மட்டக்களப்பு விபத்து ; பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயம்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பிரதேசத்தில் பாடசாலையொன்றுக்கு முன்னால் இன்று (15) இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை நிறைவடைந்ததும் தனது மகளை அழைத்துக்கொண்டு எதிரே உள்ள பாதசாரிக் கடவையினால் வீதியைக் கடந்து சென்றவேளை தீடீரென வந்த முச்சக்கரவண்டி, தாய் மற்றும் பிள்ளையின் மீது மோதிவிட்டு அருகிலிருந்த மரக்கறிக் கடையின் மீதும் மோதியுள்ளது. சம்பவத்தில் தாயும் பிள்ளையும் படுகாயங்களுக்குட்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் களுவாஞ்சிக்குடி ஆதார […]
2026 இல் பொருளாதாரம் ஆட்டம் காணும்… 3ஆம் உலகப் போர் மூழும்; பகீர் கிளப்பும் பாபா வாங்கா!

பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பல கணிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டு தொடர்பில் பாபா வாங்காவின் கணிப்புகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டு உலகம் பல இயற்கை பேரிடர்கள், விபத்துகள், வர்த்தகப் போட்டிகள், போர்களால் நிறைந்துள்ளது. 2025 முடிவடைய இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், 2026 இல் நிலைமை மேம்படும் என்று பலர் நம்புகிறார்கள். எனினும் , பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன. […]
யாழில் வாய்பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்தகதி!

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (14) நள்ளிரவு அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்த […]
வீதியில் சென்றுகொண்டிருந்த பெண் அரச உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி

குருணாகலில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகபொல்பிதிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவம் கடந்த திங்கட்கிழமை (13) மாலை 05.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குருணாகலில் பொல்பிதிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இனந்தெரியாத இருவர், மற்றுமொரு பொல்பிதிகம பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவரின் தங்கச் சங்கிலியே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. இவர் திங்கட்கிழமை மாலை தனது கடமைகளை […]
அர்ச்சுனா எம்பியால் கொதி நிலைக்கு சென்றுள்ள புலம்பெயர் தமிழர்கள்; கடும் எச்சரிக்கை!

ஜெனிவா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் – அருச்சுனா அங்கு புலம் பெயர் தமிழகள் தொடர்பில் காணொளி ஒன்று வெளியிட்ட நிலையில் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அருச்சுனா எம்பி வெளியிட்ட காணொளியில், மிகவும் மோசமாக புலம்பெயர் தமிழர்களை ஏசியதுடன், நீங்கள் எல்லாம் ஆண் பிள்ளைகளா என்றும் , அயல் வீட்டினருக்கு நன்றி கூறுங்கள் என்றும் மிக கடுமையான வார்த்தை பிரயோகங்களை கூறி காணொளி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் குறித்த காணொளி தொடர்பில் அருச்சுனா எம்பிக்கு , புலம்பெயர் தமிர்ழகள் […]
பாராளுமன்றம் ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றத்தை ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு […]
மனுஷ நாணயக்காரவிற்கு பிணை

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்புவதில் நடந்த முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (15) காலை ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் […]
ஓடு பாதையில் திடீரென நுழைந்த நரி!

இலங்கையில் இருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற Fits Airlines விமானம் தரையிறங்கும் போது நரி ஒன்று ஓடுபாதையில் நுழைந்தமையால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பங்களாதேஷின் ஹஸ்ரத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம், அதிகாலை இரண்டு மணிக்குப் பின்னர் சிறிது நேரத்தில் தரையிறங்கியது. எனினும், நரி திடீரென ஓடுபாதையில் ஓடி தரையிறங்கும் போது தரையிறங்கும் கியரில் சிக்கிக் கொண்டதாக விமான […]
நில உரிமை வேண்டும்: ஹட்டனில் கையெழுத்து வேட்டை

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட காணியை பெறுவதற்கு தகுதி உடைய அனைவருக்கும் நில உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி ஹட்டன் பஸ் நிலைய வளாகத்தில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. உரிமை மீட்போம், தலைமுறை காப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இதற்குரிய நிகழ்வில் அமைப்பின் தலைவர் பா. சிவநேசன் உட்பட பல சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர். “பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு நிலம் மற்றும் வீடுகளை வழங்குவது […]
இஷார செவ்வந்தி கைது!! நாமல் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் இரண்டு உயர் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைப் போலவே, இந்த விடயத்தையும் அரசாங்கம் அரசியலாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்த இஷார செவ்வந்தி கைது செய்யப்பட்டமை குறித்த கேள்விகளுக்கு […]