‘வாரிசு’ இயக்குநர் படத்தில் சல்மான் கான்?

கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா நடித்த ‘தோழா’, விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர் வம்சி பைடிபள்ளி. இவர் அடுத்து ஆமிர் கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தது. இதற்காக அவர் அமீர்கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்நிலையில் அவர், இந்திப் பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். 3 இடியட்ஸ், பிகே படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. இதனால் வம்சி இயக்கத்தில் […]

‘த ஃபேமிலி மேன்’ திரைப்படமாக வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்கும்: பிரியாமணி கணிப்பு

ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில், இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, நீரஜ் மாதவ் உள்பட பலர் நடித்த வெப் தொடர், ‘த ஃபேமிலி மேன்’. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த வெப் தொடர், வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் 2-வது சீசனும் வெளியானது. அதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணியுடன் சமந்தாவும் நடித்திருந்தார். இந்த சீசனும் வரவேற்பைப் பெற்றது. இப்போது இதன் 3-வது சீசன் உருவாகிறது. இதிலும் பிரியாமணி நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த […]

மக்களுக்கான படமாக ‘டீசல்’ இருக்கும்: ஹரிஷ் கல்யாண் நம்பிக்கை

ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, சச்சின் கெடேகர், விநய், விவேக் பிரசன்னா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘டீசல்’. சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் வழங்க, எஸ்.பி. சினிமாஸ் தயாரித்துள்ளது. அக்.17-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசும்போது, “ஆக் ஷன் படங்கள் மீது எனக்கு அதீத விருப்பம் உண்டு. அதற்கான சரியான கதைக்காகக் காத்திருந்தேன். ‘டீசல்’ படம் அப்படி அமைந்தது. […]

லைகா தொடர்ந்த வழக்கு: விஷால் பதிலளிக்க உத்தரவு

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்துக்காக, கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.21.29 கோடி கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இந்த தொகையை திருப்பிக்கொடுக்கும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்துப் படங்களின் உரிமைகளையும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அதை மீறி விஷால் பட நிறுவனம் படங்களை வெளியிட்டு வருவதாகக்கூறி லைகா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர் […]

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் சரண்

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை மன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் கோரிய நிலையில் நீண்ட நாட்களாக முகாமில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் நாட்டில் இருந்து […]

அரச நிறுவனங்களுக்கு பழுப்புநிற சீனியை கொள்வனவு செய்யுமாறு உத்தரவு

உள்ளூர் சீனி உற்பத்தியை ஆதரிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அனைத்து அரசு நிறுவனங்களும் தங்கள் உணவு கொள்முதலில் பழுப்பு சர்க்கரையை மட்டுமே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு முப்படைகள், இலங்கை பொலிஸார், சிறைச்சாலைகள் துறை மற்றும் அரசு வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு பொருந்தும். அவை இப்போது அனைத்து உணவு கொள்முதலிலும் பழுப்பு சர்க்கரையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். பெலவத்தை மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகள் ஆண்டுதோறும் சுமார் 56,000 மெட்ரிக் […]

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணக்கம் – ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவில் ஈடுபடுவதை இடை நிறுத்துவதற்கான இணக்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வௌியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வௌ்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா செலுத்த முயற்சிப்பதால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் […]

அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது – கஜேந்திரகுமார் கண்டனம்

“மக்களின் காணி மக்களுக்கே என தெரிவிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இலங்கை கடற்படை இல்லையா?” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார். வலி வடக்கில் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் செயற்பாடு தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் ஜனாதிபதியை விட அதிகாரம் கூடியவர்களாக கடற்படை உள்ளார்களா அல்லது ஜனாதிபதி யாழ் […]

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு?

அவுஸ்திரேலிய தொடருக்கு பின்னர் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓய்வு பெறுவதாக வெளியான வதந்திகளை இந்திய கிரிக்கெட் சபையின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா நிராகரித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை வெற்றிகொண்ட இந்திய அணிக்கு அவர் பாராட்டையும் இதன்போது தெரிவித்திருந்தார். அத்துடன், ஒருநாள் அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். அவர்கள் இருவரும் சிறந்த […]

படையினரை காட்டிக்கொடுத்துவிட்டார் பொன்சேகா

“போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக படையினரையும், நாட்டையும் காட்டிக்கொடுத்த இராணுவ தளபதிதான் சரத் பொன்சேகா.” என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலித்தலைவர்களை கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுக்கமைய இராணுவம் கொன்றது என ஜனாதபதி தேர்தலின்போது பொன்சேகா ஊடகமொன்றிடம் கூறி இருந்தார். அவரின் அந்த கதையால்தான் படையினர்மீது போர்க்குற்றச்சாட்டு சுமந்தப்பட்டு, இன்றுவரை அப்பிரச்சினை நீடிக்கின்றது. உலக வரலாற்றில் இராணுவத் தளபதியொருவர், தமது […]