யாழில் கோர விபத்து – உதைப்பந்தாட்ட நடுவர் உயிரிழப்பு

யாழ் செம்மணியிப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணம் உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் சிறந்த உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் வயது -27 என்பவரே உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இஷார செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது

கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷார செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டமிட்ட குற்றவாளி சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதில் முக்கிய சந்தேக நபர் இஷார செவ்வந்தி என்ற பெண் ஆவார். கடந்த பிப்ரவரி 19 அன்று, கணேமுல்ல சஞ்சீவ என்ற ஒரு திட்டமிட்ட குற்றவாளி புதுக்கடை எண் […]