எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் அடைந்த குழுவின் கடைசி உறுப்பினர் காலமானார்

எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறிய முதல் பயணக் குழுவின் கடைசி உறுப்பினரான காஞ்சா ஷெர்பா, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 92 வயதில் காலமானார். அவரது குடும்பத்தினர் சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிவித்தனர். 1953 ஆம் ஆண்டு எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே தலைமையிலான வரலாற்று குழுவுடன் உலகின் மிக உயரமான மலையின் உச்சியை அடைந்தபோது காஞ்சா ஷெர்பாவுக்கு 19 வயது. மலையேறுதல் அனுபவம் இல்லாத போதிலும், 35 பேர் கொண்ட பயணத்தில் ஒரு […]
கோவாவில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட பிரதமர் மோடி திட்டம்

கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கடைபிடித்து வருகிறார். அந்த வகையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நமது ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரின் சிறப்பான வெற்றியைக் கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அதனால், இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2014-ல் லடாக்கில் உள்ள சியாச்சின் பனிப்பிரதேசத்துக்கு சென்ற அவர், அங்கு […]
அலிசா ஹீலி விளாசலில் அரை இறுதியில் ஆஸி!

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அலிசா ஹீலியின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபனா மோஸ்டரி 80 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், ரூபியா ஹைதர் 59 பந்துகளில், 8 […]
ஐசிசி விருதை வென்ற அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா!

செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதினை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளனர். ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடிய அபிஷேக் சர்மா, 7 ஆட்டங்களில் 314 ரன்கள் […]
இந்திய வீரர் திலக் வர்மாவை நேரில் அழைத்து பாராட்டிய சிரஞ்சீவி!

ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற திலக் வர்மாவை நடிகர் சிரஞ்சீவி […]
தனுஷை நடிக்க வைங்க சார் என பேசிய சிம்பு!

நடிகர் சிலம்பரசன் ‘தக் லைப்’ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் ‘வடசென்னை’ படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் […]
சரவெடி கொண்டாட்டம்..! தீபாவளி முன்னிட்டு காந்தாரா சாப்டர்-1 டிரெய்லர் வெளியீடு

‘காந்தாரா சாப்டர்1’ படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான ‘காந்தாரா சாப்டர்1’ கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது. 2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் ‘காந்தாரா’. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து […]
‘கூலி’ பட நடிகைக்கு விரைவில் திருமணம்!

கன்னட சினிமாவில் பிரபலமான ரச்சிதா ராம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் திடீர் வில்லியாக உருவெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார். 33 வயதாகும் ரச்சிதா ராம் சிங்கிளாகவே இருந்து வந்ததால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காதல் தூது விட்டு வந்தனர். இந்நிலையில் ரச்சிதா ராம் திருமண பந்தத்தில் இணையவுள்ளாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், ”இன்னும் சில நாட்களில் நான் தாம்பத்திய வாழ்க்கையில் கால் பதிக்க இருக்கிறேன். எனக்கு கணவனாக வரப்போகிறவர் இப்படித்தான் இருக்க வேண்டும் […]
பைசன் – காளமாடன் வெல்லட்டும்!- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் இன்று வெளியானது. இதையொட்டி முன்னதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரத்யேகமாக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. திரைப்படத்தை பார்த்து உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ் சார். வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார். ஓர் இளைஞன், […]