பத்ரிநாத் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம்
உத்தராகண்ட் மாநிலத்தில் சார்தாம் என்று அழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்பெற்ற தலங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயிலில் நேற்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி வழிபட்டார். அவரை கோயில் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்று பிரசாதங்களை வழங்கினர். பலத்த பாதுகாப்புடன் முகேஷ் அம்பானி கோயிலுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சமோலிக்குச் சென்றார். Daily Thanthi
கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றிய ஏஜண்ட்: இந்தியர் எடுத்த தவறான முடிவு
கனடாவுக்குச் செல்வதற்காக ஏஜண்ட் ஒருவரிடம் 9 லட்ச ரூபாய் செலுத்திய நிலையில், ஏஜண்ட் ஏமாற்றியதால் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார் இந்தியர் ஒருவர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள Moga என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ககன்தீப் சிங் (26). அதே பகுதியைச் சேர்ந்த ட்ராவல் ஏஜண்டான ஷிஃபு கோயல் மற்றும் அவரது மனைவியான ரீனா கோயல் ஆகியோரிடம், தன்னைக் கனடாவுக்கு அனுப்ப உதவுமாறு கோரியுள்ளார் சிங். அவரை கனடா அனுப்புவதற்கான ஆவணங்கள் தயார் செய்வதற்காக இந்திய மதிப்பில் 9 லட்ச […]
இந்திய அணிக்கு எனது அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக்கூடாது – மொசின் நக்வி பிடிவாதம்
துபாயில் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஆனால் இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பையை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியின் கையால் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இதனால் ஆசிய கோப்பையை, போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் தங்களோடு எடுத்து சென்று விட்டனர். கோப்பையை தங்களுக்கு […]
வூஹான் ஓபன் டென்னிஸ்: சபலென்கா, கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் லாரா செக்மண்டை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் […]
திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா உருக்கம்
மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார், நயன்தாரா. சரத்குமார் நடித்த ‘ஐயா’ படம் மூலம் தமிழுக்கு வந்த அவர், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைத் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், அதற்காகப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “22 ஆண்டுக்கு முன் கேமராவுக்கு முன்னால் முதன்முதலில் நின்ற போது, திரைப்படங்கள்தான் என் […]
மீண்டும் வெளியாகிறது சூர்யாவின் ‘அஞ்சான்’!
நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாகி இருந்தன. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 11 வருடம் ஆன நிலையில் […]
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான ‘நிறம்’!
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான ‘நிறம்’ முகேன் ராவ், பிரீத்தி அஸ்ராணி, தான்யா ஹோப் முதன்மை வேடங்களில் நடிக்கும் க்ரைம் த்ரில்லர் படம், ‘நிறம்’. நிதின் சத்யா, சுரேகா வாணி, கஜராஜ், ஸ்ரீஜித் ரவி, ஸ்மேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம், இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. சான்டானியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை கிருஷ்ண பலராம் இயக்கியுள்ளார். கே ஸ்கொயர் வென்ச்சர்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான […]
டிச.25-ல் விக்ரம் பிரபுவின் ‘சிறை’ ரிலீஸ்!
விஜய் நடித்த ‘மாஸ்டர்’, ‘லியோ’, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்டப் படங்களை செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ சார்பில் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். அவர் மகன் எல்.கே.அக் ஷய்குமார் நடிகராக அறிமுகமாகும் படம் ‘சிறை’. இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக அனந்தா, அனிஷ்மா நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தை, வெற்றிமாறனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ […]
ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும்- இயக்குனர் அட்லீ
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா சாப்டர் 1” படம் கடந்த 2ம் தேதி உலகளவில் வெளியானது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். பழங்குடிகள் – மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து, பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது. இந்தநிலையில், “காந்தாரா சாப்டர் 1” படத்தை பாராட்டி பேசிய […]
இந்தியாவின் முதல் மனநல தூதராக தீபிகா படுகோனே நியமனம்
நேற்று உலக மனநல தினம். இந்நிலையில் மனநல ஆதரவு அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடிகை தீபிகா படுகோனேவை இந்தியாவின் முதல் மனநல தூதராக மத்திய சுகாதார அமைச்சகம் நியமித்துள்ளது. மனநலம் தொடர்பான உரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதில் தீபிகா படுகோனே ஆற்றிய தீவிர பங்களிப்பின் காரணமாகவே இப் பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் தீபிகா படுகோனே வெளியிட்டுள்ள பதிவில், உலக மனநல தினத்தன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் முதல் மனநல […]