சொந்த நாட்டை விமர்சிக்கும் ராகுலுக்கு பிரதமராகும் புத்திசாலித்தனம் இல்லை: அமெரிக்க பாடகி மேரி மில்பென் கடும் விமர்சனம்!
‘சொந்த நாட்டை பற்றி தவறாக பேசும் ராகுல் காந்திக்கு, பிரதமராகும் புத்திசாலித்தனம் இல்லை’’ என்று பிரபல அமெரிக்க பாடகியும் நடிகையுமான மேரி மில்பென் கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில், ‘‘அமெரிக்க அதிபர் ட்ரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்’’ என்று விமர்சித்தார். இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ பாடகியும் நடிகையுமான மேரி மில்பென் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ராகுல் காந்தி நீங்கள் சொல்வது தவறு. அதிபர் ட்ரம்பை […]
உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண தயார்: அதிபர் ட்ரம்ப்புடன் புதின் திடீர் ஆலோசனை!
ரஷ்யா – உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டார். இதனால் அதிபர் ட்ரம்ப்பும் – ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்து பேசினர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இது அதிபர் ட்ரம்ப்புக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால் உக்ரைனுக்கு மீண்டும் ஆயுதம் வழங்க அமெரிக்கா முடிவு செய்தது. தொலைதூரம் சென்றும் தாக்கும் அமெரிக்காவின் டொம ஹாக் ஏவுகணையை, உக்ரைனுக்கு […]
மகளிர் உலகக் கோப்பை: இலங்கையை எளிதில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், கொழும்புவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சமாரி அடப்பட்டு பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி […]
3 கிரிக்கெட் வீரர்கள் பலி: பாகிஸ்தானுடனான முத்தரப்பு தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விலகல்!
தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர். இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் கூறும் போது, பாகிஸ்தானின் […]
ஆஸ்திரேலிய தொடரில் ரன் குவிக்காவிட்டால் ரோகித், கோலி நீக்கப்படுவார்களா? – அகர்கர் விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘ரோகித் சர்மா, விராட் கோலியை ஒவ்வொரு போட்டியிலும் மதிப்பிடுவது சரியானதாக இருக்காது. அவர்கள் விளையாட ஆரம்பித்தவுடன் அவர்களது ஆட்டம் குறித்து மதிப்பீடு செய்வோம். ஆனால் அது அணியில் இடத்தை உறுதி செய்வதற்கான தகுதி தேர்வாக இருக்காது ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவர்கள் ரன் குவிக்காவிட்டால் நீக்கப்படுவார்கள் என்றோ, அதே நேரத்தில் ஆஸ்திரேலிய தொடரில் 3 சதங்கள் அடித்தால் 2027-ம் ஆண்டு உலகக் […]
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் மாயா, சஹஜாவுக்கு வைல்டு கார்டு!
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் வரும் 27–ம் தேதி முதல் நவம்பர் 2–ம் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த சீசனின் வெற்றியாளரான செக் குடியரசின் 20 வயதான லிண்டா ஃப்ருஹ்விர்டோவாவுக்கு போட்டித் தரவரிசையில் முதலிடமும், இரண்டு குழந்தைகளின் தாயான ஜெர்மனியின் தாட்ஜானா மரியாவுக்கு 2-வது இடமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2024-ம் ஆண்டு விம்பிள்டன் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியவரும், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும், உலகத் தரவரிசையில் 69–வது […]
பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ்: கால் இறுதியில் அனஹத் சிங்!
அமெரிக்காவின் போஸ்டன் நகரில் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் சார்லோட் சேஸை எதிர்த்து விளையாடினார். இதில் அனஹத் சிங் 11-4, 11-6, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதியில் கால்பதித்தார். hindutamil
விஜய் ஆண்டனியை இயக்குகிறார் மாறன்!
அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணை நம்பாதே’, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘பிளாக்மெயில்’ ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கியவர் மு.மாறன். அவர் அடுத்து இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க இருக்கிறது. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கிறது. இப்போது சசி இயக்கும் ‘நூறு சாமி’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. hindutamil
‘பிரேமலு 2’ – பற்றி எதுவும் தெரியாது மமிதா பைஜு தகவல்
துல்கர் சல்மான் தயாரிப்பில் மலையாளத்தில் உருவான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டொம்னிக் அருண் இயக்கிய இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. வசூலில் சாதனை படைத்துள்ள இதன் அடுத்த பாகம் விரைவில் உருவாகிறது. அதில் டொவினோ தாமஸ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இதில் மமிதா பைஜு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “அதில் நடிக்க இருக்கிறேனா […]
கூகுளுடன் இணைந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்: ஏஐ தொழில்நுட்பத்தில் இசைக்குழு!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கூகுள் க்ளவுட் உடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இசைக் குழுவை அமைக்க உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், ‘சீக்ரெட் மவுண்டேன்’ என்ற மெய்நிகர் (virtual) இசைக்குழுவை 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தினார். இக்குழுவில் வெவ்வேறு இனங்களையும் கலாச்சாரங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் ஆறு மெய்நிகர் கலைஞர்கள் இருக்கின்றனர். இவர்கள் முற்றிலும் ஏஐ-யால் உருவாக்கப் பட்ட கதாபாத்திரங்கள். இவர்கள் மூலம் அடுத்ததலைமுறைக்கான பொழுதுபோக்கு நிறைந்த இசை ஆல்பத்தை உருவாக்கும் திட்டத்துக்காக, கூகுள் க்ளவுட் உடன் ஏ.ஆ.ரஹ்மான் இணைந்துள்ளார். […]