ஒடிசாவில் விசாரணை நடத்த இளைஞரை அனுப்பிய எஸ்ஐ!

ஒடிசாவின் பத்ரக் மாவட்டம், பத்ரக் புறநகர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கார்த்திக் ஜெனா. இவரிடம் ராசிக்பாகா கிராமத்தில் ஒரு குடும்ப தகராறை விசாரிக்கும் பொறுப்பு தரப்பட்டது. ஆனால் இவர் அங்கு செல்லாமல் அந்த வழக்கை கையாள பியூஷ் பாண்டா என்ற இளைஞரை அனுப்பியுள்ளார். இந்நிலையில் கிராமத்துக்கு சென்ற பியூஷ் பாண்டா, பிரச்சினையை தீர்த்து வைக்க ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர், அவர் போலீஸ் இல்லை என தெரிந்து கொண்ட கிராம மக்கள், அவரை பிடித்து […]

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராஜஸ்தான் இளைஞர் கைது!

பாகிஸ்​தானுக்கு உளவு பார்த்​த​தாக ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வார் மாவட்​டத்தை சேர்ந்​த மன்​கத் சிங் என்​பவரை போலீ​ஸார் நேற்று கைது செய்​துள்​ளனர். இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு பாகிஸ்​தானை சேர்ந்த இஷா சர்மா என்ற பெண்​ணுடன் ஆன்​லைனில் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. அந்த பெண் பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பை சேர்ந்​தவர் ஆவார். ‘ஹனி டிராப்’ எனப்​படும் ஆளை மயக்கி அவரிட​மிருந்து தகவல்​களை பெறு​வது​தான் இந்த உளவாளி​களின் வேலை​. அந்த பெண்​ணிடம் மயங்​கிய மன்​கத் சிங், ராஜஸ்​தானில் செயல்​பட்டு வரும் […]

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. கொழும்புவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நாட் ஸ்கைவர் நிலைத்து ஆடி சதமடித்து அசத்தி 117 ரன்கள் எடுத்தார். டாமி பியூமண்ட் 32 ரன்கள் எடுத்தார் […]

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்ராகிம் ஜட்ரன் சிறப்பாக ஆடி 95 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 3 விக்கெட்டும், தன்ஜிம் ஹசன், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 191 […]

வூஹான் ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி!

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை சபலென்கா 6-2 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஜெசிகா பெகுலா அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-2) என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா தொடரில் இருந்து வெளியேறினார். maalaimalar

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை!

13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 59 ரன் வித்தியாசத்தில் […]

மேற்கு இந்தியத் தீவுகள் 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்!

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 518 ரன்​கள் குவித்து முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது. கேப்​டன் ஷுப்​மன் கில் சதம் விளாசி​னார். டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 318 ரன்​கள் குவித்​தது. யஷஸ்வி […]

இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 90 பேருக்கு ‘கலைமாமணி’ விருதுகள்!

தமிழ்​நாடு இயல் இசை நாடக மன்​றம் சார்​பில் கடந்த 2021, 2022, 2023-ம் ஆண்​டு​களுக்​கான ‘கலை​மாமணி’ விருதுகளை 90 கலைஞர்​களுக்கு முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார். நமது கலைஞர்​கள் இங்கு மட்​டுமின்​றி,உலகம் முழு​வதும் சென்று தமிழ்க் கலைகளை பரப்ப வேண்​டும் என்று அவர் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். தமிழ்​நாடு இயல் இசை நாடக மன்​றம் சார்​பில், 2021, 2022, 2023-ம் ஆண்​டு​களுக்​கான ‘கலை​மாமணி’ விருதுகள் வழங்​கும் விழா சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. அகில இந்​திய விருது பெறும் […]

“தேனிலவுக்கு கூட ஏற்பாடு செய்வார்கள்” – த்ரிஷா பதிலடி!

திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு நடிகை த்ரிஷா கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். நடிகை த்ரிஷாவுக்கு சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும், இது தொடர்பாக இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவியது. இந்த தகவலுக்கு நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். தனது பதிவில், “என்னுடைய வாழ்க்கையை எனக்காக மற்றவர்கள் திட்டமிடுவது எனக்கு பிடித்திருக்கிறது. தேனிலவைக் கூட அவர்கள் ஏற்பாடு செய்வதற்காக […]

திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா உருக்கம்!

மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார், நயன்தாரா. சரத்குமார் நடித்த ‘ஐயா’ படம் மூலம் தமிழுக்கு வந்த அவர், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைத் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், அதற்காகப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “22 ஆண்டுக்கு முன் கேமராவுக்கு முன்னால் முதன்முதலில் நின்ற போது, திரைப்படங்கள்தான் என் […]