நாரம்மல பகுதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு

நாரம்மல, அலஹிடியாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இன்று (12) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறியின் பின்புறத்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் நாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை […]
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் நாட்டை வந்தடைந்தார்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) இன்று (12) நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இலங்கையில் இடம்பெறும் 8 ஆவது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சர்வதேச சுகாதார உச்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக பங்கேற்பதற்காக அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இவர் இன்று முற்பகல் 9.40 அளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 660 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இதன்போது அவரை சுகாதாரம் […]
பங்களாதேஷில் இந்துக்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை – முகமது யூனுஸ்

பங்களாதேஷில் இந்துக்கள் மீது எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்று அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் இந்திய ஊடகங்களின் போலி அறிக்கைகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது இந்தியாவின் மிகப்பெரிய அம்சம் போலி செய்திகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக வரும் செய்திகள் தவறானவை. இந்த விடயத்தில் அரசாங்கம் எச்சரிக்கையாக இருப்பதாக முகமது யூனுஸ் கூறியுள்ளார். பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற […]
பிரதமர் இன்று சீனாவுக்கு விஜயம்

சீன அரசாங்கத்தின் அழைப்பைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சீனாவுக்கு சென்றார். “ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயன்முறை” என்ற கருப்பொருளின் கீழ் பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த உயர்மட்ட உச்சிமாநாட்டை சீன அரசும் ஐ.நா. பெண்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். பிரதமரின் இந்த விஜயத்தின் போது, பாலின சமத்துவம், பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் […]
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல்

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூவியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவம் கொலை செய்திருந்தது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவது எமக்கு சவாலானது

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த எங்களால் அவர்களை கைது செய்ய மட்டுமே முடியும். அவர்களை கைது செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் கையளிப்பதுடன் எங்கள் கடமை முடிந்து விடும் என வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்தார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவது எமக்கு […]
டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணி!

இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிப்பதற்கு முன்னதாக, டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். பணயக்கைதிகள் “வீட்டுக்கு வருகிறார்கள் என இந்த பேரணியின் போது உரையாற்றிய அமெரிக்க சிறப்பு தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளார். காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை சாத்தியமாக்கியதற்காக டொனால்ட் டிரம்பையும் அவர் பாராட்டினார். போர் நிறுத்த அறிவிப்பிற்கு பின்னர் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 500,000 பேர் வடக்கு காசாவிற்குத் திரும்பியதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே போரை […]
புலிகளுக்கு நிதி வழங்கிய மஹிந்த: போர் இரகசியங்களை அம்பலப்படுத்தும் பொன்சேகா!

” 2005 இல் புலிகளுக்கு நிதி வழங்கியமை மற்றும் 2009 இல் வழங்கப்பட்ட 48 மணிநேர போர் நிறுத்தம் உள்ளிட்ட தேசத்துரோக செயல்களுக்கு மஹிந்த ராஜபக்ச பொறுப்பு கூறி ஆக வேண்டும்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நேற்று (11) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். ” 2005 ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்காக மஹிந்த ராஜபக்ச புலிகளுக்கு நிதி வழங்கினார் என்ற விடயம் 2010 ஆம் […]
மார்ச்சில் மாகாணசபைத் தேர்தல்!

இழுபறியில் இருந்து வரும் மாகாண சபைத் தேர்தல், அடுத்த வருடம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதென செய்தி வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் நடுப்பகுதியிலேயே தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அந்நிலைமை மாறியுள்ளது. இதற்கமைய தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றது. நீண்ட காலமாக தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவின் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன எனக் கூறப்படுகின்றது. அரசாங்கம் […]
எம்.பி.பதவி துறப்பு:முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் முக்கிய புள்ளிகள்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், மாகாண சபைத் தேர்தல்களில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர் என தெரியவருகின்றது. இதற்காக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி மாகாண சபை முதல்வர் வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டுள்ளனர். இது பற்றி கட்சி தலைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது. மாகாண முதலமைச்சர்களாக இருந்தால் தமது பகுதி மக்களுக்கான சேவைகளை ஆற்றுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர். அரசாங்கம்மீது மக்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதால் மாகாணசபைத் தேர்தலில் […]