இஸ்தான்புல் – லண்டன் விமானத்தில் புகை – அவசரமாக தரையிறக்கம்
துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானத்திலிருந்து திடீரென புகை வெளியேறியதால் குறித்த விமானம் ருமேனியா தலைநகரான புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால் 4 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இவ்விமானத்தில் விமானிகள் உள்பட 142 பேர் பயணித்துள்ளனர். விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த மீட்புக்குழுவினர் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். அதன்பின் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 4 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. இது குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் […]
சீனா மீது கூடுதல் 100 சதவீத வரி – ட்ரம்ப் அதிரடி
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தங்கள் நாட்டின் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என அறிவித்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீத வரியை உயர்த்தினார். இதற்கு பதிலாக சீனா அமெரிக்கா பொருட்கள் மீது 125 சதவீத வரியை உயர்த்தியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் மூண்டதையடுத்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி சீன […]
மீண்டும் பிரான்ஸின் பிரதமராக லெகோர்னு தெரிவு
பிரான்ஸின் பிரதமராக மீண்டும் செபஸ்டியன் லெகோர்னு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசியல் குழப்பம் காரணமாக கடந்த ஓராண்டில் பிரதமராக நியமிக்கப்பட்ட 4 பேர் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இதனால் மெக்ரோன் தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேவேளை, அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரவும், நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை மீண்டும் கொண்டுவரவும் தனது ஆதரவாளரான செபஸ்டியன் லெகோர்னுவை பிரதமராக மெக்ரோன் அறிவித்தார். அவர் கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி பிரதமராக பதவியேற்றார். ஆனால், அரசியல் குழப்பம் காரணமாக பதவியேற்ற 27 […]
அமெரிக்க இராணுவ வெடிபொருள் ஆலையில் வெடிவிபத்து – 19 பேரின் நிலை கேள்விக்குறி
அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தில் அமைந்துள்ள இராணுவ வெடிபொருள் ஆலையில் நேற்று (10) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 19 இற்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களை இதுவரை காணவில்லை. இந்நிலையில் உள்ளே சிக்கிக்கொண்ட 19 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – 6 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸின் மிண்டனோ தீவில் நேற்று (10) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 7.6 ரிச்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கினதோடு, மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பிலிப்பைன்ஸில் கடந்த 01ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 72 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் பிரிவுக்கு 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கத் திட்டம்
நாட்டில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை விரைவுப்படுத்துவதற்கு 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். பொலிஸ் பிரிவுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் குறித்த அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நியமிக்கப்படுவார்களென்று குறிப்பிட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றதால், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் பிரிவுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 5,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாகவும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 5,000 பேரை ஆட்சேர்ப்புச் செய்யவுள்ளதாகவும் அவர் […]
பேலியகொடை – புத்தளம் வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
பேலியகொடை – புத்தளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேலியகொடையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் வலதுபுறம் திரும்பும்போது, அதே திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டடிய நபர் காயமடைந்து, மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கட்டுனேரிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பில் மாரவில பொலிஸார் […]
76ஆவது இராணுவ தினம் – சிரேஷ்ட அதிகாரிகளுக்கு நிலை உயர்வு
நேற்று (10) 76ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ ஆகியோரின் பரிந்துரையின் பேரில், போரில் காயமடைந்த 05 பிரிகேடியர்களுக்கு அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அவர்களை மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு அளித்துள்ளார்.
‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தொட்டலங்க கண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எலகந்த பகுதியில் 39.99 கிராம் ஹெரோயின் வைத்திருந்து கடத்திய குற்றச்சாட்டின்பேரில் கணபதி கணேஷ் எனப்படும் தொட்டலங்க கண்ணா மீது 2014 டிசம்பர் 26ஆம் திகதி சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். விசாரணையின்போது பிரதிவாதிக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை தவிர்த்து வந்தநிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு […]
ஹோட்டன் சமவெளி பூங்காவில் விதி மீறினால் கடும் நடவடிக்கை
நுவரெலியா, ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவை பார்வையிட வருபவர்கள் பூங்காவின் விதிமுறைகளை மீறி செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹோட்டன் சமவெளி தேசிய பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சட்ட விரோதமாக செயற்படுபவர்களுக்கு சம்பவ இடத்திலேயே 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர்களின் அழகைக் காண மக்கள் வருகை தரும் நிலையில், அவர்களுக்கென்று விசேட நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.