இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் வேலைவாய்ப்பு

இந்த ஆண்டு இதுவரை 2,927 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்புகளுக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இவர்களில் 2,197 பேர் உற்பத்தித் துறையிலும், 680 பேர் மீன்வளத் துறையிலும், 23 பேர் கட்டுமானத் துறையிலும், இரண்டு பேர் விவசாயத் துறையிலும் வேலைகளைப் பெற்றுள்ளனர். இதற்கிடையில், தென் கொரியாவில் ஏற்கனவே வேலை வாய்ப்பு பெற்றுள்ள சுமார் 200 இலங்கையர்களை இந்த மாத இறுதிக்குள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. […]
வடகிழக்கு பருவமழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இக்காலப்பகுதியில், நாட்டின் சில பகுதிகளில் 250 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதிக மழைவீழ்ச்சி காரணமாக, ஆறுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்நிலையில், வெள்ள […]
தெற்கு கடலில் மீட்கப்பட்ட பொதிகளில் 839 கி.கி போதைப்பொருள்

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கி.கி போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 670 கி.கி ஐஸ் (Ice), 156 கி.கி ஹெரோயின் (Heroin), 12 கி.கி ஹஷீஷ் (Hashish) என்பன அடங்குகின்றன. தெற்கு கடலில் மிதந்து வந்த நிலையில் நேற்று (14) சுமார் 51 பொதிகள் மீட்கப்பட்டன. இந்தப் பொதிகள் நேற்று (14) மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.3 பொதிகளில் ஹெரோயின் இருப்பதாகவும், மற்ற 48 பொதிகளிலும் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பதாகவும் […]
இந்தியாவின் ஏவுகணை நாயகனின் பிறந்த நாள் இன்று

இராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை வகித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ஏவுகணை திட்டங்களை திறம்பட செயற்படுத்தியதால் இந்தியாவின் ஏவுகணை நாயகனாக அறியப்பட்டார். அவர் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடுடையவர் இதனால் அவர்களோடு சுமுகமான முறையில் எப்போதும் உரையாடுவார். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு இந்தியப் பிரதமர் […]
போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய திட்டம் இந்த மாத இறுதிக்குள்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், யாரும் போதைப்பொருட்களை இறக்குமதி செய்யவோ அல்லது விநியோகிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் “அழகான வாழ்க்கை, போதைப்பொருள் இல்லாத தேசம்” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த மாத இறுதிக்குள் போதைப்பொருள் […]
செம்மணி மனித புதைகுழியின் அடுத்த அகழ்வு: 2 கோடி ரூபா நிதிக்கு அனுமதி

இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை, நீதி அமைச்சு வழங்கியுள்ளது. நிதி கிடைத்தாலும், தற்போது யாழ்ப்பபாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அடுத்த கட்ட அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என அகழ்வாய்வு நிபுணர்கள் கூறுகின்றனர். செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு, நேற்றுமுன்தினம் (ஒக்டோபர் 13), யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் […]
இஷாரா செவ்வந்தி உட்பட கைதான ஐவரை இன்று நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள் நேபாளத்திற்கு சென்றுள்ளனர். நேபாளத்தில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) குழுவிற்கு உதவுவதற்காக இவர்கள் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (15) மாலை நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து சுமார் 18 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, நேபாள பாதுகாப்புப் படையினருடன் […]
மோடியை புகழ்ந்த ட்ரம்ப்- இஸ்ரேல் – கமாஸ் போர் நிறுத்த ஒப்பந்த நிகழ்வில் சம்பவம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம், மேற்கொண்ட முயற்சியினால் இஸ்ரேல் – கமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்னர், இந்தியா – பாகிஸ்தான் தொடர்பாக பேசப்பட்டதாக பிபிசி உலக செய்திச் சேவை தெரிவித்துள்ளது. எகிப்து நாட்டில் நடைபெற்ற இஸ்ரேல் -கமாஸ் போர் நிறுத்த ஒப்பந்த நிகழ்வில் டொனால்ட் ட்ரம்ப்புடன் எகிப்து, கட்டார், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றியிருந்தனர். நிகழ்வின்போது ட்ரம், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைக் குறிப்பிடாமல், “இந்தியா ஒரு சிறந்த நாடு, அங்கு அதிகார […]
இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரம் – பிரதமர் ஹரிணி, சீன ஜனாதிபதி உரையாடல்

இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை அயல்நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய சீன ஜனாதிபதியிடம் தெரிவித்தாக கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா – பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளுடன் இலங்கை பேணி வருகின்ற உறவு முறைகள் மற்றும் பொருளாதார உதவிகள் பற்றி ஹரிணி சீன ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறியுள்ளார். முக்கியமாக பிராந்திய பாதுகாப்பு தொடர்பான தமது அக்கறையை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஹரிணியிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகின்றது. […]
பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ராஜஸ்தான் மாநிலத்தில் 20 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானின் ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் நோக்கி செல்லும் தனியார் பேருந்து நேற்று பிற்பகல் 57 பயணிகளுடன் புறப்பட்டது. போர் அருங்காட்சியகம் அருகே தையத் கிராமத்தில் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பேருந்தின் பின்புறத்திலிருந்து திடீரென தீப்பற்றி பேருந்து முழுவதும் மளமளவென பரவியது. இதில், பயணிகள் அவசரமாக வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டதால் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பயணிகள் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, பேருந்து விபத்தில் […]