மக்களின் காணி மக்களுக்கே என ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் காணிகள் விடுவிக்கப்படவில்லை!

மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். வலி, வடக்கில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மக்களின் காணிகளை மக்களுக்கே கையளிப்போம் என ஆட்சி அமைத்தவர்கள் , இன்று ஆட்சி அமைத்து ஒரு வருட காலம் கடந்து காணிகளை மக்களிடம் கையளிக்கவில்லை. கடந்த அரசாங்கம் கையளிக்க தயாராக […]
பருத்தித்துறையில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்களுக்கு தண்டம்!

யாழ்ப்பாணத்தில் காலாவதி கடந்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய பல்பொருள் வாணிப முகாமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் நீதிமன்றால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நுகர்வோரிற்கு பழுதடைந்த உணவினை விநியோகம் செய்த உணவக உரிமையாளருக்கும், உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளிச்சுற்றாடலிற்கு அப்புறப்படுத்திய உணவக உரிமையாளருக்கும் முறையே 10 ஆயிரம் மற்றும் 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபைக்கு உட்பட்ட உணவு கையாளும் நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது, காலாவதி […]
வல்வெட்டித்துறை சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் தண்டம்!

வல்வெட்டித்துறையில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் காலாவதி கடந்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த மன்று 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
உலக வங்கியின் நிதியுதவியில் யாழ்ப்பாணக் கோட்டையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்!

உலக வங்கியின் நிதியுதவியில் யாழ்ப்பாணக் கோட்டையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கோட்டையின் அபிவிருத்தியின் தேவைப்பாடு தொடர்பில் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி அதிகார சபையால் கோட்டையின் அபிவிருத்தி தொடர்பில் தயாரிக்கப்பட்ட திட்டமுன்மொழிவும் முன்வைக்கப்பட்டது. திட்டத்தை தொடங்குவதற்கான தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு புத்தசாசன சமய கலாசார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலருடன் […]
காரைமுனங்கு குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையத்திற்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர்!

அரியாலை காரைமுனங்கு பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு மகஜர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியை ஆளுநர் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் தரம்பிரிப்பு நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் அங்கு முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் தொடர்பிலும் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் ஆளுநருக்கு எடுத்துக்கூறினார். தரம் பிரிக்கும் நடவடிக்கையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 17பேர் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுடனும் ஆளுநர் கலந்துரையாடினார். […]
மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தச் சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி உறுதி!

பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தச் சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாதெனவும் பொதுமக்கள் நிராகரிக்கும் சட்டங்களால் எந்தப் பயனும் இருக்காதென்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (17) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் 28ஆவது தேசிய ஆசிரியர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி இந்தக் கருத்துகளை வெளியிட்டார். அவர் மேலும் தெரிக்கையில், “பெற்றோர்களின் குழந்தைகள் மீதான எதிர்பார்ப்புகளை நியாயமாகவும் நீதியாகவும் நிறைவேற்ற வேண்டும். இதற்காக, நாங்கள் பாரிய கல்வி சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியுள்ளோம். சில […]
யுத்த வெற்றிக்கான முழு கெளரவமும் மஹிந்தவுக்கே உரித்து – சரத் வீரசேகர!

யுத்த வெற்றி அல்லது தோல்வியை அரசியல்வாதிகளே பொறுப்பேற்பார்கள். அவ்வாறெனில், இந்த யுத்தத்தை வெற்றி கொண்ட தற்கான முழு கெளரவமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே உரித்தாக வேண்டும். அதனை யாராலும் தவிர்க்க முடியாது. அமைதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கி உலகின் பாரதூரமான பயங்கரவாத செயற்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்த அரச தலைவர் என்ற அடிப்படையில் மஹிந்தவுக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும் என்று ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் […]
’13’ஐ அமுல்படுத்த வலியுறுத்துவோம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

‘1988 ஆம் ஆண்டு எவ்வாறு 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதிலிருக்கக்கூடிய அனைத்து அதிகாரங்களும் மீளவும் தமிழ் மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் எமது கருத்தாகும். அதை வலியுறுத்துவோம். மாகாண சபை தொடர்பில் மிகப் பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஓர் ஒற்றுமைப்பாடும் ஒருமித்த கருத்துக்களும் இருக்கின்றன. இவற்றை நாங்கள் இன்னும் ஒருவரும் மிகுதி இல்லாமல், அனைவரையும் இணைத்துக்கொண்டு செல்லும் முயற்சியாகத்தான் கலந்துரையாடல் நடைபெற்றது’ என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும், முன்னாள் […]
சுவிஸ் தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவர் ஸ்ரீ வோல்ற் (Siri Walt) மற்றும் சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்ரின் பொய்யிலற் (Justine Boillat)ஆகியோரை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை, சமகால அரசியல் நிலைமைகள், மக்களின் பொருளாதார நடவடிக்கைகள், பொறுப்புக்கூறல் நடவடிக்கையின் தொடர் செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. […]
மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை மக்களுக்கு வீடுகள்!

தேர்தல் காலத்தில் தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், அப்புத்தளை பூனாகலை பகுதியில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் இந்த வருட இறுதியில் வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படவவுள்ளன. மேற்படி மண்சரிவு ஏற்பட்டு இரண்டரை வருடங்களுக்கு மேல் காலம் கழிந்துள்ளன.எனினும், கடந்த அரசாங்கம் இம்மக்களின் விடயத்தில் கவனம் செலுத்தியிருக்கவில்லை.இந்நிலையிலே, இந்த மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கென 160 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் ஊவா மாகாணத்தில் தேசிய […]