மத்திய வங்கி மோசடி: மகேந்திரன் மீதும் சட்டம் பாயும்

எந்த கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ” பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு முடிவு கட்டப்படும் என நாம் உறுதியளித்திருந்தோம். இதற்காக பொலிஸார் உட்பட பாதுகாப்பு துறையினருக்கு தேவையான வளங்களை வழங்கினோம். அவர்கள் சிறப்பாக தமது கடமைகளை செயல்படுத்தி வருகின்றனர். […]

உரத் தொழிற்சாலைக்கான முன்மொழியப்பட்ட இடத்தை பார்வையிட்டார் கைத்தொழில் அமைச்சர்

திருகோணமலை சீன துறைமுகத்திற்கு அருகிலுள்ள துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான நிலத்தை நேற்று (15) கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பார்வையிட்டார். இங்கு ஒற்றை சூப்பர் பாஸ்பேட் (SSP) உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் முன்மொழிவு தொடர்பாக உள்கட்டமைப்பு மேம்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சகம் SSP உர உற்பத்திக்கான முதலீட்டாளர்களை அழைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்த அழைப்பு இன்று (16) பிற்பகல் 2.00 […]

இன்று பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் […]

“நான் உயிருடன் இருக்கின்றேன்” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வாசுதேவ நாணயக்கார

முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார, தான் இறந்துவிட்டதாக பரவும் வதந்தி குறித்து கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன்படி, தான் நலமுடன் இருப்பதாகவும், தான் இறந்துவிட்டதாக தொலைபேசி அழைப்புகள் மூலம் தகவல் கிடைத்ததாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டதும் ஒருவித நகைச்சுவை உணர்வு தனக்குள் எழுந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது தங்கள் ஆயுளை நீட்டிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இருப்பினும், இந்த செய்தியை […]

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணமானார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார் பிரதமர் இன்று (16) அதிகாலை 12.40க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-191 மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி வரை பிரதமர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடனும் கலந்துரையாட உள்ளார்.

SJB – UNP சங்கமம் – மூவரடங்கிய குழு நியமனம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு மூவரடங்கிய குழுவொன்றை நியமித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் செயலாளாலர் தலதா அதுகோரல, ஜனாதிபதி சட்டத்தரணி ரேணோல்ட் பெரேரா உள்ளிட்டவர்களே இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது. இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய […]