‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை

39 கிராம் ஹெரோயின் வைத்திருந்து கடத்தியதற்காக “தொட்டலங்க கண்ணா” என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (10) அவரைக் கைது செய்து உடனடியாக தண்டனையை நிறைவேற்றுமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தது. நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கினார். எலகந்த பகுதியில் 39.99 கிராம் ஹெரோயின் வைத்திருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில், கணபதி […]
கிழக்கு மாகாணத்தின் சிறந்த முதியோர் சங்கமாக காரைதீவு கண்ணகி முதியோர் சங்கம் தெரிவு

கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களம் நடாத்திய சர்வதேச முதியோர் தின விழாவில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் சிறந்த முதியோர் சங்கமாக காரைதீவு கண்ணகி முதியோர் சங்கம் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்கள பணிப்பாளர் கிருஷ்ணபிள்ளை இளங்குமுதன் தலைமையில் முதியோர் தின கௌரவிப்பு விழா நேற்று முன்தினம் (09) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்ட சிறந்த […]
கொள்கலன் விவகாரத்துக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் தொடர்பில்லை

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொள்கலன்களை சோதனையின்றி விடுவிக்கப்பட்ட விவகாரத்தை அடுத்தே அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைச்சு பறிக்கப்பட்டதாக கூறப்படுவதை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அரசாங்கம் தனது இலக்குகளை விரைவாக அடையும் வகையில், மிகவும் பொருத்தமான மற்றும் அறிவியல் முறையில் அமைச்சுக்களை மறுசீரமைப்பதே அமைச்சரவை மறுசீரமைப்பின் நோக்கம் என்று தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொள்கலன்கள் விவகாரம் காரணமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க […]
மலையக மக்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை

மலையக மக்களுக்கு 2,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் நாளை (12) காலை 10.00 மணிக்கு பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. தோட்டப்புறப் பகுதிகளில் வசிக்கும் மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும், அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளை அவர்களுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வீட்டுவசதித் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. தோட்டத் தொழிலாளியாக (பதிவுசெய்யப்பட்ட/ஓய்வு பெற்ற/சாதாரண தொழிலாளியாக) இருத்தல், 05 வருடங்களாக செல்லுபடியாகும் […]
அடுத்த வாரம் கரூர் செல்லும் விஜய்

தமிழகத்தின் கரூர் வேலுசாமிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் எதிர்வரும் 17 ஆம் திகதி செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலுசாமிபுரம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க தீரமானித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியையும் அவர் நேரில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் கடந்த 27 ஆம் திகதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் […]
காரைதீவில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொது மக்களிடம் கையளிப்பு

அம்பாறை – காரைதீவு பகுதியிலுள்ள இராணுவ முகாம் அமைந்திருந்த காணி நேற்று (10) பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் காரைதீவு பிரதேச சபையும் பொது நூலகமும் இயங்கியிருந்தன. காரைதீவில் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட இந்த இராணுவ முகாம், காரைதீவு பிரதேச தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடம் கையளிக்கப்பட்டது.
லிட்டியன் நாதஸ்வரத்தின் குறளிசைக்காவியம் யாழ்ப்பாணத்தில் வெளியீடு

தமிழகத்தின் இளம் இசைமேதை லிட்டியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி ஆகியோரின் தயாரிப்பில் உருவான குறளிசைக் காவியம் தொகுதி இரண்டு வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில், யாழ் இந்திய துணைத்தூதரக ஏற்பாட்டில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 1330 குறட்பாக்களையும் இசையுடன் பாடி இசையுடன் பொருள் கூறி குறளிசைக் காவியத்தை வெளியிட்டுள்ளனர் தொகுதி இரண்டின் பகுதிகளை இந்திய துணை தூதர் சாய் முரளி பேராசிரியர் எஸ் சிவலிங்கராஜா செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திர […]
பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மீது வாள் வெட்டு

பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய இணைப்பாளருக்கும் அவரது தந்தைக்கும் போதைப்பொருள் கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தும்பளை பகுதியில் அவர்களது வீட்டுக்கு சென்ற வன்முறை கும்பல் , வீட்டில் இருந்த மகன் மற்றும் தந்தையர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் […]
வலி. வடக்கில் ஜனாதிபதியின் வாக்குறுதியை மீறி கடற்படை காணி சுவீகரிக்க முயற்சி

யாழ்ப்பாணத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியினை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களின் காணிகள் மக்களுக்கே எனவும் , விரைவில் முப்படைகளின் வசமுள்ள தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிப்போம் என ஜனாதிபதி முதல் தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வரும் நிலையில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நகுலேஸ்வரம் கிராம சேவகர் பிரிவில் உள்ள 2 ஏக்கர் காணியினை , கடற்படையின் ரேடர் அமைக்க சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் […]
ராஜஸ்தான் அரசு, தனியார் பள்ளிகளில் ஒரே சீருடை

ராஜஸ்தானில் மொத்தம் 80,000-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. இங்கு 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தனியார் பள்ளிகள் 50,000-க்கு மேல் உள்ளன. இங்கு 84 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இடையேயான பாகுபாட்டை நீக்க ஒரே மாதிரியான சீருடையை கொண்டு வர ராஜஸ்தான் கல்வித்துறை ஏற்கெனவே முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதனால் இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் மாநில […]