யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை – வடக்கு ஆளுநர் அறிவிப்பு

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடல் கடந்த தீவுகளின் பாடசாலை அதிபர்கள் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போது தெரிவித்துள்ளார். இதன் படி நெடுந்தீவிலுள்ள 8 பாடசாலைகளில் 6 பாடசாலைகளும், அனலைதீவிலுள்ள 3 பாடசாலைகளும், எழுவைதீவிலுள்ள 2 பாடசாலைகளில் ஒரு பாடசாலையும் அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாகவும் அதிபர்களால் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. ஏற்கனவே அந்தப் பிரதேசங்களிலுள்ள […]

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஊடகவியலாளர்!

இலங்கையில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி (Central Bank bond scam) வழக்கில் தேடப்படும் குற்றவாளியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படத்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். உவிந்து குருகுலசூரிய, தான் சமூக ஊடகத்தில் பகிர்ந்த புகைப்படத்துடன், அர்ஜுன மகேந்திரன் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தன்னைத் தொடர்புகொண்டதாகத் தெரிவித்துள்ளார். சிங்களத்தில் இட்ட பதிவில், அர்ஜுன் மகேந்திரன் தன்னுடன் பல […]

பங்களாதேஷில் புதிய சாசனத்தை எதிர்த்து போராட்டம்!

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசு இன்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தேசிய பாராளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலிஸார் கலைந்து செல்ல வலியுறுத்தினர் அப்போது மோதல் ஏற்பட்டது. இதனால் பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைத்தனர். புதிய சாசனம் குறித்த தங்களது கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை என்ற கோபத்தில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக […]

மடகாஸ்கர் ஜனாதிபதியாக பதவியேற்ற இராணுவ தளபதி மைக்கேல் ரைண்டிரினா!

கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு மடகாஸ்கர். அந்நாட்டின் ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினா செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஊழல், வறுமை, மின் தடுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 25 ஆம் திகதி தொடங்கிய போராட்டம் ஜனாதிபதி ரஜோலினாவுக்கு எதிராகவும், அவரது அரசுக்கு எதிராகவும் திரும்பியது. மேலும், அந்நாட்டு இராணுவத்தின் கெப்செட் எனப்படும் முக்கிய படைப்பிரிவு, ஜனாதிபதியாக இருந்த அண்ட்ரேவின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராக […]

இரத்மலானை வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து!

இரத்மலானை – காலி வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று (03) தீயணைப்பு வாகனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும், மேலும் தீவிபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தீயணைப்பு துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில். முச்சக்கர வண்டியை மோதி தள்ளிய டிப்பர் – சாரதி படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சங்கத்தானை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கற்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனம் , வேக கட்டுப்பாட்டை இழந்து, யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் சங்கத்தானை பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி , கடை யொன்றுடன் மோதி தனது இயக்கத்தை நிறுத்தியது. குறித்த விபத்தில் […]

மழைக்குள் இருந்து மந்திரிமனையை பாதுகாக்க துரித வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையில் மந்திரி மனை மேலும் சேதமடைவதை தடுக்கும் வகையில் , மந்திரிமனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக பேணி , மழை காலம் முடிவடைந்த பின்னர் மீள பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக மந்திரிமனையின் பாகம் ஒன்று இடிந்து விழுந்தது. ஏற்கனவே சேதமாக காணப்பட்ட குறித்த பகுதி இடிந்து […]

யாழில். தகரம் வெட்டியதில் இளைஞன் உயிரிழப்பு!

தகரங்களை இறக்கும் போது அவை சரிந்து விழுந்தமையால் கழுத்தில் காயமடைந்தவர் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்த ஹரிகரராஜா டலஸ்குமார் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அமைந்துள்ள இரும்பகம் ஒன்றில்  பணிபுரிந்த வந்த குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி கடையில் தட்டியில் அடுக்கப்பட்டிருந்த தகரங்களை இறக்குவதற்கு முயற்சித்தார். இதன் போது தகரங்கள் அவர் மீது விழுந்ததில் அவரது கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தகரங்கள் வெட்டியுள்ளன. […]

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்க்கருத்து கூறியுள்ள வலி. வடக்கு பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்!

மக்களின் காணி மக்களுக்கே சொந்தமானது என ஜனாதிபதி கூறிவரும் நிலையில் , இராணுவத்தினர் தமது தேவைக்காக காணிகளை கையகப்படுத்த வில்லை எனவும் , மக்களின் நலனுக்காவே காணிகளை கையகப்படுத்தி வருவதாக என வலி. வடக்கின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுரேகா  சபையில் தெரிவித்துள்ளார். கீரிமலை பகுதியில் கடற்படையினர் ரேடார் அமைக்க தனியாருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் , அதற்காக காணியை வழங்க முடியாது என வலி. வடக்கு பிரதேச […]

சிலதை விளங்கிக்கொள்ள கஜேந்திரகுமார் முயற்சிக்க வேண்டும்!

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே உண்மை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]