மாகாணசபைத் தேர்தலில் குதிக்கும் முன்னாள் எம்.பிக்கள்!

அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் 30 இற்கு மேற்பட்ட முன்னாள் எம்.பிக்கள் போட்டியிடவுள்ளனர் என்று நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. தேசிய மக்கள் சக்தி அலையை சமாளித்து, தமது கட்சிகளுக்குரிய வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளும் நோக்கிலும், மக்கள் மத்தியில் தமக்குள்ள ஆதரவை நாடிபிடித்து பார்க்கும் வகையிலுமே முன்னாள் எம்.பிக்கள் இவ்வாறு களமிறங்கவுள்ளனர். நவீன் திஸாநாயக்க, உதய கம்மன்பில, ஹிருணிக்கா பிரேமசந்திர, முஷாரப், மருதபாண்டி ராமேஸ்வரன், வடிவேல் சுரேஷ், யோகேஸ்வரன் உட்பட மேலும் […]

திருமணமாகி சில மாதங்களே ஆன இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!

அலங்கரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துயர சம்பவம் நேற்று (17) புத்தளம் திலடியா பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் புத்தளம் நகரைச் சேர்ந்த 24 வயதான தண்டநாராயண நவோத் கிம்ஹான் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புத்தளம் திலாடிய பகுதியில் புத்தளத்தில் திறக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் காட்சியறை திறப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். பலூன்களை ஊதப் பயன்படுத்தப்படும் மின்சார அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கி அவர் […]

யாழில் அதிரடி காட்டிய பொலிஸார் ; ஒரே நாளில் 10 பேர் கைது!

யாழ்ப்பாணம்-சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியின் உத்தரவுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே போதைப் பொருள்களுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து கஞ்சா, போதைமாத்திரை, மாவா உள்ளிட்ட போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தை உலுக்கிய இளம் குடும்பப் பெண் படுகொலை ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

காரைநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் குலதீபா என்ற இளம் குடும்பப் பெண்ணின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் ஊர்க்காவற்றுறை நீதிமன்றத்தின் தடை உத்தரவு அறிக்கையில் குறிப்பப்பட்டுள்ளதாவது, கண்டன பேரணிக்கு தடை குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு ஒருசில நாட்களே ஆன நிலையில் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெறுவது புலன்விசாரணைக்கு பாதகமாக அமையும் என்பதோடு அப்பிரதேசத்தில் […]

யாழில். போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே 1 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழில். பட்டப்பகலில் சங்கிலி அறுத்த கொள்ளையர்கள்!

யாழ்ப்பாணத்தில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை பெண்ணொருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் , பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு , மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவம் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் […]

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படும்: இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதனால் மே 10-ம் தேதி இருதரப்பு மோதல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், கைபர் பக்துன்வா மாகாணம் அபோட்டாபாத் […]

ரஷியாவில் சோகம்: வெடிமருந்து தொழிற்சாலை தீப்பிடித்து 3 பெண்கள் பலி!

ரஷியாவின் தெற்கு பிராந்தியமான பாஷ்கோர் டோஸ்தானில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்படுகிறது. உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்கள், வெடிமருந்துகள் அங்கு பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட தீயால் அந்தப் பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக மாறியது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். […]

டிரம்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் வெடித்த போராட்டம் – வீதிகளில் இறங்கிய 70 லட்சம் மக்கள்!

“No kings” என்ற முழக்கத்துடன் அமெரிக்கா அதிபர் டொனல்டு டிரம்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. டிரம்ப் அரசின் குடியேற்றவாசிகளுக் எதிராக அடக்குமுறைகள், அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்படும் அதிகப்படியான பணிநீக்கங்கள், பொருளாதார கொள்கைகள் உள்ளிட்டவை அந்நாட்டில் அதிருப்தி அலையை ஏற்படுத்தி வருகிறது. சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் தொடர்ந்து போராட்டங்களை வழிநடத்தி வரும் பல இடதுசாரி சார்பு அமைப்புகளின் கூட்டணியே நோ கிங்ஸ் ஆகும். இதே கூட்டணி முன்பு ஜூன் மாதம் […]

உடனடி போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் சம்மதம் – கத்தார் அறிவிப்பு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர கத்தாரும் துருக்கியும் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட 48 மணி நேர போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பின் நேற்று முன் தினம் ஆப்கானிஸ்தானில் பாக்டிகா மாகாணத்தின் அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளும் […]