சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் – பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி!

கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் (14) பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையிலும், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களின் பங்கேற்புடனும் ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் ஜனாதிபதி செயலகமும் இணைந்து செயற்படுத்தும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத் தொடருக்கு இணையாக கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இங்கு கருத்துத் தெரிவித்த […]

அரசாங்கத்தால் வைத்தியசாலைகளில் காணப்படும் அடிப்படை குறைபாடுகளைக் கூட நிவர்த்தி செய்ய முடியவில்லை!

ஒரு நாட்டு மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளாக சுகாதாரத்தையும் கல்வியையும் கருதலாம். இந்த மனித மற்றும் அடிப்படை உரிமைகளை வெறும் பேச்சுக்களோடு மாத்திரம் சுருக்கிக் கொள்ளாது, செயல்பாடுகள் மூலமாகவும் பாதுகாக்க வேண்டும். நமது நாட்டின் இலவச சுகாதார சேவையில் தற்போது உபகரணங்கள், வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றன. அவ்வாறே, வைத்தியசாலைகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் இல்லாமையினால் மக்களின் உயிருக்கு ஆபத்தும் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ரூ. 31 இலட்சம் […]

நேருக்கு நேர் சந்திக்கும் புதின்- ஜெலன்ஸ்கி?.. மெனக்கிடும் டிரம்ப் – புது தகவல்!

ஐரோப்பாவின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சிப்பது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவில்லாமல் உக்ரைன் – ரஷியா போர் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட இந்த போர் உக்ரைனில் மிகப்பெரிய அளவிலான மக்களின் இடப்பெயர்ச்சிக்கும் வழிவகுத்தது. ரஷியாவுக்கு எதிரான பொருளாதர தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் […]

பாடகர் ஜூபின் கார்க் மரணத்தில் எந்த சதியும் இல்லை – சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை!

பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்த போது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார். அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர். கவுஹாத்தி அருகே கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது. மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது […]

ஆப்கானிஸ்தானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் கந்துட் மாகாணத்தில் இருந்து தென்கிழக்கே 46 கி.மீ. தொலைவில், 10 கி.மீ, ஆளத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக அறவிக்கப்பட்டுள்ளது. கந்துட் மாகாணம் ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் காயம், உயிரிழப்பு அல்லது சொத்துகள் சேதம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 2,200 பேர் உயிரிழந்துள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த […]

காசா பகுதியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட மோதலில் 8 பேரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் குழுவினர்!

இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர். இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை ஆட்சி செய்த ஹமாஸ் குழு​வினருக்​கும் இடையே 2 ஆண்​டு​களாக போர் நடை​பெற்​றது. அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது. 13-ம் தேதி எகிப்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்​றும் எகிப்து அதிபர் அல் சிசி தலை​மை​யில் நடை​பெற்ற காசா அமைதி உச்சி மாநாட்​டில் […]

​பாக், ஆப்​கன் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம்!

பாகிஸ்​தானில் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படும் தெஹ்​ரிக்​-இ-தலி​பான்​களுக்கு ஆப்​கானிஸ்​தானில் பயிற்சி அளிக்​கப்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி, அந்​நாட்டு எல்​லை​யில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது. இதற்கு பதிலடி​யாக ஆப்​கன் படை​யினர் நடத்திய தாக்குதலில் பாக். வீரர்​கள் 58 பேர் இறந்​த​னர். இந்நிலையில், காந்​த​கார் பகு​தி​யில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று காலை தாக்​குதல் நடத்​தி​ய​து. இதில் ஆப்​கன் மக்​கள் 12 பேர் உயி​ரிழந்​த​னர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். ஆப்​கன் படைகள் நடத்​திய பதில் தாக்​குதலில் பாக். வீரர்​கள் பலர் உயி​ரிழந்​துள்ளனர். […]

பாகிஸ்தான் பீரங்கிகளை சிறைபிடித்து ஊர்வலமாக சென்ற ஆப்கன் வீரர்கள்: தலிபான் செய்தித் தொடர்பாளர் தகவல்

பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​களை ஆப்​கானிஸ்​தான் ராணுவம் சிறைபிடித்​த​தாக தலி​பான் செய்​தித்​தொடர்​பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “எல்​லைப் பகு​தி​களில் பாகிஸ்​தான் நடத்​திய துப்​பாக்​கிச் சூட்​டுக்கு ஆப்​கானிய படைகள் தகுந்த பதிலடி கொடுத்​தன. இதில், ஏராள​மான பாகிஸ்​தான் வீரர்​கள் கொல்​லப்​பட்​டனர். பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​கள் மற்​றும் ஆயுதங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. பாகிஸ்​தானின் ராணுவ கட்​டமைப்​பு​களை ஆப்​கன் படைகள் அழித்​து​விட்​டன” என்று தெரி​வித்​துள்​ளார். பாகிஸ்​தான் மற்​றும் ஆப்​கானிஸ்​தான் இடையே 48 […]

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகியுள்ளனர். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் […]

ராமேசுவரம் – திருவனந்தபுரம் இடையே அமிர்தா விரைவு ரயில் சேவை தொடங்கியது!

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு ரயில் புதிய சேவை, ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டது. கேரள மாநிலத்திற்கு ரயில் இயக்கப்பட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இருந்த வந்த நிலையில், ரயில்வே வாரியம் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரையிலும இயக்கப்பட்ட அமிர்தா விரைவு ரயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க அனுமதி வழங்கியது. இதனடிப்படையில், ராமேசுவரம் – திருவனந்தபுரம் இடையான அமிர்தா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டது. […]