அரச இயந்திரத்தில் தொழில்முறை குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது!

ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை, திறன், அந்த தொழிலுடன்பிணைந் ஒழுக்கம் மற்றும் பொறுப்பு என்பவற்றுடன் கூடிய அரச சேவை நாட்டிற்கு தேவை. பெருமைமிக்க மற்றும் கௌரவமான வரலாற்றைக் கொண்ட இலங்கை விமானப்படை, அந்த தொழில்முறையை தொடர்ந்து பாதுகாத்து வரும் ஒரு படையினர் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை விமானப்படைக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கல் மற்றும் கெடெட் அதிகாரிகளை விமானப்படை அதிகாரிகளாக நியமிப்பது தொடர்பில் இன்று (18) காலை சீனக்குடா விமானப் படைக் கல்விப்பீடத்தில் நடைபெற்ற […]
கே.பியை கைதுசெய்தபோது படம் காட்டவில்லை: செவ்வந்தி குறித்து விமல் சீற்றம்!

வெளிநாட்டில் வைத்து கே.பியை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவந்தபோது ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படவில்லை. எனினும், செவ்வந்தி விடயத்தில் அவ்வாறு நடப்பது தவறான அணுகு முறையாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ச தெரிவித்தார். ‘ வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்படும் குற்றவாளி விமானத்தில் இறங்குவது முதல் எல்லா தகவல்களும் மிகவும் சுவாரஷ்யமாக ஊடகங்களில் வெளியாகின்றன. ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள், இதைவிடவும் பயங்கரமான குற்றவாளிகளை வெளிநாட்டில் கைது செய்து […]
செவ்வந்தி மண்ணுக்குள் புதைத்த கையடக்க தொலைபேசி மீட்பு: மேலும் பல தகவல்கள் அம்பலம்!

பாதாள குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்குரிய திட்டமிடலுக்கு இஷாரா செவ்வந்தி பயன்படுத்தினார் எனக் கூறப்படும் கையடக்க தொலைபேசி சிக்கியுள்ளது. கம்பஹா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது. எனவே, அதனை ஆய்வு செய்த பின்னர் மேலும் பல முக்கிய தகவல்கள் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இஷாரா செல்வந்தி, ஜே.கே. பாய் உள்ளிட்ட தரப்புகளிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பிரகாரம் தேடுதல் வேட்டைகளும், கைதுகளும் இடம்பெற்றுவருகின்றன. நேற்றைய தினமும் தேடுதல் வேட்டை அரங்கேறியது. இதற்கமைய இஷாரா செவ்வந்தி […]
யாழில். தீபாவளி இலக்கிய கலந்துரையாடல்!

“தீபலோக” தீபாவளி இலக்கிய கலந்துரையாடல், யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவனந்தராசா , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோரும், வடக்கு மற்றும் தெற்கு கலைஞர்கள் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றது. jaffnazone
யாழில். கேகாலையை சேர்ந்த இளைஞன் கைக்குண்டுடன் கைது!

யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கேகாலையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யட்டியந்தோட்டை, அலகொலவத்தை, பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை , முகமூடிகள் அணிந்தவாறு நால்வர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று நுழைந்து வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து விட்டு , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து தப்பி […]
இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற இலங்கை தயார்- பிரதமர் ஹரிணி!

இலங்கையில் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நல்ல சமூகத்தையும், தொலைநோக்குடைய ஜனநாயகத்தையும் கட்டியெழுப்புதல் மற்றும் சுபீட்சமான இலங்கைக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2025 ஒக்டோபர் 17ஆம் திகதி புதுடில்லியில் நடைபெற்ற NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். “நிச்சயமற்ற காலங்களில் மாற்றத்தை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் இந்த சிறப்புரை […]
தில்ஷானுடன் நெருக்கமாக பழகி கொலைச் செய்யத் தூண்டினேன் – செவ்வந்தி வாக்குமூலம்!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பலவகையான திடிக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது முன்னாள் காதலரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவரின் மூலம் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரைத் தான் சந்தித்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். ‘கெஹெல்பத்தர பத்மே’ தான் தனக்கு கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்கவை அறிமுகப்படுத்தியதாகவும் “எப்படியாவது அவனை வைத்து வேலையை முடித்துக்கொள்” என்றும் தன்னிடம் கூறியதாகவும் […]
பாடப்புத்தகங்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது. இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும். இந்த சுய கற்றல் கையேடுகள் தற்போது அச்சிடப்படுகிறது. இதனையடுத்து, குறித்த தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை பைகளின் எடையும் குறைக்கப்படும். புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதி கல்வியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சூர்யா, சிவகார்த்திகேயனை முந்தினார் பிரதீப் ரங்கநாதன்!

தமிழ் சினிமாவில் யூத் சென்சேஷனாக உருவெடுத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரதீப்புக்கு முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றி கிடைத்தது. அப்படத்தின் மூலம் இதுவரை எந்த தமிழ் நடிகரும் செய்யாத சாதனையை படைத்திருந்தார் பிரதீப். அது என்னவென்றால், முதல் படத்திலேயே 100 கோடி வசூல் அள்ளிய முதல் தமிழ் ஹீரோ என்கிற பெருமையை பெற்றார் பிரதீப். இந்த சாதனையை இதுவரை எந்த நடிகரும் முறியடிக்கவில்லை. லவ் டுடே வெற்றிக்கு பின்னர் அஸ்வத் […]
தீபாவளியன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு!

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில், மது வரித் திணைக்களத்தால் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீபாவளி தினத்தன்று மதுபான சாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அமைப்புக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக […]