கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் செயலிழப்பு – நோயாளர்கள் சிரமம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள மூன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார். இதன்காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, கண்டி வைத்தியசாலையில் சிறுநீரக கற்களை உடைக்கும் இயந்திரம் ஒரு வருடத்திற்கு முன்பு பெறப்பட்ட போதிலும் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்று சானக தர்மவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை!! இஷார செவ்வந்தியுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களும் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷார செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவருடன் சேர்த்து யாழ்ப்பாணத்தை தம்பதியினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் நாளை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறை, மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவு மற்றும் நேபாள பாதுகாப்புப் படையினர் நடத்திய சிறப்பு கூட்டு நடவடிக்கையில் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். […]
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான ஆய்வுக் குழு கூட்டம் அப்பாவு தலைமையில் நேற்று நடைபெற்றது. பாஜக, கம்யூனிஸ்ட்கள் தவிர்த்து ஏனைய கட்சி பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். பங்கேற்றனர். பாமக சார்பில் ஜி.கே.மணி பங்கேற்றார். இதற்கமைய கூட்டத்தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் […]
இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகச் சீனப் பிரதமர் உறுதி
மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங் (Li Qiang) உடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் நிதித் துறைகளில் பல்வகைப்பட்ட ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இலங்கை, சீனாவின் ‘ஒரு சீனா கொள்கைக்கு’ (One China Principle) ஒத்துழைப்பை வழங்குவதாகவும், ஸிஸாங் (Xizang) மற்றும் சின்ஜியாங் (Xinjiang) […]
மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை – விசேட அறிவிப்பு
இந்த வருடத்திற்கான மூன்றாம் கட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு தற்போதைய மின் கட்டணத்தையே பராமரிக்க முடிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்று அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இலங்கை மின்சார சபையானது ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டிற்காக 6.8 […]
பிரபாகரனுக்கு என்றும் என் மரியாதை உண்டு
“போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “பிரபாகரன் எமது எதிரணியாக இருந்தாலும், தப்பியோடாமல் இறுதி வரை சமரிட்டார். அதற்குரிய கௌரவத்தை அவருக்கு நான் வழங்கி வருகின்றேன். போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை பிரபாகரன் […]
யார் இந்த இஷார செவ்வந்தி!! 237 நாட்களுக்கு பின் நேபாளத்தில் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தி மற்றும் நான்கு சந்தேக நபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட பின்னர் தப்பி ஓடிய 237 நாட்களுக்குப் பின்னர் இஷார செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட ஏனைவர்களில் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் என்று தெரிவிக்கப்படுகிறது. நேபாள பொலிஸார் நடத்திய நடவடிக்கையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், சந்தேக […]
காசா அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து
எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. முன்னதாக, ஹமாஸ் குழுவின் பிடியில் இருந்த 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 154 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினர் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் […]
சங்குப்பிட்டி பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்
பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப்பெண்ணின் மரணம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம்- காரைநகர் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண்ணொருவர், சங்குப்பிட்டி பாலத்தினடியில் நேற்று முன்தினம் (12) சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அவரது சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் முன்னிலையில் உடற்கூறாய்வுக்குட்படுத்தப்பட்டது. இதன்போது, அந்த பெண் படுகொலை செய்யப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது. அந்த பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட […]
வர்த்தக கலந்துரையாடலுக்காக இந்தியாவின் உயர் அதிகாரிகள் குழு இந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம்
வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியாவின் உயர் அதிகாரிகள் குழு இந்த வாரம் அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உள்ளதாகவும் இந்திய உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் இரு நாடுகளின் தலைவர்களும் அதிகாரிகளுக்கு வர்த்தக கலந்துரையாடலை மேற்கொள்ள உத்தரவிட்டனர். ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை 2025 ஆம் ஆண்டின் ஒக்டோபர் முதல் நவம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய […]