ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் வந்தடைந்ததை இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியது
காசாவில் விடுவிக்கப்பட்ட முதல் ஏழு பணயக்கைதிகள் இஸ்ரேலுக்குத் திரும்பிவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இன்று விடுவிக்கப்பட்ட 20 பணயக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. 2023 ஒக்டோபர் 07 திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கமைய அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். பணயக்கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேல் 250 பலஸ்தீன கைதிகளையும் 1,700 க்கும் மேற்பட்ட கைதிகளையும் விடுவிக்கும் என […]
கல்கிஸ்ஸை சம்பவம்- பொலிஸ் அதிகாரிக்கு பிணை
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் கல்கிஸ்ஸை நீதவான் இன்று (13.10) விடுவித்தார். இந்த வழக்கு விசாரணை நவம்பர் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் – மூவர் கைது
இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலாம் துஷ்பிரயோம் செய்யப்பட்ட நிலையில், மாணவிகள் இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி இரவில் வெளியில் வந்தபோது மூன்று பேர் கும்பலால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி ஒடிசாவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் […]
மின்சார கட்டண திருத்தம் – நாளை இறுதி முடிவு
இந்த ஆண்டின் இறுதி மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவை நாளை அறிவிப்பதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் கடைசி காலாண்டில், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மின்சார கட்டணத்தில் 6.8 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை (CEB) கோரியுள்ளது. இது தொடர்பான பொது ஆலோசனை செப்டம்பர் 18 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் தொடங்கியது, இறுதி ஆலோசனை கூட்டம் கடந்த எட்டாம் திகதி மேல் மாகாணத்தில் நடைபெற்றது. முன்வைக்கப்பட்ட கருத்துகள் […]
பற்றுச்சீட்டு வழங்காத பேருந்து நடத்துனர்கள் இடைநீக்கம்
பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்காமைக்காக மேல் மாகாணத்தில் 57 பேருந்து நடத்துனர்கள் தற்காலிகமாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற தளபதி காமினி ஜாசிங்க தெரிவித்தார். இடைநீக்கம் செய்யப்பட்ட நடத்துனர்களுக்கு மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து ஆணையம் ஒரு நாள் பயிற்சிப் பட்டறையையும் நடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். […]
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் டொலர் வருவாய்
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு செப்டம்பரில், கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடும்போது 140.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக வருவாயாக கிடைத்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி […]
சீன ஜனாதிபதியுன் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சந்திப்பு
சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனும், நாளை அவரது பிரதி பிரதமர் லி கியாங்குடனும் இருதரப்பு சந்திப்பை நடத்தவுள்ளார். சீனாவில் நடைபெறும் 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பெண்கள் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரியா நேற்று சீனாவை சென்றடைந்தார். பிரதமரை சீனத் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் திருமதி. கவோ ஷூமின் வரவேற்றார். இந்த விஜயத்தின் முதல் நாளில், பிரதமர் தடைசெய்யப்பட்ட நகரம் […]
கல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்
கல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகராக எச்.டீ.எம்.துஷார உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய அவர் அந்த பதவியிலிருந்து வைத்திய சேவை பிரிவின் பொது கடமைக்கென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி மற்றும் பொலிஸ் அதிகாரிக்கிடையில் ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய இந்த இடமாற்றம் […]
மகிந்த மற்றும் மைத்திரிக்கு குண்டு துளைக்காக வாகனங்களை மீள வழங்குவது குறித்து பரிசீலனை – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்
முன்னாள் ஜனாதிபதிகளான மந்தத ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களை திருப்பித் தருமாறு விடுத்த கோரிக்கைகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரிமைகள் ரத்து செய்தல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 2025 ஒக்டோபர் தொடக்கத்தில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட சலுகைகளை […]
உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்
உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78 ஆவது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த 78 ஆவது மாநாட்டை இலங்கை நடத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய பொறுப்பதிகாரி கத்ரீனா போஹ்மே ஆகியோரும், 8 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்கள், இரண்டு […]