கனடாவில் பாடசாலைகளில் பன்றி இறைச்சிக்கு தடையா?

கனடாவின் ஒன்டாரியோ மற்றும் பிற மாகாணங்களில் பாடசாலைகளில் பன்றி இறைச்சி தடைசெய்யப்பட்டது என கூறிய டிக்டாக் வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இத்தகைய மின்னஞ்சல் அல்லது தடை உத்தரவு எதுவும் இல்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். உங்கள் குழந்தையின் ஆசிரியர், மற்ற மத மாணவர்களை புண்படுத்தக்கூடும் என்பதால், உங்கள் குழந்தையின் மதிய உணவில் பன்றி இறைச்சி வைக்க வேண்டாம் என்று மின்னஞ்சல் அனுப்புவதாக கற்பனை செய்யுங்கள் என டிக்டாக் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ […]
முள்ளிக்குளம் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்.பி.

மன்னார் – சிலாவத்துறை பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மலைக்காடு கிராமத்தில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றினை நடாத்தியுள்ளார். குறிப்பாக முள்ளிக்குளம் கிராமமக்கள் கடந்த 2007ஆம் ஆண்டு அசாதாரண சூழ்நிலைகாரணமாக தமது சொந்த இடத்திலிருந்து வெளியேறியுள்ளனர். இவ்வாறு தமது சொந்தக் கிராமமான முள்ளிக்குளத்திலிருந்து வெளியேறிய மக்கள் இதுவரை மீளக்குடியமர்த்தப்படாத நிலையில் தற்போது மலைக்காடு என்னும் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்மக்களின் பூர்வீகக் கிராமமான முள்ளிக்குளத்தினை கடற்படையினர் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் ஆக்கிரமித்து […]
பாதிக்கப்பட்டால் மேன் முறையீடு செய்யலாம் – வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்ட, 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் எந்தவொரு ஆசிரியரும் மேன்முறையீடு மேற்கொள்ள முடியும் எனவும், மேன்முறையீடு எதிர்வரும் 22ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஆசிரியர்களின் நலன்கருதி எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண மேலதிக […]
வேலணை பிரதேசத்திற்குள் அனுமதி பெறாத நுண் நிதி நிறுவனங்கள் உள் நுழையத் தடை

வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட பகுதிகளில், நுண்கடன் நிதி நிறுவனங்கள் பிரதேச சபையின் அனுமதியின்றி செயற்பட முடியாது என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம், புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும் அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்துவது அவசியம் என வலியுறுத்தி உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் முன்மொழிவொன்றை சபையில் சமர்ப்பித்தார். முன் […]
பருத்தித்துறையில் தந்தை,மகன் மீதான வாள்வெட்டு – அறிக்கை கோரிய ரஜீவன் எம்.பி!

போதைப்பொருள் கடத்தும் குழு என்று சந்தேகிக்கப்படும் குழுவினரால், அண்மையில் பருத்தித்துறையில் தந்தை மற்றும் மகன் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றைக் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், வன்முறைக் குழு தொடர்பாக மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு வர அச்சப்படும் சூழ் நிலை காணப்படுகிறது. பொலிஸாருக்கு வழங்கும் தகவல்கள் குற்றவாளிகளுக்கு உடனேயே கடத்தப்படுகிறது என்ற விடயம் தொடர்பாக விளக்கம் கோரினேன். பருத்தித்துறையில் […]
வலி வடக்கில் கடற்படை காணி சுவீகரிப்பு.. ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் கடற்படை இல்லையா? கயேந்திரகுமார் எம்பி கேள்வி.

மக்களின் காணி மக்களுக்கே என தெரிவிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இலங்கை கடற்படை இல்லையா என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார். வலி வடக்கில் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் செயற்பாடு தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நாட்டில் ஜனாதிபதியை விட அதிகாரம் கூடியவர்களாக கடற்படை உள்ளார்களா அல்லது ஜனாதிபதி […]
யாழில். வசதியானவர்கள் வீடுகளை இலக்கு வைத்த திட்டம் தீட்டி திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது – நகைகளும் மீட்பு

யாழ்ப்பாணத்தில் பெரும் வசதி படைத்தவர்கள் வீடுகளை இலக்கு வைத்து , அவர்களின் வீடுகளுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து , நோட்டமிட்டு , வசதியானவர்கள் வீட்டில் திருடி வந்தார் எனும் குற்றச்சாட்டில் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தங்க நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டு இருந்தன. அவை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் […]
மாகாண சபை தேர்தலை எதிர்கொள்ள தயார் – யாழில் கூடிய தமிழ் கட்சிகள்

மாகாண சபை தேர்தலை தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து எதிர்கொள்வது என்பது தொடர்பில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கட்சிகளுக்கு இடையிலான கூட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டத்திற்கு தமிழ் மக்கள் கூட்டணியினருக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் , அவர்கள் சமூகமளிக்கவில்லை எனவும் , இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூட்டத்திற்கு வருவதாக கூறிய நிலையில் இறுதி நேரத்தில் சுகவீனம் காரணமாக […]
வடக்கில் ஜேவிபியின் தேவைக்காக கல்வியை சீரழிக்க விடமாட்டோம்..

நாடு தளவிய போராட்டத்தை மேற்கொள்வோம்.. பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை. ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தியினால் வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தன்னிச்சையான செயற்பாடுகளால் வடக்கு கல்வி சீரழிய விடமாட்டோம் எனத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எமது ஆசிரியை மற்றும் அதிபர்களின் பலத்தை விரைவில் காட்டுவோம் என எச்சரிக்கை விடுத்தார். வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். […]
கடற்கரையில் இருந்து மீன் வாடி அகற்றம் ; பாதுகாப்பு திணைக்களம் அதிரடி செயல்

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருந்த கட்டுமானம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் இன்று (16) உடைத்து அகற்றப்பட்டது. வரலாற்று உச்சத்தை நோக்கி தங்க விலை ; இன்றைய விலை என்ன தெரியுமா? வரலாற்று உச்சத்தை நோக்கி தங்க விலை ; இன்றைய விலை என்ன தெரியுமா? திருகோணமலை நீதவான் நீதிமன்றினால் கடந்த மாதம் 23 ஆம் திகதி குறித்த கட்டுமானத்தை அகற்றுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இந்த […]