யாழில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 69 வயதான மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தெள்ளிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையில் கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக நேற்று (10) வீட்டில் வைத்து உட்கொண்டுள்ளார். இதனால் உடல் நலம் மோசமான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண […]
அதிவேக வீதிகளில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான தொழில்நுட்ப தர ஆய்வுத் திட்டம் ஆரம்பம்
அதிவேக வீதிகளில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான தொழில்நுட்ப தர ஆய்வுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் போக்குவரத்து விபத்துகளை குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னோடித் திட்டமாக, மகும்புராவில் இருந்து இயக்கப்படவிருந்த பல பேருந்துகள் தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிசோதிக்கப்பட்டன. ஆய்வு செய்யப்பட்ட பேருந்துகளுக்கு தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும், ஒவ்வொரு பேருந்திலும் இயக்கத்திற்கு ஏற்றது என்பதைக் காண்பிக்ககூடியவாறான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த திட்டம் நாடளாவிய […]
இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை
2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதவுள்ளன. புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி 5 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது இடத்தை பிடித்துள்ளன. நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் […]
மின்சார கட்டணம் குறித்து ஆணைக்குழுவின் இறுதி தீர்மானம்
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 6.8% உயர்த்த இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் கூறினார். மறுசீரமைப்பு திட்டங்களை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தத் தவறியதால் கட்டண உயர்வு தேவைப்படுவதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்தார். மேலும், தற்போது 1.5 […]
காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்கின்றோம்
காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். அத்துடன் கடந்த காலங்களில் இடம்பெற்றதைப் போன்று மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கும் ஆளுநர் பணிப்புரைவிடுத்தார். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்திற்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், […]
இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் இந்த மீனவர்கள் 04 இழுவை படகுகளில் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மன்னார் மீன்வள பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த மீனவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் […]
சம்பள அதிகரிப்பு தொடர்பில் கேள்விக் கணைகளை தொடுத்த ஜீவன் தொண்டமான்
ஒரு வருட காலத்தில் பெருந்தோட்ட பகுதியில் எத்தனை வீடுகளை கட்டினீர்கள் என்று அரசாங்கத்திடம் கேட்டேன். பதில் கிடைக்கவில்லை .இன்றும் கேட்டேன் பதில் கிடைக்கவில்லை. சம்பள நிர்ணய சபை ஊடாக 1700 ரூபாவை நாங்கள் வழங்கும் போது, அது வேண்டாம் 2138 ரூபாய் தான் வேண்டும் என்று குறிப்பிட்டவர்கள் எங்கே? ஒரு வருடம் முடிந்து விட்டது. சம்பள அதிகரிப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார். […]
தமிழ் அரசுக் கட்சியை அழித்து விடலாம் என்பது பகல் கனவே – சி.வீ.கே.சிவஞானம்
எங்கள் கட்சி கொள்கையான சமஷ்டி வழிக்கு வந்த கஜேந்திரகுமாருக்கு நன்றி. சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. தமிழ் அரசுக் கட்சியை மலினப்படுத்தி அழித்து விடலாம் என்பது பகல் கனவே என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த சி.வீ.கே. சிவஞானம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 13 ஆம் திருத்தத்தையும் அரசியலமைப்பையும் குழப்பி ஏக்ய ராஜ்ய மற்றும் ஒற்றையாட்சி […]
மக்களின் நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம்
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் நிச்சயம் மாற்றம் வருமென தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். “இந்நாட்டில் கடந்த 76 வருடகால அரசியலானது மேட்டுக்குடிகள், தனவந்தர்களுக்கு மட்டுமே சொந்தமான அரசியலாக இருந்து வந்தது. இவர்களின் தாளத்துக்கேற்பவே அரசியல்வாதிகள் ஆட்டம் போட்டனர்: ஆட்டுவிக்கப்பட்டனர். இந்நிலைமைய […]