வித்தியாசமாக திருடிய மூன்று பெண்களுக்கு வலை

நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி சனிக்கிழமை 11 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு பயணித்த அரச பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரின் 3 பவுன் எடை உள்ள தங்க சங்கிலி ஒன்று களவாடப்பட்டுள்ளது என திம்புள்ள- பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டோனிகிலிப் தோட்ட சிறுவர் காப்பக உத்தியோகத்தரே முறைப்பாடு செய்துள்ளார். பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்த போது தனக்கு அருகில் கர்ப்பிணி அமர்ந்திருந்தார்., குழந்தை ஒன்றை வைத்து கொண்டு இருந்த […]
இலங்கையில் சீதாராமன் அரண்மனை – இந்தியா தொடர்ச்சியாக உதவும்!

இலங்கையில் சீதாராமன் அரண்மனை அமைப்பதற்கு இந்தியா தொடர்ச்சியான பங்களிப்பு வழங்குமென, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இன்று (12) முற்பகல் பண்டாரவளை பொது விளையாட்டரங்கில் மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இந்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது இந்திய-இலங்கை உறவுகளில் நீண்டகால நட்பைக் குறிக்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். இது இந்திய-இலங்கை மக்களுக்கு இடையிலான பிரிக்க முடியாத […]
”இந்த வருடத்திற்குள் ரூ.1,750 சம்பளம் கிடைக்கும்”

இந்த வருடத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மலைநாட்டு மலையக சமூகத்தைச் சேர்ந்த 2,000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பண்டாரவளையில் கலந்து கொண்டபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்திய உதவியுடன் 10,000 வீடுகளை கட்டும் திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் இன்று (12) காலை இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, 2,000 பயனாளிகளுக்கு அடையாளமாக உரிமைப் பத்திரங்களை […]
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் இராதாகிருஷ்ணன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாச […]
பாடசாலை முன்பாக மாணவியின் தந்தை மீது தாக்குதல் ; வெளியாகின சிசிரிவி காட்சிகள்

திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் இருந்து தனது மகளை ஏற்றிச் செல்ல காத்திருந்த தந்தை மீது முச்சக்கர வண்டியில் வந்த சிலர், கடந்த 07ம் திகதி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொளி இன்று வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலின் பின்னர், பாதிக்கப்பட்ட நபர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பாடசாலை விடுகின்ற நேரங்களில் மாணவிகளின் பாதுகாப்பு கருதி, பாடசாலைகளின் முன்பாக பொலிஸாரை கடமையில் நிறுத்துமாறு பெற்றோர் […]
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரின் தூண்டுதலின் பேரில் நிறுவப்பட்ட இந்த பொலிஸ் பிரிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்கள் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகளை பெறுவதாக கூறப்படுகின்றது. இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக […]
யாழ். கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ; தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று காலை இவ்வாறு சடலம் கரையொதுங்கியுள்ளது. 18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக விசாரணைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
100 இற்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100 இற்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகள் இன்னும் முக்கிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்வதாக அந்தக் கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையின் மருந்துப் பற்றாக்குறை முற்றிலுமாக தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சு பலமுறை உறுதியளித்திருந்தது. ஆனால் தற்போது மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள […]
ஹமாஸின் சுரங்கபாதைகளில் எஞ்சியவற்றையும் அழிக்க இஸ்ரேல் திட்டம்

காஸாவில் ஹமாஸால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகளில் எஞ்சியவற்றையும் அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா தலைமையிலான “சர்வதேச பொறிமுறையின்” கீழ் இந்த நடவடிக்கை நடத்தப்படும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட பிறகு இஸ்ரேலின் மிகப்பெரிய சவால் காஸாவில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளையும் அழிப்பதாகும்” என்று இஸ்ரேல் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நீடித்த இரண்டு ஆண்டுகால போரில் […]
காஸா ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கும் ஹமாஸ் அமைப்பு

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தில் உள்ள சில முக்கிய நிபந்தனைகளை ஏற்க மறுத்துள்ள ஹமாஸ் அமைப்பு, எகிப்தில் இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வ கையெழுத்து நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த 10ஆம் திகதியன்று அமுலுக்கு வந்தது. இதன் ஒரு பகுதியாக, காஸாவின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறியதையடுத்து, இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தின்படி, நாளை (13) நண்பகலுக்குள் ஹமாஸ் அமைப்பு, தன்னிடம் […]