’லவ் டுடே 2’ உருவாகும் வாய்ப்பு: பிரதீப் ரங்கநாதன்!
‘லவ் டுடே’ படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ‘டியூட்’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இதில் ‘லவ் டுடே 2’ உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக “’லவ் டுடே 2’ படம் இயக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கான கதையின் யோசனையும் தயாராக இருக்கிறது. ஆனால், நான் அதை இப்போது செய்ய மாட்டேன். வேறு சில கதைகளில் எனது கவனத்தை செலுத்தவுள்ளேன். அதனைத் தொடர்ந்து […]
பிரதீப் ரங்கநாதனுக்கு நாகார்ஜுனா புகழாரம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதனுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் நாகார்ஜுனா. தெலுங்கில் ‘டியூட்’ படத்தினை விளம்பரப்படுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதீப் ரங்கநாதன். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் நாகார்ஜுனா. இதில் பிரதீப் ரங்கநாதனிடம் பேசும் போது நாகார்ஜுனா, “பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் சினிமாவில் அறிமுகமாகி விதியை மாற்றினார். அவர் ரஜினிகாந்த். சில ஆண்டுகளுக்கு முன்பு மற்றொருவர் வந்து சில முறைகளை மாற்றினார். அவர் தனுஷ். அதனைத் தொடர்ந்து உங்களிடம் அதனைக் […]
மீண்டும் தனுஷ் படம்: மாரி செல்வராஜ் உறுதி!
அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவிருப்பதை மாரி செல்வராஜ் உறுதிப்படுத்தி இருக்கிறார். துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் மாரி செல்வராஜ். இப்படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், பேட்டியொன்றில் அடுத்து தனுஷ் படத்தினை இயக்கவிருப்பதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இப்படத்தினை தனுஷ் மற்றும் லேவ்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் இது என்பது […]
அமெரிக்க வரி விதிப்புக்கு சீனா மீண்டும் எதிர்ப்பு
சீனாவுக்கு அதிக வரிகளை விதித்து அச்சுறுத்துவது சரியானது அல்ல. எங்கள் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என 100 சதவீத வரி விதித்த அமெரிக்காவுக்கு மீண்டும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு வரும், நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்து இருந்தார். இதனால், சீனப் பொருட்களுக்கான வரி […]
கல்கிசை நீதிமன்ற சம்பவம் – பொலிஸ் அதிகாரி இடமாற்றம்
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணியை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி கல்கிசை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இன்று (14) முதல் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்துள்ளார். கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணியை தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியை பிணையில் விடுவிக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் நேற்று (13) உத்தரவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை (10) கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிக்கும் […]
வெனிசுலாவில் சுரங்கம் இடிந்து விபத்து – 14 பேர் உயிரிழப்பு
வெனிசுலாவில் கனமழை காரணமாக, சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக, சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்ததையடுத்து பல தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த 14 பேரின் உடலை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளனர்.
கடலில் மிதந்து வந்த போதைப்பொருள் நிறைந்த பைகள் – கடற்படையினர் கண்டுபிடிப்பு
தெற்கு கடற்கரையில் ஏராளமான போதைப்பொருள் நிறைந்த பைகளை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். குறித்த பைகள் நீரில் மிதந்து வந்துள்ளன. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நடப்பாண்டில் இதுவரை 1,996 துப்பாக்கிகள் மீட்பு
நடப்பாண்டில் இதுவரை பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 66 ரி – 56 துப்பாக்கிகள், 69 கைத்துப்பாக்கிகள் மற்றும் 50 ரிவால்வர்கள் உட்பட 1,996 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் புஸ்ஸி ஆனந்த்
தலைமறைவாகியுள்ளதாக கூறப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியே வந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, கரூர் மேற்கு மாவட்ட […]
மனுஷ நாணயக்காரவின் முன்பிணை மனு நிராகரிப்பு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை கைது செய்ய முன், முன்பிணை மூலம் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கோரிக்கையை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மனுஷ நாணயக்கார நாளை (15) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகவும், அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த முன்பிணை […]