ஹரிணி அமரசூரிய – சீன மக்கள் குடியரசின் பிரதமர் இடையே சந்திப்பு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சீன மக்கள் குடியரசின் அரச பேரவையின் பிரதமர் லி கியாங் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தித் துறைகளுக்கு உதவுதல் போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அத்துடன் கல்வித் துறையில் ஸ்மார்ட் வகுப்பறைகள், புலமைப்பரிசில்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான விசேட பட்டப் […]

பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியினால் பாகிஸ்தானில் நீண்டகால பொருளாதார தேக்கநிலை ஏற்படும் அபாயம்!

பாகிஸ்தான் நீண்டகால பொருளாதார தேக்க நிலைக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர் அசாத் அலி ஷா எச்சரித்துள்ளார். உலக வங்கியின் அண்மைய 2025-26 நிதியாண்டு அறிக்கையில் வெறும் 2.6% வளர்ச்சியை மட்டுமே கணித்துள்ளது. இது நான்கு ஆண்டு கால மோசமான செயல்திறனைத் தொடர்ந்து மோசமானது. சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAP) முன்னாள் தலைவர் அசாத், “உலக வங்கியின் சமீபத்திய பாகிஸ்தான் அபிவிருத்தி புதுப்பிப்பு, […]

10 பேர்ச்சஸ் காணிரை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவும்!

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மலையக மக்கள் தொடர்பில் ஜனாதிபதியே அதிகம் கதைத்திருந்தார். எனவே, பண்டாரவளையில் அசல் காணி உரித்து வழங்கப்படும் என நம்பி இருந்தேன். ஆனால் […]

மத்திய கிழக்கின் வரலாற்று விடியல் – இஸ்ரேல் பாராளுமன்றில் ட்ரம்ப் உரை!

இஸ்ரேல் – காசா இடையிலான போர் முடிவு மட்டுமல்ல புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல் என்றும் அமெரிக்காவை போன்று, இஸ்ரேலுக்கு பொற்காலம் ஏற்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பாராளுமன்றில்  இன்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இஸ்ரேல்- காசா இடையிலான ஒப்பந்தம் மூலம் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பல வருட இடைவிடாத போர் மற்றும் முடிவில்லா ஆபத்துக்குப் பிறகு, இன்று வானம் அமைதியாக […]

சம்பள உயர்வு – பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச சேவை மற்றும் தனியார் துறையின் சம்பள அதிகரிப்புக்கு ஏற்ப, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்கும் பரிந்துரை குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு ஏற்ற சம்பளத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை […]

“காணி” என்ற மணமகள்,“வீடு” என்ற மணமகன் இல்லாத காணி-வீட்டு உரிமை கல்யாணம்!

வீடு கட்டும் காணி அடையாள படுத்தவில்லை. காணியில் அடிக்கல் நாட்டு விழா, நடத்த வில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்த வில்லை. கட்டி முடிக்க பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், வீதி ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் முடித்து வைக்க படவில்லை. இதில் எதுவும் செய்யாமல், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு திட்ட நிகழ்வு ஒன்றில், பயனாளிகள் என்று சிலரை அழைத்து வெறும் காகிதத்தில் உங்களுக்கு […]

நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்பு

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்த கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்த நிஷாந்த ஜயவீர ஆகியோர் இன்று (13) காலை நிதி அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அமைச்சுப் பதவியை வகிப்பது ஒரு சலுகையாக கருதுவது வரலாற்றின் இணைந்துள்ள ஒரு கருத்து என்றும், அது உண்மையில் ஒரு சலுகை அன்றி […]

மைத்ரியிடம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு 5 மணித்தியால விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார். சுமார் ஐந்து மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர், மதியம் 2.00 மணியளவில் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலமளிக்கவே முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சர்வதேச மொழிபெயர்ப்புத் தினம் – பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தில் விசேட நிகழ்வு

ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் 30ஆந் திகதி கொண்டாடப்படுகின்ற சர்வதேச மொழிபெயர்ப்புத் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று இலங்கைப் பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் 02 இல் கடந்த மாதம் 30ஆந் திகதி இடம்பெற்றது. பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சட்டத்தரணி சீ.ஜே. கருணாரத்னவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மனித குலத்தின் இருப்புக்கும், வளர்ச்சிக்கும் மொழி எனும் சிறப்பான ஆயுதம் பயன்படும் விதம் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த […]

மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகும் தேசிய மக்கள் சக்தி

மாகாணசபைத் தேர்தலுக்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை தென்னிலங்கைப் பிரதான கட்சிகள் உள்ளகரீதியில் முன்னெடுத்துள்ளன. ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, வடக்கு – கிழக்கில் களமிறங்கவுள்ள தமது கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் பற்றி அவதானம் செலுத்தியுள்ளது. குறிப்பாக வடக்கு முதல்வர் வேட்பாளரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ். வந்தபோது கூட இது சம்பந்தமாக இராமலிங்கம் சந்திரசேகரிடம் கலந்துரையாடியுள்ளார் என அறியமுடிகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கட்சியின் முன்னாள் எம். […]