ஒரே நாளில் 20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளது. அதன்படி, இன்று (18) காலை கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில் ’22 கரட்’ ஒரு பவுண் தங்கத்தின் விலை 360,800 ரூபாவாக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 379,200 ரூபாவாக காணப்பட்டது. இதேவேளை, நேற்று (17) 410,000 ரூபாவாக இருந்த ’24 கரட்’ ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 390,000 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

மாகாணசபைத் தேர்தல் வேண்டும்: முன்னாள் முதல்வர் வலியுறுத்து – வரதராஜப்பெருமாள்!

”தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள அனைத்து கட்சிகளும், இலங்கையில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும், மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” – இவ்வாறு இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “மாகாண சபைத் தேத்தல் தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளோடு நான் இணைந்து அண்மையில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தேன். மாகாண சபைகளுக்கான […]

நேபாள ஊடகங்களிலும் பேசுபொருளான செவ்வந்தி!

செவ்வந்தியும் ஏனைய பிரதான சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை தொடர்பாக நேபாளம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளம் போஸ்ட் என்ற ஊடகம், இனட்ர்போல் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர்களை கைது செய்தாக செய்தி வெளியிட்டுள்ளது. நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அனுமதி மற்றும் ஒத்துழைப்புடன், நேபாள  பொலிஸார் காத்மண்டுவின் புநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பிரதான குற்றவாளிகளை கைது செய்ததாகவும், விசாரணையின் பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்ள […]

சங்கு உடன்பாட்டிலிருந்து விலகுகிறது – கஜேந்திரகுமார்!

“ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்று விட்டு, செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் இப்போது 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.” இவ்வாறு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது கூறினார். இந்த விடயம் தொடர்பிலும், மாகாண சபைத் தேர்தலைத் தமிழ்க் […]

செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினர் எனக் கூறப்படும் நால்வர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குகின்றார். இவரின் அத்தையும் சிக்கியுள்ளார். அத்தையின் வீட்டிலேயே அவர் செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே இக்கைது இடம்பெற்றுள்ளது. செவ்வந்தி தலைமறைவாகி இருந்த இடங்கள் மற்றும் சென்ற இடங்களுக்கு அவரை நேரில் அழைத்துச்சென்று விசாரணைகள் […]

நான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினியை தான் காதலித்தேன்!

“நான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினி என்பவரைத் தான் காதலித்தேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிகையில், “அது பொலிஸாரின் பொறுப்பு. ஆனால் பாதாள உலகில் தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும் பொலிஸார் கவனிக்க வேண்டும். ஒரு குழு, திருடர்களுக்காக பதினேழு கடவுச்சீட்டுக்களை உருவாக்கி நாட்டை விட்டு வெளியேற்றியதாக பொலிஸாருக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் கூறினார். […]

வெள்ளை மாளிகை வந்த உக்ரைன் அதிபரை உற்சாகமாக வரவேற்ற அதிபர் டிரம்ப்!

உக்ரைன் – ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆகஸ்டில் அலாஸ்காவில் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையே, அதிபர் டிரம்ப் சமூக ஊடக பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷிய அதிபர் புதினுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினேன். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் […]

கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு: 3 பேர் பலி!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் ரைலா ஒடிங்கா (80). உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்திருந்தார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்தது உறுதியானது. அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் […]

பாலியல் புகார்: அரச பட்டங்களை துறப்பதாக பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ அறிவிப்பு!

அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூவும் மீது வர்ஜீனியா கியூஃப்ரே (41) என்ற பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தியதாகவும், இளவரசர் ஆண்ட்ரூவும் 17 வயதில் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் வர்ஜீனியா குற்றம் சாட்டினார். இளவரசர் ஆண்ட்ரூவுடன் உடலுறவு கொள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனக்கு […]

மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் நாடுகடத்தல் தொடர்பான கோரிக்கையை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் மெகுல் சோக்ஸியை கைது செய்தது பெல்ஜியம். நிதி மோசடி தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டி […]