கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஐவர் கைது

தெற்கு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (14) கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களில் 670 கிலோகிராம் ஐஸ், 156 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோ கிராம் ஹாஷிஷ் ஆகியவை அடங்கியுள்ளன.
கனடாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபரால் உயிரிழந்த இந்திய இளைஞர்

கனடாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர் ஏற்படுத்திய விபத்தில் இந்திய இளைஞர் ஒருவர் பலியானார். கனடாவின் ஒன்ராறியோவில், கடந்த வாரம், அதாவது, அக்டோபர் மாதம் 6ஆம் திகதி, தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஹர்நூர் சிங் (27) மீது ட்ரக் ஒன்று மோதியது. அந்த ட்ரக்கின் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்த நிலையில், சிங் அந்த துயர விபத்தில் உயிரிழந்துவிட்டார். சிங்கின் உடலை இந்தியா கொண்டுவருவதில் பல சிக்கல்கள் இருப்பதை அறிந்த அவரது குடும்பத்தினர் பஞ்சாப் கேபினட் […]
மீண்டும் தழைக்கும் கனடா – இந்தியா நட்பு

இந்தியாவும் கனடாவும் சீர் குழ்லைந்த தமது உறவைச் சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. சிறிது காலம் கசப்படைந்திருந்த இருதரப்பு உறவு கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நிர்வாகத்தின்கீழ் மேம்பட்டது. கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் (Jaishankar) சந்தித்தார். அதோடு அனிதா ஆனந்த் (Anita Anand) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தார். இந்நிலையில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பானது இருதரப்பு […]
சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்கவுக்கு பிணை

சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்கவை பிணையில் விடுவிக்க கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சட்டத்தரணியை தலா ரூ. 5,00,000 மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய

பிரதமரும் கலாநிதியுமான ஹரிணி அமரசூரிய 2025, நாளை 16 முதல் 18 வரையில், இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். தனது பயணத்தின்போது பிரதமர், இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி உட்பட பல உயர் மட்ட பிரமுகர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார். 17ஆம் திகதி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள, NDTV உலக உச்சி மாநாட்டில் “நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்தல்” என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றுவார்.
உக்ரைன் போர் – புட்டினை கடுமையாக சாடிய ட்ரம்ப்

”உக்ரைன் உடனான போரை புட்டின் ஏன் தொடர்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வாரத்தில் முடிவடையக்கூடிய போர் 4 வருடமாக தொடர்கிறது” என ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலேயுடனான சந்திப்புக்கு பிறகு ட்ரம்ப் கூறியதாவது: விளாடிமிர் புட்டினுக்கும் எனக்கும் இடையே நல்ல உறவு இருந்ததால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். அவர் ஏன் இந்தப் போரைத் தொடர்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் போர் […]
இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

துறைமுக மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளராக இலங்கை திட்டமிடல் சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரியான டபிள்யு. எம்.டீ.ரீ. விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவினால் இன்று(15) ஜனாதிபதி செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டன. டபிள்யு. டபிள்யு. எஸ். மங்கள இதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் திட்டமிடல் ( […]
தீபாவளியை முன்னிட்டு விசேட பாடசாலை விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு மறுதினமான எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சிக்கு விடுக்கப்பட்ட ஆலோசனைக்கமைய தீபாவளி தினத்திற்கு மறுநாளான எதிர்வரும் 21 ஆம் திகதி சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தீபாவளி தினத்திற்கு […]
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினம் – முதல் கொடி ஜனாதிபதி செயலாளருக்கு அணிவிப்பு

சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு முதல் கொடி, அடையாள ரீதியாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கு இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது. இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் தலைவி நில்மினி சமரவீர, கொடியை ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவித்தார். பின்னர், வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் வெள்ளைப் பிரம்புகளை வழங்கி வைத்தார். கொடி விற்பனை […]
கூலர் வாகனத்தில் யாழ் வந்த பெரும் தொகை கஞ்சா; இடையில் மடக்கிய STF!

கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியிலிருந்து ஏ 35 வீதியூடாக கூலர் வாகனத்தில் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட சுமார் 50 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒரு கூலர் ரக வாகனத்துடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு தகவலின் அடிப்படையில் 55 கிலோ கேரள கஞ்சா, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கப்பற்றப்பட்ட கஞ்சா பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.