முதலீடுகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கினார் ஜனாதிபதி அநுர!

தற்போதைய அரசாங்கத்தின் கீழ், நாட்டிற்குள் வரும் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். முதலீட்டு வாய்ப்புகள், வணிகச் சூழல் மற்றும் சட்ட கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, ஜனாதிபதி வந்துள்ள அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலீடுகளுக்குப் பாதுகாப்பான சூழல் தற்போது நிறுவப்பட்டுள்ளதாகவும், முந்தைய நிர்வாகங்களின் கீழ் நிலவிய முறைகேடுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். முதலீட்டுச் செயல்பாட்டில் […]
இலங்கை பொறுப்பு கூறல் திட்டம்: நிதி ஒதுக்கீடு குறித்த அறிவித்தல்!

2025 ஒக்டோபர் முதல் 2027 செப்டம்பர் வரையிலான இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு நிதியளிக்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரியுள்ளது. திட்டச் செலவுகள், பயணச் செலவுகள், புதிய ஆட்சேர்ப்புகள், பயணங்களின் போது உள்ளூர் விளக்கம் தொடர்பான ஒப்பந்தச் சேவைகள், செயற்கைக்கோள் படம் பகுப்பாய்வு போன்றவற்றை ஈடுகட்டுவதாக இந்த நிதி கோரிக்கை கோரப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் இந்தத் திட்டம், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச […]
டெல்லியில் ஆப்கன் அமைச்சர் கூட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் டெல்லியில் நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது சர்ச்சையாகி உள்ளது. அதில், டெல்லியின் பெண் பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. தலிபான் பெண்களுக்காக இந்தியாவின் பெண் பத்திரிகையாளர்கள் அக்கூட்டத்தில் கேள்வி எழுப்பும் வாய்ப்பும் இல்லாமல் போய் உள்ளது. பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் பதிவாகின. இதே கருத்தை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். முக்கியமான […]
போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவில் அமெரிக்க படை முகாம்!

அமெரிக்கா, எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள், வீரர்கள் காசாவில் முகாமிட்டு போர் நிறுத்தத்தை கண்காணிக்க உள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் இராணுவம், காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே போர் நடைபெற்று வந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சியால் இருதரப்பினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த 9-ம் திகதி இரு தரப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. […]
அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 12 பேர் காயம்

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பாடசாலையில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மிசிசிபி மாகாணத்தில் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது. இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர். கால்பந்து போட்டியின் முடிவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் நிலைமை சுவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை […]
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது தலிபான் படை – 12 பேர் பலி!

ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 12 பேர் பலியாகினர். பாகிஸ்தான், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுடன் மற்றொரு பக்கம் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து செயல்படும் டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில், ஆப்கானிஸ்தானின் டி.டி.பி., அமைப்பு நடத்திய […]
“மஹிந்தவை தூக்கிலிடும் எண்ணம் இல்லை”

அண்மையில் மாத்தறையில் தான் ஆற்றிய உரை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிடும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருக்கவில்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெளிவுபடுத்தினார். “2009 ஆம் ஆண்டு பெப்ரவரியில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டதாலும், பாதுகாப்புப் படையினரின் முன்னணி பாதுகாப்பு பிரிவை அழித்ததாலும், முன்னாள் ஜனாதிபதி தூக்கிலிடப்பட்டிருப்பார் என்றுதான் நான் கூறினேன். தேசத் துரோகம் செய்த ஒருவரை தென் கொரியாவில் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் கொண்டு சுட்டுக் கொன்றிருப்பார்கள் […]
அரசாங்கத்தை ஆட்டம்காண வைக்க ரணில் தலைமையில் வியூகம்!

முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை நேற்று (10) நடைபெற்றது. கொழும்பு ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பொதுஜன ஐக்கிய முன்னணித் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சஞ்ஜீவ எதிரிமான்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எதிர்வரும் நவம்பர் மாத […]
மதுரையில் நாளை பா.ஜ.க. பிரசார சுற்றுப்பயணம்- நிர்மலா சீதாராமன் பங்கேற்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் சென்று ஆதரவு திரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் […]
ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் உயர்வு!

பண்டிகை காலம் என்றாலே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில் உறுதியாக உள்ளனர். தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதன் தேவையை கருத்தில் கொண்டு கட்டணங்களை 3 மடங்கு உயர்த்தி விட்டனர். சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து […]