13வது திருத்தம் குறித்து பேசுவதை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவே பார்க்கிறோம்!

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்றுவிட்டு, எம்மோடு செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் இப்போது 13 ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டங்களை நடாத்துவதை தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகவே நாம் பார்க்கிறோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நீண்டகாலம் நடாத்தப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவரும் மாகாணசபைத் தேர்தல்கள் விரைவில் நடாத்தப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கிலும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் […]
திருகோணமலை – மடத்தடி சந்தியில் விபத்து : ஒருவர் காயம்!

திருகோணமலை – மடத்தடி சந்தியில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது. மடத்தடி சுற்றுவட்டத்தின் ஊடாக திருஞானசம்பந்தர் வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள்மீது பிரதான வீதியின் வழியாக மடத்தடி சந்தியை நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மோதியதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற […]
வெளிவிவகார அமைச்சர் விஜித சவூதிக்கு விஜயம்!

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை சவூதி அரேபியாவுக்கு செல்ல உள்ளார். ரியாத் நகரில் நடைபெறவுள்ள நான்காவது அழகியல் மற்றும் மருத்துவ அறிவியல் அகாடமி மாநாடு மற்றும் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காகவே இந்த விஜயம் முன்னெடுக்கப்படுகின்றது. அமைச்சர் விஜித ஹேரத், இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதுடன், சவூதி அரேபிய அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களையும், அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்புகள் மூலம், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, புதிய […]
இலங்கையில் கட்சி அரசியல் மறைகிறது – ரணில் விக்கிரமசிங்க!

இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றமடைந்து வருவதுடன், இதுவரைக்காலமும் காணப்பட்ட கட்சி அரசியல் மறைந்து தனிநபர்களின் ஆளுமை மற்றும் செல்வாக்கைச் சுற்றியே அரசியல் சூழல் மையங்கொள்வதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகிலும் இந்த மாற்றம் நிகழ்வதாகவும் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் போக்கு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான வருண ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையடல் […]
சங்கிலியன் பூங்காவை அழிக்க எத்தனிக்கும் நல்லூர் பிரதேச செயலகம்!

நல்லூர் சங்கிலியன் பூங்காவை இல்லாமல் அழிக்கும் நோக்கில், பூங்கா அமைந்துள்ள காணியை நல்லூர் பிரதேச செயலகம் தனது தேவைக்கு கையகப்படுத்த எத்தனிப்பதாகவும் , அதற்கு பின்னால் மறை கரங்கள் உள்ளன என தான் சந்தேகிப்பதாகவும் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் , வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கு கடிதம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் , யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் கிழக்குப் புறமாக அமையப் பெற்றதே மேற்குறிப்பிட்ட “நல்லூர் சங்கிலியன் பூங்கா”. 1989 வரை செம்மணி […]
தையிட்டி விகாரை தேவ நம்பிய தீசன் காலத்திற்குரியது – பௌத்த காங்கிரஸ் சோ. சுகிர்தனுக்கு கடிதம்!

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தேவநம்பிய தீசன் காலத்து பௌத்த நிலம் அதனை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்து தர வேண்டும் என கோரி இலங்கை பௌத்த காங்கிரஸ் , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக எமது பகுதி இருந்த வேளை எமது உறுதி காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி அதனுள் விகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன் , விகாரையை சுற்றியுள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும் , […]
வடக்கில் மழை தொடரும்!

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் உள்ளன. தற்போது குமரிக் கடலுக்கு அண்மித்ததாக நிலவுகின்ற காற்றுச் சுழற்சியின் விளைவாக நாட்டின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியான மழை கிடைத்து வருகின்றது. அத்துடன் எதிர்வரும் 23ஆம் திகதி […]
வடக்கிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் தீபாவளியன்று மூடுவதற்கான தீர்மானம்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தீபாவளியன்று (20) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தால் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அமைப்புக்களால், தீபாவளியன்று மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒளியின் திருநாளாகிய தீபாவளி, இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் நல்வழியைக் குறிக்கின்றது!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம்பிக்கையும் சந்தோஷமும் ஒளி வீசட்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தீபாவளியை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலையே அவ்வாறு குறிப்பிட்டப்பட்டுள்ளது. குறித்த வாழ்த்து செய்தியில், ஒளியின் திருநாளாகிய தீபாவளி, இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் நல்வழியைக் குறிக்கின்றது. தீமையை வீழ்த்தி நன்மை வெற்றிபெறும் நினைவூட்டலாகவும், அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி நிலவும் சமூகத்தை உருவாக்கும் ஊக்கமாகவும் இந்தப் பண்டிகை விளங்குகிறது. நம் மனத்திலிருந்தும் […]
யாழில். மாணவனுக்கு அனுமதி வழங்க மறுத்த பாடசாலை – வீட்டில் நிற்கும் மாணவன் – விசாரணைகளை ஆரம்பித்ததுள்ள மனித உரிமை ஆணைக்குழு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கு அனுமதி வழங்கிய பின்னர் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அப்பகுதியை சேர்ந்த மாணவன் தரம் எட்டில் கல்வி பயில்வதற்கு விண்ணப்பித்துள்ளான். பாடசாலை,மாணவனுக்கு அனுமதி வழங்கிய நிலையில் வலயக் கல்வி பணிமனையினால் பெயர் வெளியிடப்பட்ட பின்னர் குறித்த மாணவனுக்கு பாடசாலை அனுமதியை பின்னர் மறுத்துள்ளது. இதன் காரணமாக […]