எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களைத் தீட்டியுள்ளது. சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடிய போது இந்த விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு விசாக்கள் மற்றும் மின்னணு பயண அனுமதிப் பத்திரங்களை (ETAs) வழங்குவதை எளிதாக்குவது தொடர்பான விடயங்களில் விசேட […]
மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார , இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இஸ்ரேலுக்கு இலங்கையர்களை வேலைக்கு அனுப்பிய விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின் பிரகாரமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக மனுஷ நாணயக்கார இன்று முற்பகல் முன்னிலையாகி இருந்த நிலையிலேயே கைது இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்ட மனுஷ […]
நேபாளத்தில் கைதான இஷார செவ்வந்தி – புகைப்படங்கள் வெளியாகின

இலங்கை மற்றும் நேபாள பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷார செவ்வந்தி உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களின் புகைப்படங்களை நேபாள ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன. இஷாரா செவ்வந்தி வீரசிங்க, ஜீவதாசன் கனகராசா, தக்ஷி நந்தகுமார், தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா, கென்னடி பஸ்தியாம்பிள்ளை மற்றும் தினேஷ் நிசாந்த குமார ஆகியோர் கைது செய்யப்பட்டதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் நடந்த […]
கைதாக போவதை முன்கூட்டியே ஊகித்துக் கொண்டேன் – இஷாரா செவ்வந்தி!

எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்ததாக, குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல எந்த நேரத்திலும் தன்னை கைது செய்வார் என அறிந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 7 மாதங்கள் நேபாளத்தில் தலைமறைவாகி இருந்த போதும், வெறுப்பு நிலைமை ஏற்பட்டது. இலங்கை செல்லலாம் என எண்ணிய போதும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நேபாளத்தில் பதுங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். சிறப்பு […]
வெளியேற்றப்பட்ட கோப்பாய் பொலிஸார்

கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை அடாத்தாக கைப்பற்றி அமைக்கப்பட்டருந்தது. தமது காணிகள் , வீடுகளை விட்டு பொலிஸார் வெளியேற்றப்பட்டு, தமது காணிகள் மற்றும் வீடுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு, யாழ் மாவட்ட நீதிமன்றில் கடந்த 2019ஆம் ஆண்டு கால பகுதியில் 07 உரிமையாளர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைகள் […]
தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை மாலை 5.45 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சிறுமியின் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்த நிலையில் உறவினரின் குழந்தைக்காக கட்டப்பட்ட தொட்டிலில் குறித்த சிறுமி விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறுமியின் […]
மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கிண்ணத்தை வென்றது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் […]
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து பிரதமர் நாட்டை வந்தடைந்தார்

2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டை வந்தடைந்தார். அவர் இன்று அதிகாலை 4.45 க்கு சீனாவின் குவாங்சோவிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-881 மூலம் நாட்டை வந்தடைந்தார். பிரதமர் தனது மூன்று நாள் பயணத்தின் இறுதி நாளா நேற்று செவ்வாய்க்கிழமை பெய்ஜிங்கில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுப் பயணம் மற்றும் […]
அனைத்து கட்சிகளையும் ஒரே மேடையில் ஏற்றுவதே எமது நோக்கம் – UNP விசேட அறிக்கை!

இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமாகும் என அக்கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இன்று (15) வெளியிட்ட விசேட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில், “இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். பல கட்சி முறைமையைப் பாதுகாக்கும் […]
பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து – 16 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டாலும், அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து போயுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. டாக்காவின் மிர்பூர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நண்பகலில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது. எனினும், அருகிலுள்ள ஒரு இரசாயனக் கிடங்கு தொடர்ந்து எரிந்து […]