கோட்டாபய ராஜபக்ஷவின் வீடு பறிப்பு; பகிரங்கமாக மறுத்த முன்னாள் ஜனாதிபதி !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கதிர்காமத்தில் மெனிக் கங்கைக்கு அருகில் உள்ள வீடு நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (13) அன்று நீர்ப்பாசனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் துறையால் வழக்குத் தாக்கல் செய்ததற்கமைய குறித்த கட்டிடம் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டது. மொனராகலை நீர்ப்பாசன இயக்குநர் அப்துல் ஜப்பார் குறித்த கட்டிடத்தைக் கையகப்படுத்தினார். அத்துடன் இந்தக் கட்டிடம் அரசாங்க அதிகாரிகளுக்கான தங்குமிடமாக பயன்படுத்தப்படும் எனவும், அதிலிருந்து அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். கட்டிடத்துடன் தனக்கு எந்த தொடர்பும் […]

இஷாரா செவ்வந்தியுடன் கைதான யாழ்ப்பாண தம்பதி ; பொலிஸார் வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இஷாரா செவ்வந்தியுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி உட்பட மேலும் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் நாளையதினம் இலங்கைக்கு கைதானவர்களில் கம்பஹா மற்றும் நுகேகொட பகுதிகளை இருவர் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேபாள பாதுகாப்புப் படையினர், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய சிறப்பு […]

ஆஸ்திரேலிய அரசியல் வாதிகளின் தொலைபேசி இலக்கங்கள் கசிவு!

பிரதமர் அந்தோனி அல்பானீஸி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் பிரபல அரசியல் வாதிகளின் தொலைபேசி இலக்கங்கள் இணையத்தில் கசியவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. அமெரிக்காவை தளமாகக்கொண்டியங்கும் வலைத்தளமொன்றிலேயே குறித்த எண்கள் கசிந்துள்ளன. மில்லியன் கணக்காணவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்களை குறித்த வலைத்தளம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி அரசு அறிந்திருப்பதாகவும், அதனை சீர்செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். எப்போதில் இருந்து மேற்படி […]

ஆளுநர் பதவிகளில் அதிரடி மாற்றம்

தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள கட்டத்தில் முதல் தடவையாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து எந்நேரமும் தமது மாகாண ஆளுநர்களிள் மாற்றங்களைச் செய்யக்கூடும் எனக் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு மாகாணத்தினதும் ஆளுநர்களின் செயற்பாடுகள், பெறுபேறுகள், நடவடிக்கை முன்னேற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மதிப்பீடுகளைத் தயாரித்து வருகின்றது என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. அவற்றின் அடிப்படையில் ஜனாதிபதியின் முடிவுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழர்களின் […]

பிம்ஸ்டெக் அமைப்புடனான உறவை வலுப்படுத்துகிறது இலங்கை!

பிராந்திய செழிப்பு மற்றும் மீள்தன்மைக்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, பிம்ஸ்டெக்குடன் நெருக்கமாகப் பணியாற்ற சிறிலங்கா உறுதிபூண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர் இந்திரா மணி பாண்டேவை நேற்று வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிம்ஸ்டெக் கட்டமைப்பின் கீழ் நடைபெற்று வரும் முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து இரு தரப்பினரும் ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தியதாகவும், பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை […]

செம்மணி புதைகுழி அகழ்வுக்கு தடையாக மாறியுள்ள மழை!

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அமைச்சால் நிதி வழங்கப்பட்டும் தொடர்ச்சியான மழையால் அகழ்வு தாமதிக்கப்பட்டுள்ளது. செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் நீதிவான் உள்ளிட்ட குழுவினர் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிப் பகுதியைப் பார்வையிட்டனர். இதன்போது, அந்த இடம் ஒரு களிமண் தரையாகக் காணப்பட்டது. தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் அந்த இடத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்வது மிகவும் […]

இத்தாலி பிரதமரை அழகு பாராட்டிய ட்ரம்ப்!

நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இத்தாலி பிரமரை விமர்சித்தமை பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. காசா போர் நிறுத்த ஒப்பந்தம் இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடன் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி (Abdel Fattah El-Sisi), துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdoğan) மற்றும் கத்தார் […]

நிலுவை வரியை வசூலிப்பதற்குரிய பொறிமுறையைத் தயாரிக்கவும் – கொழும்பு மாநகரசபைக்கு கோபா குழு அறிவுறுத்தல்!

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) கொழும்பு மாநகரசபைக்கு அறிவுறுத்தியது. மதிப்பீட்டு வரியைப் பராமரித்தல் உள்ளிட்ட பல செயற்பாடுகளுக்காக KOICA திட்டத்தின் மூலம் ஒரு தரவுத்தள அமைப்பை உருவாக்க எதிர்பார்ப்பதாக கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் கோபா குழுவிடம் தெரிவித்தனர். இதற்கு அமைய, KOICA திட்டத்துடன் கலந்துரையாடி மதிப்பீட்டு வரியை அறவிடும் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரிக்க தயாரிக்கும் தரவுத்தள அமைப்பைப் பயன்படுத்தி அடையக்கூடிய […]

ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டண அதிகரிப்பு நிறுத்தப்பட்டது – சஜித் பெருமிதம்!

நாட்டில் காணப்படும் வயதில் குறைந்த ஜனநாயக அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஆகும். 2020 பெப்ரவரியில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி 30 ஆண்டுகளாக தேர்தல்களுக்கு முகம்கொடுத்த அரசியல் கட்சியாக சிலர் கருதினாலும், ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 4 தேர்தல்களை மட்டுமே எதிர்கொண்டுள்ளன. இக்காலப் பிரிவினுள் இந்நாட்டில் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பெரும் பணிகளை ஆற்றி வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அரசாங்கமும், மின்சார சபையும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்கள் […]

பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள் – ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்குத் தெரிவிப்பு!

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (14) முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டுக்காக இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் […]