நியூஸிலாந்துக்கு 259 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை!

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு 259 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 258 ஓட்டங்களைக் குவித்தது. இந்த வருட மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். உலகக் கிண்ணத்தின் முதல் இரண்டு போட்டிகளில் 4ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடிய […]
கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை கழிவுகளுடன் நிறுத்தப்பட்டுள்ள வாகனம் அகற்றப்படமாட்டது – மன்னார் நகரசபை முதல்வர்!

மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது என மன்னார் நகர சபை முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார். மன்னார் நகர சபையில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நகர சபை பிரிவில் அகழப்படுகின்ற கழிவுகளை அகற்றி சேகரிப்பதற்கான […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 03 இருமல் மருந்துகளை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தடை!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ராஜஸ்தானிலும் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வந்த கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் கோல்ட்ரிப் இருமல் மருந்தில் டை எதிலீன் கிளைக்கால் என்ற இரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பல்வேறு நிறுவனங்களின் மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதன்போது மத்திய பிரதேசத்தில் மேலும் 02 இருமல் மருந்துகளுக்கு […]
24 மணிநேரத்திற்குள் கோப்பாய் பொலிஸார் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேற உத்தரவு!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம், கடந்த 30 வருடங்களாக பொலிசாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ளது. அந்த காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்கு பலன்கிட்டவில்லை. இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான […]
பொதுப் போக்குவரத்தில் மதகுருமாருக்கு முக்கியத்துவம் – யாழில் நடந்த அங்குரார்ப்பண நிகழ்வு!

வடக்கில் பொதுப் போக்குவரத்தில் மதகுருமாருக்கன ஆசனம் ஒதுக்கல் தொடர்பன செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள நெடுந்தூர சேவையை முன்னெடுக்கும் பேருந்து நிலையத்தில் குறித்த நிகழ்வு இன்று (14) முற்பகல் இடம்பெற்றது குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் கைலாசபிள்ளை சிவகரன் கலந்து சிறப்பித்து குறித்த அங்குரார்ப்பண நிகழ்வின் பேருந்துகளில் ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார். யாழ் மாவட்டத்தில் இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இம் முயற்சியாக […]
ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம் எம்பிகள் வருகை!

வடக்கு ஆசிரிய இட மாற்றத்தில் மோசடி அரசியல் தலையீடு.. இரத்து செயாவிட்டால் தொடர் போராட்டம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் எச்சரிக்கை. வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாக கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் செவ்வாய்கிறமை போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் […]
சண்டிலிப்பாயில் வன்முறை கும்பல் அட்டகாசம் – முச்சக்கர வண்டி , மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வாகனங்களுக்கு தீ வைத்து அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது. சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை , முகமூடிகள் அணிந்தவாறு நால்வர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று நுழைந்து வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து விட்டு , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து தப்பி சென்று இருந்தது. பின்னர் கொள்ளையடித்து சென்ற மோட்டார் சைக்கிளை வீட்டில் இருந்து சுமார் […]
யாழ் . பொது நூலகத்தில் வெளிநாட்டு இராணுவத்தினர்!

பல நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வரும் 30 பேர் அடங்கிய குறித்த குழுவினர் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு , யாழ் . பொது நூலகத்தை பார்வையிட்டனர். நூலகத்திற்கு வந்த குழுவினரை , நூலகர் மற்றும் நூலக உத்தியோகஸ்தர்கள் வரவேற்று , நூலகம் […]
வெளிநாடு அனுப்புவதாக பலகோடி சுருட்டிய யாழ் நபர்; ஏமாந்து நிற்கும் மக்கள்!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் காணப்படுகின்றன. இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அந்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்று திங்கட்கிழமை (13) கைது செய்தனர். கைது செய்து விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் […]
சுற்றுலா விடுதியில் பொலிஸார் அட்டூழியம்

கொழும்பு, வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்று அங்கிருந்த இரண்டு பணியாளர்களை தாக்கி காயப்படுத்திய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு மத்திய குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆவர். இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் கடந்த 12 ஆம் திகதி கொழும்பு, வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்று அங்கிருந்த பணியாளர்களிடம் கைடயக்கத் தொலைபேசிகளை கேட்டு மிரட்டியுள்ளனர். இதன்போது இரண்டு பணியாளர்களும் தங்களது […]