3ஆவது இளையோர் ஆசிய விளையாட்டு விழா பெண்கள் கபடி போட்டியில் இலங்கைக்கு ஏமாற்றம்!

ஆசிய விளையாட்டுக் களத்தில் மிகச் சிறந்த நட்சத்திரங்களுக்கு அத்திவாரமாக அமைகின்ற 3ஆவது இளையோர் ஆசிய விளையாட்டு விழா எதிர்வரும் புதன்கிழமை 22ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. இவ் விளையாட்டு விழா புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்ற போதிலும் கபடி போட்டியின் லீக் சுற்று இன்று ஞாயிற்றுக்கிழமை (19) ஆரம்பமானது. ஈசா விளையாட்டுத்துறை நகர டி மண்டபத்தில் இன்று பிற்பகல் 12.45 மணிக்கு ஆரம்பமான பெண்களுக்கான (ஏ குழு) முதலாவது போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்ட இலங்கை 46 – 26 […]

அமெரிக்காவைத் தாக்குவதற்கு இது நேரமில்லை!

துறை சார்ந்த வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து Washington உடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி Trump இன் நிர்வாகத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடியாவிட்டால், புதிய பழிவாங்கும் வர்த்தக நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவை தாக்குவதற்கு Ottawa விற்கு விடுக்கப்பட்ட அழைப்புகளை பிரதமர் Mark Carney நிராகரிக்கிறார். திருப்பி அடிக்க வேண்டிய நேரங்கள் உண்டு, பேச வேண்டிய நேரங்களும் உண்டு, இப்போது பேச வேண்டிய நேரம் இது, என்று வியாழக்கிழமை Toronto வில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் […]

குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய பிணைச் சீர்திருத்த மசோதா அறிமுகம்!

வன்முறை மற்றும் மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை ஒடுக்கும் நோக்கில், அடுத்த வாரம் கனேடிய அரசாங்கம் ஒரு புதிய பிணைச்சீர்திருத்த மசோதாவை முன்வைக்கும் என்று பிரதமர் Mark Carney வியாழக்கிழமை அறிவித்தார். வாகனத் திருட்டுகள், வீடு புகுந்து திருடுதல், மனித கடத்தல்கள், பாலியல் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் போன்ற கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கனேடிய சமூகங்களுக்கு வெளியே வைத்திருக்கும் முயற்சியாக வரவிருக்கும் புதிய சட்டம் அமையும் என்று பிரதமர் மேலும் கூறினார். தற்போது, […]

நவம்பர் 1 ஆந் திகதி முதல், நடுத்தர மற்றும் கனரக ஊர்திகளுக்கு 25% வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

Canada-U.S.-Mexico ஒப்பந்தத்தின் கீழ் வர்த்தகம் செய்யப்படும் வாகனங்களுக்கான சிறிய வரி விலக்குடன், November 1 தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் நடுத்தர மற்றும் கனரக பார ஊர்திகளுக்கு 25 சதவீத வரியை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன்று கையெழுத்திட்டார். CUSMA என அழைக்கப்படும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு இணங்கும் பாரஊர்திகள் அவற்றின் அமெரிக்க உற்பத்தி இல்லாத பாகங்களுக்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும். வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் உள்ளடங்கும் ஆட்டோ பாகங்களுக்கு […]

கனேடிய பிரதமர் மார்க் கார்னி 9 நாள் பயணமாக ஆசியா விஜயம்!

இந்த மாத இறுதியில் ஒன்பது நாட்கள் சுற்றுப் பயணமாக Malaysia, Singapore மற்றும் South Korea ஆகிய நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் Mark Carney இரண்டு சர்வதேச உச்சிமாநாடுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். Kuala Lumpur இல் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் Carney கலந்து கொள்ள உள்ளார், அங்கு அவர் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மலேசிய பிரதமரை சந்திக்க உள்ளார். அந்த உச்சிமாநாட்டிற்குப் பின்னர் வர்த்தகத் தடைகளை நீக்குவது மற்றும் உலக மூலதனத்தை […]

ராகமவில் பஸ் விபத்து ; 09 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற பஸ்  விபத்தில் 09 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சபுகஸ்கந்தவில் உள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த சாரணர்கள் குழு படுவத்த மத்திய கல்லூரியில் நடைபெற்ற ஜம்போரியில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் வீதியை விட்டு விலகி வேக கட்டுப்பாட்டு தடுப்பில் மோதி கவிழ்ந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், பஸ்ஸின் பிரேக்கிங் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு […]

நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துறையில் நாம் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்!

பொலன்னறுவை மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டலுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாடு, குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்யும் விசேட கலந்துரையாடல் கடந்த 17ஆம் திகதி பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இங்கு, சிறுவர்கள் மற்றும் பெண்கள் சமூகம் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க […]

சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஆதாரங்களைத் திரட்டும் அதிகாரிகளிடம் கையளிப்பு!

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும் உள்நாட்டு நீதிமன்றத்திலோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திலோ அல்லது ஏதேனும் அமைப்புக்கள் முன்னிலையிலோ சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தி மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவினால் சிறைச்சாலையில் இருந்து அவரது சட்டத்தரணி ஊடாக வழங்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இயங்கிவரும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடம் கடந்த வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. பாடசாலை […]

நுவரெலியாவில் பேஸ்புக் களியாட்டம் நிகழ்வு ; போதைப்பொருளுடன் 30 பேர் கைது!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – கிரகரி வாவிக்கு அருகில் நான்காவது வாகனத் தரிப்பிடத்தில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருட்களுடன்30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பேஸ்புக் களியாட்டம் நிகழ்வு சனிக்கிழமை (18) காலை ஆரம்பிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை வரையில் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் நுவரெலியா பிரதான நகரிக்குள் நுழையும் அனைத்து பிரதான வீதிகளையும் மறித்து சோதனைச் சாவடிகள் அமைத்து மோப்ப […]

சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர் கடன் நிதி!

நாட்டின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கடன் நிதியானது சுகாதார சேவை வழங்கலின் செயற்திறனை மேம்படுத்துவதற்கு ஏதுவான தேசிய செயற்திட்ட உருவாக்கம் மற்றும் தரமான சுகாதார சேவையில் சகலரும் உள்வாங்கப்படுவதை உறுதிப்படுத்தல் என்பவற்றுக்குப் பயன்படுத்தப்படும் என நிதியமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு தொற்றுநோய்ப்பரவல் தடுப்பு, முற்கூட்டிய தயார்ப்படுத்தல் மற்றும் தொற்றுநோய்ப்பரவலின் பின்னரான துலங்கல் என்பவற்றுக்கான நடவடிக்கைகளும் இக்கடன் நிதியின் ஊடாக […]