யாழில். டெங்கு பரவும் சூழல் – 8000 ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்றவாறு வீட்டு வளாகத்தினை பேணிய குற்றச்சாட்டில் இரு குடியிருப்பாளர்களுக்கும் 16 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கரவெட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தின் போது, இரு வீடுகளில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழல் காணப்பட்டதை தொடர்ந்தும் வீட்டின் குடியிருப்பாளர்கள் இருவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு நேற்றைய தினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, குடியிருப்பாளர்கள் இருவரும் தம் மீதான […]

ஒன்றரை வயது குழந்தையை துஸ்பிரயோகம் செய்த 65 வயதுடைய நபர்

காலி மாவட்டத்தில் 1 வயது 6 மாதம் நிரம்பிய குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 65 வயதுடைய நபருக்கு  15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ​​2018 ஆம் ஆண்டில், குற்றவாளி தனது அயல் வீட்டில் தாயுடன் இருந்த குழந்தையை வெளியில் அழைத்துச் செல்வதாகக் கூறி, அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன்,  5 […]

ஹமாஸ் அமைப்பினரால் 13 பணயக்கைதிகள் விடுவிப்பு

ஹமாஸ் அமைப்பினரால் 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உள்ளடக்கிய இரண்டாவது குழு மத்திய காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை ஒக்டோபர் 10 ஆம் திகதி  இஸ்ரேலிய இராணுவம் காஸாவிலிருந்து  தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா தாக்குதல்

தென் சீன கடலில்  பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பலை சீன கடற்படையினர்  சேதப்படுத்தியுள்ளதாக பிலிப்பைன்ஸ்  கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சீன கப்பல்கள் வலுவான தண்ணீா் பீரங்கியை பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் கப்பலை தாக்கியதால் அக் கப்பல் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கப்பலில் இருந்த பணியாளா்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனா்.

பெண்களின் உரிமைகள், சமத்துவத்திற்கான கூட்டு உறுதிப்பாட்டை வலியுறுத்துவோம் – ஹரிணி

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்துவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மக்கள் சீனக் குடியரசின் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஒக்டோபர் 13 ஆம் திகதி பீஜிங்கில் அமைந்துள்ள சீன தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) நடைபெற்ற உலகத் தலைவர்களின் பெண்கள் பற்றிய மாநாடு 2025 இன் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே […]

இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர் பணிப்புறக்கணிப்பு

வட மாகாணத்தில் இன்று (13) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டமொன்று இல்லாமையினால் நாடு தள்ளாடிக் கொண்டிருக்கின்றது.

சமூகத்தை ஓர் பிரமிட்டாக கருதினால் அதன் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை, நாட்டில் எல்ல மட்டத்திலும் எல்லா வகையிலும் அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக, நாட்டில் வறுமை தற்போது 50% ஆக அதிகரித்து காணப்படுகின்றன. 2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையே பெரும் சவாலாக அமையும். 5 பில்லியன் டொலர் வருடாந்தம் கடனைத் திருப்பிச் செலுத்த, வெளிநாட்டு கையிருப்புக்களை நாம் உயர் […]

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ண தெரிவித்தார். ஐஸ் போதைப்பொருள், கஞ்சா, கசிப்பு மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் சம்பவம் – சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தமிழக வெற்றிக் கழம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது சம்பவம் குறித்து […]

உடையார்கட்டில் ஐஸ் போதை பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை, 108 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் (12.10.2025) உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள குறித்த நபரின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது விற்பனைக்காக வைத்திருந்த ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் […]