மடகஸ்கார் ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம்!

கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரில், ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி அண்ட்ரே நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போராட்டம், ஜனாதிபதி ரஜோலினா தலைமையிலான அரசுக்கு எதிராகத் திரும்பியது. பொதுமக்கள் ஊழல், வறுமை, மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, அந்நாட்டு இராணுவத்தின் முக்கியமான படைப்பிரிவான கெப்செட் (CAPSAT), ஜனாதிபதியின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு […]

ஒன்டாரியோ விபத்தில் 69 வயது நபர் உயிரிழப்பு!

ஒன்டாரியோ மாகாணத்தில், பிரின்ஸ் எட்வர்ட் கவுண்டியில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) தெரிவித்துள்ளது. இந்த விபத்து திங்கட்கிழமை காலை (அக்டோபர் 13) சுமார் 8.15 மணியளவில், வெல்லிங்டன் அருகே உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இடம்பெற்றது. காவல்துறை தகவலின்படி, கிழக்கு நோக்கி சென்றிருந்த ஒரு பிக்கப் லாரி சாலையை விட்டு விலகி மரங்களில் மோதியது. வாகனத்தில் ஒருவரே இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வாகனத்திலிருந்து வெளியேறியிருந்தாலும், அருகிலுள்ள இடத்தில் உயிரிழந்த நிலையில் […]

இந்திய பிரதமருடன் கனடிய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை

இரு ஆண்டுகளாக நிலவி வந்த இந்தியா–கனடா இடையிலான தூதரக பதற்றத்திற்கு பின்னர், உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) இந்தியாவுக்கு மேற்கொண்ட மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். நேற்றைய தினம் அனிதா ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் மோடியுடன் நியூடெல்லியில் நடந்த சந்திப்பின் புகைப்படத்தை வெளியிட்டார். அந்த பதிவில், இந்த சந்திப்பு, கடந்த கோடைக்காலத்தில் ஜி7 உச்சி மாநாட்டில் கனடாவில் […]

கனடாவின் பல மாகாணங்களில் பிஸ்தா பொருட்கள் திரும்பப் பெறல் அறிவிப்பு!

கனடாவின் ஒன்ராரியோ, க்யூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் விற்கப்பட்ட பிஸ்தா (Pistachio) மற்றும் அதனுடன் தொடர்புடைய உணவுப் பொருட்கள் பலவும் சால்மொனெல்லா (Salmonella) என்ற ஆபத்தான உணவுக் கிருமி தொற்றின் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, நாடு தழுவிய ரீதியில் நடைபெற்று வரும் சால்மொனெல்லா தொற்று விசாரணையுடன் தொடர்புடையதாக கனடா கூட்டாட்சி அரசு அறிவித்துள்ளது. அரசு பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும், இந்தப் பொருட்களை உண்ணவோ, விற்கவோ, பரிமாறவோ, விநியோகிக்கவோ கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 11 விக்கெட்டுகள் – தமிழக வீரர் முத்துசாமி அசத்தல்!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது . இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை […]

ஜப்பான் ஓபனில் ஜோஷ்னா சாம்பியன்!

ஜப்பானின் யோஹமா நகரில் ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 117-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள எகிப்தின் ஹயா அலியுடன் பலப்பரீட்சை நடத்தினார். 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோஷ்னா சின்னப்பா 11-5, 11-9, 6-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு […]

பிபா உலகக் கோப்பைக்கு கானா அணி தகுதி!

2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு 5-வது ஆப்​பிரிக்க அணி​யாக கானா தகுதி பெற்​றுள்​ளது. 2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி சுற்​றில் நேற்று முன்​தினம் அக்​ரா​வில் கானா – கொமொரோஸ் அணி​கள் மோதின. இதில் கானா 1-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி தரப்​பில் முகமது குடுஸ் 47-வது நிமிடத்​தில் கோல் அடித்​தார். இந்த வெற்​றி​யின் மூலம் கானா […]

இங்கிலாந்தின் திமிர்த்தனத்தைக் காட்டுகிறது – இயன் போத்தம்!

இங்கிலாந்து அணியின் ஆஷஸ் தொடருக்கான தயாரிப்பு திமிர்த்தனத்தைக் காட்டுகிறது என்று முன்னாள் ஆல் ரவுண்டர் இயன் போத்தம் சாடியுள்ளார். நவம்பர் கடைசியில் தொடங்கும் ஆஷஸ் தொடருக்கு முன்பாக நியூஸிலாந்தில் இங்கிலாந்து 6 வெள்ளைப்பந்து குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் மட்டுமே ஆடுகிறது. சிகப்புப் பந்து கிரிக்கெட்டுக்கு வெள்ளைப்பந்து தொடர் மூலம் தயாரிப்பா என்று கேட்கிறார் இயன் போத்தம். இந்த போட்டிகளுக்குப் பிறகு இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் வார்ம் அப் போட்டியில் ஆடுகின்றனர். ஆஸ்திரேலிய ஷெஃபீல்ட் ஷீல்ட் அணிகளுடன் ரெட் […]

மே.இ.தீவுகளின் 2-வது இன்னிங்ஸில் ஷுப்மன் கில்லின் கேப்டன்சி சொதப்பல்!

டெல்லி டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆனில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி நன்றாக ஆடி கடினமான ஃபைட் கொடுத்தனர். இந்திய அணி பந்து வீச்சு இந்தப் பிட்சில் ஒன்றும் எடுபடவில்லை. கேம்பெல், ஷேய் ஹோப் சதங்களை எடுத்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக கடைசி விக்கெட் ஜோடி ஜஸ்டின் க்ரீவ்ஸ் (50), ஜெய்டன் சீல்ஸ் (32) சேர்ந்து 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுமையைச் சோதித்தனர். இதில் கடைசி விக்கெட்டுக்காக மட்டுமின்றி 2-வது இன்னிங்ஸிலேயே ஷுப்மன் கில்லின் கேப்டன்சி சொதப்பலாக […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகும் பட ஷூட்டிங் நிறைவு!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக நடிக்கும் படத்தை “லவ்வர்’, ’டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் எழுதி இயக்குகிறார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஸயான் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணை தயாரிப்பு செய்கிறார். இதில் அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். நவீன கால இளைஞர்களைக் கவரும், காதல் கதையாக உருவாகும் இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 35 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் […]