கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது!

அக்மீமன பகுதியில் வாடகை வீட்டில் கஞ்சா பயிரிட்டு வந்த பெலாரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வீட்டின் இரண்டு அறைகளில் அவர் கஞ்சா பயிரிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்காக அவர் கஞ்சா பயிரிட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த வீடு கராப்பிட்டிய மருத்துவமனையின் மருத்துவருக்கு சொந்தமானது என்றும், சந்தேக நபர் வீட்டை வாடகைக்கு எடுத்து அதற்காக மாத வாடகையாக ரூ.1.5 லட்சம் […]
எயார் சீனா விமானத்தில் தீ விபத்து – அவசரமாக தரையிறக்கம்!

சீனாவின் ஹாங்சோவிலிருந்து தென் கொரியாவின் சியோலுக்கு நேற்று (18) புறப்பட்ட எயார் சீனா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். இவ்விபத்து விமானத்தின் கைபைகள் வைக்கும் கேபினில் ஏற்பட்டுள்ளது. பயணி ஒருவரின் பையில் இருந்த லித்தியம் பேட்டரியால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உடனே விமானம், ஷாங்காயில் உள்ள புடாங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
மயில்வாகனம் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு இன்று (19) திகதி காந்தி பூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய நினைவுதின நிகழ்வின்போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருப்படத்திற்கு மலர்மாலை அணிவித்ததைத் தொடர்ந்து, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து மௌன […]
கெரவலப்பிட்டி பகுதியிலிருந்து 50 T-56 ரக தோட்டாக்கள் மீட்பு!

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ‘கம்பாஹா பாபா’ என்ற சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 50 T-56 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் விசாரிக்கப்படும் கம்பஹா பாபா நேற்று (18) பேலியகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கொண்டு வரப்பட்டார். விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின்படி, கந்தன-கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் உள்ள ஒரு தூணுக்கு அருகில் சுமார் 50 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்புடைய […]
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து!

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (19) அதிகாலை காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். விபத்தில் மின்சார சபையின் மின்கம்பங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. திருமண வீடொன்றுக்கு அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலைக்கு குறித்த காரில் இருவர் பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் […]
தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் – ரயில்வே ஊழியர்கள் சங்க அதிகாரிகள் தெரிவிப்பு!

அரசாங்கம் தமது கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர்ந்து வரும் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் என்று இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதால், பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என்று சங்கத்தின் செயலாளர் கே.டி.டி. பிரசாத் தெரிவித்தார். பணி வெற்றிடங்களுக்கு உரிய ரயில்வே அதிகாரிகளை நியமித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை ரயில்வே ஊழியர்கள் சங்க அதிகாரிகள் நேற்று (18) முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு […]
ரணிலுடன் பணியாற்றுவது இலகுவாக இருந்தது – முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி!

இலங்கையில் இருந்த ஜனாதிபதிகளில் எவருடனும் தனக்கு எந்த பிரச்சினைகளும் இருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரம் பற்றி அறிந்தவர் என்பதால் அவருடன் பணியாற்றுவது இலகுவாக இருந்தது என்று தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். நாட்டின் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்க்காணலில் இதுபற்று மேலும் கூறியிருந்த அவர், “இதன் போது தனது திருமண அனுபவம் பற்றி அவர் சுவாரஸ்யமாக கருத்து பகிர்ந்து கொண்ட போது , […]
சபாநாயகருக்கு பொறி வைப்பு: வருகிறது பிரேரணை!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் நாளை மறுதினம் (21) இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது. ஒக்டோபர் மாதத்துக்குரிய 2ஆவது வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாகின்றது. குறித்த வாரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் முக்கிய கூட்டங்களும் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வரைவு நகல் கட்சி தலைவர்களுக்கு அன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. அவர்களின் இணக்கப்பாட்டுக்கு பிறகு பிரேரணை இறுதிப்படுத்தப்படும். பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக […]
கூட்டு பயணம் குறித்து கட்சியே முடிவெடுக்கும்: சுமந்திரன் அறிவிப்பு!

” மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பது பற்றி ஆராய்வதற்காக தமிழ்த் தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். எனினும், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எனில் அதில் பங்கேற்பது குறித்து கட்சியே தீர்மானிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நீண்டகாலம் நடத்தப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வரும் மாகாண […]
தோடுகளை விற்ற செவ்வந்தி: கலைந்த ஐரோப்பா கனவு!

நேபாளத்தில் தங்கி இருந்த காலகட்டத்தில் தனக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதாகவும், கடைசியில் தனது தோடுகளைக்கூட விற்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். பொலிஸ் விசாரணையின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளாரென சிங்கள வார இதழொன்றில் வெளியாகியுள்ள கட்டுரையொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அளுத்கடை நீதிமன்றத்துக்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்குரிய ஒப்பந்தத்தை, அப்போது வெளிநாட்டில் பதுங்கி இருந்த பாதாள குழு உறுப்பினர் கெஹேல்பத்தர பத்மே என்பவரே செவ்வந்திக்கு வழங்கி இருந்தார். சம்பவத்துக்கு பிறகு செவ்வந்தியை […]