கனடா, அமெரிக்கா விமான நிலையங்களை ஹேக் செய்த மர்ம நபர்கள்; டிரம்புக்கு எதிராகவும் செய்தி!

கனடா மற்றும் அமெரிக்கா விமான நிலையங்களின் பொது அறிவிப்பு பலகைகளை நேற்ரு (17) ஹேக் செய்த மர்ம நபர்கள், ஹமாஸூக்கு ஆதரவாகவும், அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டதால் பரபரப்பு நிலவியது. இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்த போர் , கடந்த 10ம் திகதி முதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் பங்கு அளப்பரியது. இந்தப் போர் நிறுத்தத்திற்கு உடன்பட மறுத்த ஹமாஸை, அமெரிக்க […]

திருமலைக்கு ஜனாதிபதி விஜயம் ; முத்து நகர் ,கிண்ணியா வான் எல விவசாயிகள் போராட்டம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திருகோணமலையில் உள்ள சீனக் குடா விமான நிலையத்தில் சனிக்கிழமை (18) நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்ததையடுத்து திருகோணமலை முத்து நகர் விவசாயிகள், கிண்ணியா வான் எல விவசாயிகள் இணைந்து நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக 32 ஆவது நாளாகவும் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட முத்து நகர் விவசாயிகளும் ஜனாதிபதியை சந்தித்து தங்களது விவசாய நிலங்களுக்கான தீர்வை முன்வைக்க கோரி […]

யாழில் தொல்பொருள் இடங்களை பார்வையிட்ட புத்த சாசன அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களை ,புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் , நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை , நல்லூர் மந்திரிமனை, யாழ்ப்பாணம் நூதன சாலை, பருத்தித்துறை தெருமூடி மடம் மற்றும் பருத்தித்துறை வெளிச்சவீடு என்பனவற்றை  பார்வையிடப்பட்டதோடு அவற்றின் அபிவிருத்திக்குச் சவாலாக உள்ள காணி உரிமம், கட்டுமானம் மற்றும் சட்டம் சார் விடயங்கள் தொடர்பிலும் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் […]

பொலன்னறுவை மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் நல்லிணக்க விஜயம்!

சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான  நல்லிணக்க களவிஜயமாக,  பொலன்னறுவை மாவட்ட செயலர் சுஜந்த ஏக்கநாயக்க  மற்றும் சமூக சேவைகள்  உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களை கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக செயலர் க.சிவகரன் , திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் , உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்சினி ஆகியோர் வரவேற்றார்கள். அவர்களின்  களவிஜயத்தின் ஞாபகார்த்தமாக யாழ். மாவட்ட […]

யாழில்.வாளுடன் உலாவும் இளைஞன் – கைது செய்ய முடியாது திணறும் பொலிஸ்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வாளுடன் நடமாடும் இளைஞன் வீதியில் செல்வோர் மீது தாக்குதல் நடாத்துவதுடன், வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்தும் தாக்குதல்களை மேற்கொள்வதனால் , அக்கிராமத்தில் இருந்து 06 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் குறித்த இளைஞனை கைது செய்வதற்காக மருதங்கேணி பொலிஸார் இன்றைய தினம் சனிக்கிழமை இராணுவம் மற்றும் பொலிஸ் அதிரடி படையினரின் துணையுடன் விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போதிலும் இளைஞனை கைது செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குடத்தனை கிழக்கு , […]

2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்வி சீர்திருத்தம் – தீவக கல்வி வலயத்தின் ஆசிரியருக்கு விசேட செயலமர்வு!

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படவுள்ள பாடத் திட்டங்களின் வழிகாட்டல் பொறிமுறை தொடர்பாக, ஆசிரியர்களுக்கான செயலமர்வின் கள ஆய்வொன்று இன்றையதினம் சனிக்கிழமை தீவக கல்வி வலயத்தால் முன்னெடுக்கப்பட்டது. உலகச் சுற்றோட்டத்தின் தேவைக்கேற்ப நவீன கல்வி முறையை எமது மாணவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டதற்கு இணங்க,  2026 ஆம் ஆண்டு முதல் தரம் ஒன்று மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும் பாடத் திட்டத்தின்கேற்ப தீவக கல்வி வலையத்தின் விஞ்ஞானம் […]

பாக் – ஆப்கான் மோதலை நிறுத்துவது எளிதானது!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதலை தீர்ப்பது எளிது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட 7 போரை நிறுத்திவிட்டேன் என கூறி வந்த டிரம்ப், காசாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், 8 போரை நிறுத்திவிட்டேன் என தம்பட்டம் அடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, அவர் ஒரு பக்கம், ஒன்பதாவதாக உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் கூறிவருகிறார். தற்போது அவரது கவனம் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் மோதல் பக்கம் திரும்பி இருக்கிறது. கடந்த ஒரு […]

அடுத்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமரே உலக தலைவர்: ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கருத்து!

அடுத்த 4 தசாப்தங்களுக்கு பிறகு இந்​திய பிரதமரே உலகத்​தின் தலை​வ​ராக செயல்​படு​வார் என்று ஆஸ்​திரேலிய முன்​னாள் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற தொலைக்​காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” கடந்த 2022-ம் ஆண்டு இந்​தி​யா, ஆஸ்​திரேலியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. அண்​மை​யில் இந்​தி​யா, பிரிட்​டன் இடையே இதே ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. பல்​வேறு உலக நாடு​கள் சீனா​விடம் இருந்து விலகி இந்​தி​யா​வுடன் கைகோத்து வரு​கின்​றன. உலகத்தை […]

அயோத்தியில் முதல் ராமாயண மெழுகு சிலை அருங்காட்சியகம்!

உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலின் பிரம்மாண்டமான கட்டுமானத்திற்கு பிறகு ராமாயண புராணத்தின் கருப்பொருளில் அமைக்கப்பட்ட உலகின் முதல் மெழுகு அருங்காட்சியகம் இங்கு அமைய உள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்களின் பார்வைக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கிறார். இந்த மெழுகு சிலை ராமாயண அருங்காட்சியகம், 9,850 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இதற்காக ரூ.6 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், பார்வையாளர்களை ராமாயணம் […]

சஜித்தின் தலை குறிவைப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் மாற்றம் வரப்போவதல்லை. எனினும், கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெற்று, வியூக மாற்றம் இடம்பெறும் என்று அக்கட்சியின் உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். இரு ஜனாதிபதி தேர்தல்கள் உட்பட நான்கு தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி தோல்வியை சந்தித்துள்ளதால், தலைமைப்பதவியில் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை சிலர் முன்வைத்துவரும் நிலையிலேயே, துஷார இந்துனில் மேற்கண்டவாறு கூறினார். மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிவருகின்றது. எந்த முறைமையில் தேர்தல் நடைபெறும் என்பது தொடர்பான […]