மதுரை மேயர் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல்: 5 நிமிடங்களில் முடிந்த கூட்டம்!

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் மதுரை மாநகராட்சி வரலாற்றிலே 5 நிமிடங்களில் மாநகராட்சி கூட்டம் முடிந்தது. மதுரை மாநகராட்சி திமுக மேயராக இருந்த இந்திராணி, 2 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். உள்ளூர் அரசியல் சூழ்நிலை காரணமாக புதிய மேயரை தேர்வு செய்வதில் இன்னும் சிக்கல்கள் நீடிப்பதால் உடனடியாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஆனால், மேயர் ராஜினாமா கடிதத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்காக, சிறப்பு கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, […]
“எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்குவதில் உடன்பாடு இல்லை” – அண்ணாமலை!

எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தியை கண்டேன். இதுபோன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். திருநெல்வேலியில் இன்று அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற அமைப்பை தொடங்கிய அவரின் ஆதரவாளர்கள், அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினர். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் […]
டிரம்புடன் பிரதமர் பேசவில்லை: வெளியுறவுத் துறை விளக்கம்!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் கருத்து குறித்து ஏற்கெனவே […]
‘நமது மீனவர் நலன் குறித்து இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் பேசினேன்’ – பிரதமர் மோடி தகவல்!

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனான சந்திப்பின்போது நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்ய டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு, நமது மீனவர்களின் நலன் […]
26ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் மின்தடை!

ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையினர் அறிவித்துள்ளனர். மின்கட்டமைப்பில் அவசியம் தேவையான மாற்றத்தைக் கொண்டுவரவே இந்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, குறித்த தினத்தன்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை யாழ். மாவட்டம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும். எனவே, இதனைக் கருத்திற்கொண்டு மக்கள் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை […]
மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 31ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை கைது செய்யபட்டார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு […]
போதைப்பொருள் கடத்திய நீண்ட நாள் மீன்பிடிக் கப்பல் பறிமுதல் – ஐவர் கைது

இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் நீண்ட நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது அந்த கப்பலில் இருந்த ஐவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் காலி துறைமுகத்திற்கு கொண்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்

தீபாவளி நீண்ட வார இறுதி இன்று (17) தொடங்கும் நிலையில், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சிறப்பு பஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது. அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் கொழும்பில் உள்ள பஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படும். குறிப்பாக ஹட்டன், வெலிமடை, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பாதைகளில் அதிகளவு பஸ்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன.
கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு

கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான வழக்கு, 2025 ஒக்டோபர் 13 திங்கட்கிழமை கொழும்பு நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்து வைத்திய பகுப்பாய்வை ஆரம்பிக்குமாறு விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகேவுக்கு […]
தமிழினியாக மாறிய இஷாரா செவ்வந்தி!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் எப்படி தப்பிச் சென்றார் என்பது குறித்த பல உண்மைகளை விசாரணை அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதன்படி, கொலை சம்பவத்திற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கும் மேலாக மதுகம மற்றும் தங்காலை பகுதிகளில் தான் மறைந்திருந்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தி, இலங்கை பொலிஸ் அதிகாரிகள், உள்ளூர் பொலிஸாருடன் இணைந்து நடத்தப்பட்ட […]