யாழில் தீயில் கருகிய வர்த்தக நிலையம்
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உட்பகுதி முழுவதும் தீயில் கருகி நாசமடைந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு (15) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், கடை உரிமையாளர் நேற்றையதினம் கடையினை பூட்டிவிட்டு சென்று, மீண்டும் இன்றையதினம் காலை வியாபார நடவடிக்கைகளுக்காக கடையினை திறந்துள்ளார். அதன்போது கடையின் உட்பகுதி முழுவதும் தீயில் எரிந்து அங்கிருந்த பொருட்கள் முழுவதும் தீயில் கருகி […]
தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய அருச்சுனா எம்பி; யாழ் இளைஞர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்
ஜெனிவா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா , புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் யாழ்ப்பாண இளைஞர்கள் தொடர்பிலும் கூறிய கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் இளைஞர்கள் குடு அடிப்பதாக அர்ச்சுனா வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் யாழ் இளைஞர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜெனிவாவில் மக்களின் பிரச்சனையை பேசாத அர்ச்சுனா ஜெனிவாவில் சென்று தமிழர்கள் பிரச்சனைகளை பேசாது, தன்மீதுள்ள வழக்கு தொடர்பில் அருச்சுனா கூறியமையும் தமிழினத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. […]
இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்க நிறைவேற்றுக் குழு கூட்டம்
இலங்கை – சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அண்மையில் சங்கத்தின் தலைவர் அமைச்சர் (வைத்தியர்) உபாலி பன்னிலகேவின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் (கலாநிதி) சிரி வால்ட் (Dr.Siri Walt) மற்றும் சங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் (வைத்தியர்) உபாலி பன்னிலகே, சுவிட்சர்லாந்திற்கு அண்மையில் மேற்கொண்ட ஆய்வுப் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும், சுவிஸ் ஆட்சிமுறைக்கு மற்றும் சமூகம் […]
பாண் விற்கும் போர்வையில் கஞ்சா கலந்த மதன மோதக மாத்திரைகள் விற்றவர் கைது
சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் தொகை ஒன்றை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். வெதுப்பக உற்பத்திகள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளார். 56 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். லொறியொன்றில் வெதுப்பக உற்பத்தி பொருள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய நோட்டன் பிரிட்ஜ் […]
மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு அனுமதி
அமைச்சுக்களின் செயலாளர்கள் மூவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளராக டீ.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக எஸ். ஆலோகபண்டார மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளராக பி.கே.கே.கே. ஜினதாச ஆகியோரின் நியமனங்களுக்கு இவ்வாறு உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் (கலாநிதி) ஹரிணி […]
தெற்காசிய மெய்வல்லுனர் போட்டி – இலங்கையிலிருந்து 59 பேர் பங்கேற்பு
இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டிக்கு 59 வீர, வீராங்கனைகளைக் கொண்ட இலங்கைக் குழாத்தை தேசிய விளையாட்டு தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இதில் 30 வீரர்கள் மற்றும் 29 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தெற்காசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி இந்தியாவின் ரான்சியில் எதிர்வரும் ஒக்டோபர் 24 தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை குழாத்தில் பதக்க எதிர்பார்ப்புகளாக ஓட்ட வீரர் காலிங்க குமாரகே, ஈட்டி எறிதல் வீரர்களான ருமேஷ் தரங்க மற்றும் […]
சிரிய பாதுகாப்பு அமைச்சின் வாகனம் மீது தாக்குதல் – மூவர் உயிரிழப்பு
சிரிய பாதுகாப்பு அமைச்சின் பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிரியாவின் கிழக்கு நகரங்களான தெயிர் எல்-ஸோர் மற்றும் மயாதீன் இடையிலான நெடுஞ்சாலையில், பாதுகாப்பு அமைச்சின் பேருந்தின் மீது இன்று (16) வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்குகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட […]
ஜனநாயகம் என்பது விளையாட்டு அல்ல, அது கடின உழைப்பு – பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, இந்திய அரசு சார்பில் இலங்கை அரசுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும் இலங்கை மக்களுக்காக இந்திய அரசு உணவு, நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்து பலமுறை உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் நிதி உதவியை பிரதமர் ஹரிணி அமரசூரிய நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஹரிணி அமரசூரிய, 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு இன்று சென்றுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக […]
கச்சத்தீவு மீட்பு – இலங்கை பிரதமரிடம் வலியுறுத்துமாறு மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை
இந்தியாவுக்கு இலங்கைப் பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், கச்சத்தீவு மீட்பு குறித்து வலியுறுத்துமாறு இந்திய பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் * கச்சத்தீவு மீட்பு * இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல் * மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை & திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல் * பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்குவதால் உண்டாகும் பாதிப்பு * கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றை […]
6.5 மில்லியன் செலவு செய்த இஷாரா செவ்வந்தி – நேபாளத்தில் எதிர்பார்த்த பாதுகாப்பு கிடைக்கவில்லை
பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களின் கைது குறித்து நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேகநபர்களின் நடமாட்டம் மற்றும் அவர்கள் பிடிபடுவதற்கு வழிவகுத்த ரகசிய நடவடிக்கை பற்றிய புதிய விவரங்களை காத்மாண்டு போஸ்ட் வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட சந்தேக நபர்கள் காத்மாண்டு மற்றும் பக்தபூர் பகுதிகளில் மிகவும் இரகசியமாக வசித்து வந்தனர். அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகளை தவிர்க்க நேபாளத்தின் இந்தியாவுடனான திறந்த எல்லையைப் பயன்படுத்தி சந்தேகநபர்கள் […]