பொன்னி சம்பா அரிசி இறக்குமதிக்கான வர்த்தமானி வௌியீடு!

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசி (GR 11) இறக்குமதிக்கான விசேட வர்த்தமானியை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் கடந்த 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி இறக்குமதியாளர் ஒருவருக்கு அதிகபட்சம் 52 மெற்றிக் டன் அரிசியே இறக்குமதி செய்ய முடியும். அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியை எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கை […]

இஷாரா செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

இஷாரா செவ்வந்தி மற்றும் 2 சந்தேக நபர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து – விமான சேவைகள் இரத்து!

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தால் விமான நிலையத்தில் விமான சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. டாக்கா விமான நிலையம் வரவிருந்த விமானங்கள் மாற்று நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும், டாக்காவில் இருந்து புறப்படவிருந்த விமானங்களும் இரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். […]

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் 18 பேர் கைது!

விடுமுறைக்காக பல்வேறு போதைப்பொருட்களுடன் நுவரெலியாவிற்கு வந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று (18) கைதுசெய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் தலைமை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் (18) நடைபெறவிருந்த விருந்துக்கு பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு குழு கைதுசெய்யப்பட்டவர்களில் அடங்குவதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் தலைமை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெமட்டகொட, கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட இலங்கையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், 18-28 வயதுக்குட்பட்டவர்கள், மேலும் நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட குஷ், […]

முன்னாள் சபாநாயகருக்காக அதிகளவு உணவுச்செலவு – கணக்காய்வில் வெளியான தகவல்!

முன்னாள் சபாநாயகர் ஒருவருக்கு அவரது பதவிக் காலத்தில் உணவுக்காக மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. பாராளுமன்றத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட முழுமையான கணக்காய்வின் அறிக்கை, பதில் கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவினால் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் பணிப்புரைக்கமையவே இந்த விசேட கணக்காய்வு விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கணக்காய்வு அறிக்கையில் பாராளுமன்றத்தின் பல்வேறு துறைகளிலும் இடம்பெற்றதாகக் […]

பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – தாலிபான்கள் எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தாலிபான் அமைப்பு, பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்தாக்குதலை பாகிஸ்தான் இராணுவம் நடத்தியது. இதற்கிடையே தெக்ரிக்-இ-தாலிபான் அமைப்பினரை குறிவைத்து ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் வான்வழித்தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கம், பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, ராக்கெட் குண்டுகளை வீசினார்கள். இதையடுத்து இரு நாட்டு ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் […]

போதை ஒழிப்பு சமருக்கு கடற்றொழிலாளர்களுக்கு பங்களிப்பு வழங்க வேண்டும்!

இலங்கைக்கு கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, இந்த போதைப்பொருள் மாபியாவுக்கும் முடிவு கட்டப்பட்டு வருகின்றது. இதற்குரிய நடவடிக்கையின் போது கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலட்டை சங்க பிரதிநிதிகளுடனான கூட்டம் கூட்டம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (18.10.2025) நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், […]

பாதாள குழுக்களுடன் தொடர்புடைய தரப்புகளே அரசியல் பழிவாங்கலென பதற்றம்!

சட்டம் தற்போது உரிய வகையில் அமுலாகி வருகின்றது. எனினும், பாதாள குழுக்களுடன் தொடர்புடைய தரப்புகளே அரசியல் பழிவாங்கலென விமர்சித்துவருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” குற்றவாளிகள், பாதாளக்குழுவினர், போதைப்பொருள் வியாபாரிகள் ஆகியோரை கைது செய்த பின்னர் அவர்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே கைதுகள் இடம்பெறுகின்றன. இது அரசியல் பழிவாங்கல் அல்ல. அவ்வாறு கூறி சட்டம் அமுலாவதை தடுக்க முடியாது. எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை. […]

வலிகாமம் வடக்கு பகுதியில் பொது மக்களுடைய காணிகளை விடுவிக்காத அரசாங்கம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடங்கள் ஆகியும் வலிகாமம் வடக்கு பகுதியில் பொது மக்களுடைய காணிகளை இதுவரை விடுதலை செய்யவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பிராஜா அபிலாஷா வலையமைப்பின் வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் ,இதனை தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய […]

இந்திய வம்சாவளி பிரபலத்துக்கு முனைவர் பட்டம் வழங்கிய கனடா!

பல்கலை இந்திய வம்சாவளியினரான பிரபலம் ஒருவருக்கு கனடாவில் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. யூடியூபராக இருந்து தொலைக்காட்சி பிரபலமாக மாறியுள்ள லில்லி சிங் என்பவருக்குதான் அந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. லில்லி சிங்கின் பெற்றோரான சுக்விந்தர் சிங் மற்றும் மல்விந்தர் கௌர், இந்தியாவின் பஞ்சாபில் பிறந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். லில்லிக்கு யார்க் பல்கலை கௌரவ முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. சமுதாயத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்ககவும், இசை மற்றும் பொழுதுபோக்குத்துறையில் அவரது சாதனைகளுக்காகவும் அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. […]