பிரசாரம் தொடங்குகிறார் பிரதமர் மோடி!
243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி ஆகிய பிரதான கூட்டணிகளும், பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜனசுராஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. தொகுதி பங்கீடு, வேட்பாளர் […]
உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். விசாகப்பட்டினத்தில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் […]
சர்வதேச கால்பந்து போட்டியில் அதிவேகமாக 50 கோல்: சாதனை படைத்த நார்வே வீரர்
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். இதுவரை 17 அணிகள் தகுதி பெற்றுள்ளன. தகுதி சுற்று போட்டிகள் தற்போது கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஐரோப்பிய மண்டலத்துக்கான தகுதி சுற்றில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த ‘ஐ’ பிரிவு […]
இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல்!
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி நடப்பு தொடரில் 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணியை 50 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை […]
சுழற்றுவதில் சூரர்: 5 விக்கெட் வீழ்த்தி குல்தீப் அபாரம்!
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை கைப்பற்றினார். இதுவரை மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 19 விக்கெட்களை வேட்டையாடியுள்ளார். மேலும், அந்த அணிக்கெதிராக 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்களையும், 9 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்களையும் அவர் சாய்த்து சுழற்றுவதில் சூரர் என நிரூபித்துள்ளார். அதேபோல் இடது கை மணிக்கட்டு சுழற்பந்து […]
‘பட்டாபி எனும் நான்’ – எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 2
நான், நாகப்பட்டினம் தேசிய ஆரம்பப்பள்ளியில் படித்த காலங்களில் டெக்னாலஜி அதிகமாக வளர்ச்சியடையவில்லை. இப்போதிருப்பது போல, எல்.கே.ஜி. யூ.கே.ஜி வகுப்புகளும் அப்போது கிடையாது. ஒன்றாம் வகுப்பிலிருந்துதான் படிப்பை தொடங்க வேண்டும். 1962-ம் ஆண்டு நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த வயதில் சின்னப்பிள்ளைகளுக்கு என்ன சேட்டை, விளையாட்டுத்தனம் இருக்குமோ, அது அனைத்தும் எனக்கும் இருந்தது. ஆனால் கூடவே பயமும் அதிகமாக இருக்கும். வழக்கம் போல பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன்! அப்போது இந்தியா மீது சீனா, போர் தொடுக்கப்போகிறது […]
‘காட்டாளன்’ படத்தில் தாய்லாந்து ஆக்ஷன் இயக்குநர்!
உன்னி முகுந்தன் நடித்து சூப்பர் ஹிட்டான ‘மார்கோ’ படத்தை தயாரித்த ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் அடுத்துத் தயாரிக்கும் படம், ‘காட்டாளன்’. இதில் மலையாள நடிகர் பிபி (ஆண்டனி வர்கீஸ்) முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன், ராஜ் திரண்டாசு, பாலிவுட் நடிகர் பார்தத் திவாரி ஆகியோர் நடிக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கும் இப்படத்தை பால் […]
ராப் பாடகரின் வாழ்வை சொல்லும் ‘பேட்டில்’
ராப் பாடகரின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் விதமாக உருவாகியுள்ள படம், ‘பேட்டில்’. அன்புடன் அர்ஜுன், ஆராத்யா நடிக்கும் இந்தப் படத்தில் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா, முனீஷ்காந்த், சுருளி, திஹான், திவ்ய முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எலைட் டாக்கீஸ் சார்பில் கே.பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நாராயணன் இயக்கியுள்ளார். படம் பற்றி இயக்குநர் நாராயணன் கூறும்போது, “ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை முழுவதும் சொல்லும் முதல் தமிழ்ப் படம் இது. ராப் பாடகர்கள் ஒன்று […]
‘கல்கி 2898 ஏடி’ படத்தில் தீபிகாவுக்கு பதில் ஆலியா பட்!
அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்த படம், ‘கல்கி 2898 ஏடி’. கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். நாக் அஸ்வின் இயக்கியிருந்த இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்ததது. இப்படத்தின் 2-ம் பாகப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருந்த நிலையில், படத்தில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் நீக்கப்பட்டார். இதைத் தயாரிப்புத் தரப்பு அறிவித்திருந்தது. எட்டு மணி நேர பணி, 25 சதவீத சம்பள உயர்வு, அவருடைய குழுவினருக்கான தங்குமிடம் […]
ஹாலிவுட் நடிகை டயான் ஹீட்டன் மறைவு!
ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை டயான் ஹீட்டன் (79) உடல் நலக்குறைவால் காலமானார். 1968-ம் ஆண்டில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டயான் கீட்டன், ‘லவ்வர்ஸ் அண்ட் அதர் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (1970) என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து ‘த காட்ஃபாதர்’ வரிசை படங்கள், ‘பிளே இட் அகெய்ன், சாம்’, ‘லவ் அண்ட் டெத்’, ‘அன்னி ஹால்’, ‘க்ரைம் ஆஃப் த ஹார்ட்’, ‘த பர்ஸ்ட் வய்வ்ஸ் கிளப்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, […]