி வீண்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டி20 தொடரின் முதல் போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. ஆல்ரவுண்டரான சேம் கரண் 35 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் விளாசினார். […]
கால் இறுதியில் அனஹத் தோல்வி!

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் பிஎஸ்ஏ சாலஞ்சர்ஸ் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங், எகிப்தின் ஜனாஸ்வாஃபியுடன் மோதினார். இதில் உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள அனஹத் சிங் 4-11, 9-11, 11-6, 11-3, 5-11 என்ற செட்கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
தீபாவளி முன்னிட்டு முதல் பாடலை வெளியிடுகிறது “கருப்பு” படக்குழு!

ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் இன்னும் […]
ரஜினி படத்தை இயக்குவீர்களா? – மாரி செல்வராஜ் பதில்!

ரஜினி படத்தை இயக்கவுள்ளீர்களா என்ற கேள்விக்கு மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார். ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் இயக்குநர் மாரி செல்வராஜும் இருந்தார். ஆனால், அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். இதனிடையே பத்திரிகையாளர் சந்திப்பின் போது ரஜினியுடனான சந்திப்பு, ரஜினி படம் இயக்கம் குறித்து மாரி செல்வராஜிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மாரி செல்வராஜ், “நிறைய முறை ரஜினி சாரை சந்தித்திருக்கிறேன். என்னுடைய கதைகள், […]
திரைப்படமாக உருவாகும் ‘ஜுகாரி கிராஸ்’

பிரபலமான ‘ஜுகாரி கிராஸ்’ நாவல் அதே பெயரில் படமாக உருவாகிறது. அதில் ராஜ் பி.ஷெட்டி நாயகனாக நடிக்கவுள்ளார். சமீபமாக நாவல்களை மையமாக வைத்து படங்கள் உருவாகத் தொடங்கி இருக்கின்றன. அந்த வரிசையில் பிரபல எழுத்தாளர் பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் புகழ்பெற்ற நாவல் ‘ஜுகாரி கிராஸ்’ திரைப்படமாக உருவாகிறது. இதனை குருதத்த கனிகா இயக்கவுள்ளார். இதில் ராஜ் பி.ஷெட்டி நாயகனாக நடிக்கவுள்ளார். இதன் அறிமுக டீஸர் இணையத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. மொட்டையடித்த தலை, தெறிக்கும் ரத்தம் மற்றும் […]
ரூ.700 கோடி வசூலை கடந்தது ‘காந்தாரா: சாப்டர் 1’

உலகளவில் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் ரூ.700 கோடி வசூலைக் கடந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. இப்படம் வெளியான அன்று வசூல் குறைவாக இருந்தாலும், அடுத்டுத்த நாட்களில் வசூல் அதிகரிக்க தொடங்கியது. இதனால் படக்குழு உற்சாகமடைந்தது. தற்போது இப்படம் ரூ.700 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.68.5 கோடி வசூலை கடந்து பெரும் சாதனை புரிந்திருக்கிறது. இதனால் இப்படத்தின் விநியோகஸ்தர்கள் […]