உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு பின்னடைவு
ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் சமீபத்திய தரவரிசையில், இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்து உலக அளவில் 98வது இடத்தைப் பிடித்துள்ளன. தற்போதைய இலங்கை கடவுச்சீட்டை கொண்டு உலகில் 41 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல பயணம் செய்ய முடியும் கடந்த செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட குறியீட்டில் இலங்கை கடவுசீட்டு 97வது இடத்தில் இருந்தது. 2024 ஆம் ஆண்டில் 96வது இடத்தில் இருந்த இலங்கை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து இடங்கள் முன்னேறி 91வது இடத்தைப் […]
இலங்கையில் தீவிரமடையும் எலி காய்ச்சல்!! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை
சீரற்ற காலைநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை சுமார் 8,000 நோயாளிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் இந்த நிலைமை மோசமடையக்கூடும் என்றும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், நோய் தாக்கிய பின்னர் தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் சுமார் 100 பேர் இறந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 டெங்கு காய்ச்சல் நோயாளிகள் பதிவாவதாகவும், 100-200 இறப்புகள் பதிவாவதாகவும் தொற்றுநோயியல் […]
இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார்
முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயனந்த வர்ணவீர தமது 64 வது வயதில் இன்று (16) காலமானார். 1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஜயனந்த வர்ணவீர, 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஒரு சிறந்த பந்து வீச்சாளரான அவர், 1994 இல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது 32 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 6 ஒருநாள் விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
மனோ, ஜீவன், திகா, ராதா ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்
பாராளுமன்ற உறுப்பினரானான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை கிழித்தெறிய வேண்டிய நிலை ஏற்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, ‘மீரியபெத்த மண்சரிவு ஏற்பட்டு எத்தனை […]
டொலருக்கு நிகராக பாரிய வளர்ச்சிகண்டுவரும் ஆப்கானிஸ்தான் நாணயம்
டொலருக்கு நிகராக ஆப்கானிஸ்தான் நாணயம் பாரிய வளர்ச்சிகண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 130 ஆப்கனிகளாக இருந்தது. தாலிபான் அரசு பொறுப்பேற்ற பின்னர், டொலரின் மதிப்பு சரிந்து வருகிறது. தொடர்ச்சியாக ஆப்கனியின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. நான்கு ஆண்டுகளில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 67 ஆப்கனிகளாக குறைந்துள்ளது. இது ஒரு உலக சாதனையாகும் என்று ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தகி […]
பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு
சீனாவுக்கு மூன்று நாள் பயணம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சற்கரை சந்தித்து உரையாடியுள்ளார். இச் சந்திப்பு இன்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. தொழிநுட்ப உதவி உள்ளிட்ட பல ஒத்துழைப்பு செயற்பாடுகளில் இந்தியா இலங்கைக்கு பக்கபலமாக இருக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இடம்பெற்ற சந்திப்பில் உறுதியளித்துள்ளதாக புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன. இச் சந்திப்பு தொடர்பாக கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் இந்தியாவுக்கான முதலாவது […]
வங்காள விரிகுடா கடல் உருவாகும் மொன்தா சூறாவளி
எதிர் வருகின்ற தீபாவளி தினத்துக்கு அண்மையாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, 27, 28ஆம் திகதிகளில் (சில சந்தர்ப்பங்களில் சூறா வழியாக) வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு Thailand நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட மொன்தா (Montha – Pronounce as Mon-Tha) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும். இது வட தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திராவில் பிரதேசத்திற்கு […]
யாழில் வீடொன்றில் வீசிய துர்நாற்றம்; அயலவர்க்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணம் – அளவெட்டிப் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வயது 74 வயதான மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். அவர் வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயல் வீட்டார்கள் கிராம அலுவலருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதையடுத்து, பொலிஸாரின் உதவி பெறப்பட்டு, உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது. மரண விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
கொழும்பு சென்ற யாழ் பெண் விபத்தில் உயிரிழப்பு ; திருமணமாகி ஒருவருடத்தில் நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணம் ஏழாலையை சேர்ந்த திருமணமான இளம் பெண் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்றபோது இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுராதபுரதிற்கு அண்மையில் அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. விபத்தில் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியைச் சேர்ந்த 25 என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து சம்பவத்தில் மேலும் ஒரு வயோதிபப் பெண்ணும் உயிரிழந்துள்ளதாகவும் […]
வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம்
தமிழகத்தில் திருப்பூர் ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரிதன்யா மரணத்தை அடுத்து கைது செய்யப்பட்ட அவரது கணவர் , மாமனார் மற்றும் மாமியார் ஆகிய மூவரும் பிணையில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ரிதன்யாவுக்கு சொந்தமான 2 கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி கவின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கு […]