தற்கொடை போராளி மாலதியின் 38 ஆவது நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், பாரதிபுரம் வட்டாரத்துக்குட்பட்ட சூசைப்பிள்ளை கடைச் சந்தியில் இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு, […]

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை – பலாத்தொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை இலக்கு வைத்து இன்று (11) மாலை துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வீதிக்கு இறங்கி போராடுவோம் – சஜித்

நாட்டில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் போராட்டங்கள் வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை செயலகத்தில் டி.எஸ். சேனநாயக்க அரசியல் கற்கைகள் பீடத்தின் திறப்பு விழா, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடன் இன்று (11) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நற்செய்தியொன்றை வழங்க தயாராகி வருகின்றது. மீண்டும் […]

ஒக்டோபர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

இந்த மாதத்தின் முதல் 09 நாட்களில் 46,868 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இந்தியாவிலிருந்து 14,221 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதே காலப்பகுதியில் சீனா, பிரித்தானியா, ஜேர்மன், பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் […]

மதுகமவில் ஒரு தொகை தோட்டாக்கள் மீட்பு

மதுகம, சிரிகதுர, நாகஹவல பகுதியில் உள்ள கால்வாய் அருகே ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 50 MPMG தோட்டாக்கள், T – 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 தோட்டாக்கள், 2 ஷோட்கன் தோட்டாக்கள், 9 மில்லி மீற்றர் வகைக்குரிய 12 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட தோட்டக்களை அந்த இடத்தில் விட்டுச் சென்றவர்கள் தொடர்பில் எந்த வித தகவல்களும் வௌியாகாத நிலையில்  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு

நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) காலை  இந்த சந்திப்பு  இடம்பெற்றுள்ளது. இதன்போது முன்னர் இருந்த முறைகேடுகளை மாற்றி முதலீடுகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சூழலை மேலும் பலப்படுத்த வெளிப்படையான புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி அந்த குழுவுக்கு விளக்கமளித்துள்ளார். […]

நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது

நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியில் வைத்து குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் இளைஞன் இலங்கையில் தங்கி நிற்பதற்கான விசா காலம் நிறைவடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் , இளைஞன் […]

அரியாலை குப்பை மேடு – சுயலாப அரசியலின்பால் மக்கள் மத்தியில் பரப்பப்படும் செய்திகளாகும்

நல்லூர் பிரதேச சபை காரைமுனங்கு கழிவுமுகாமைத்துவ மையத்தினை குப்பைகளைக் கொட்டி அதனை குப்பை மோடாக மாற்றுகின்ற செயற்பாட்டினை ஒருபோதும் செய்யவுமில்லை செய்யப்போவதுமில்லை என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அரியாலை பகுதியில் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகளை சேமிக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கடந்த புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த நிலையம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஊடகங்களுக்கு தவிசாளர் அனுப்பியுள்ள அறிக்கையிலையே அவ்வாறு […]

ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்

உத்தர பிரதேசத்​தில் பாஜக ஆட்சி அமைந்​தது முதல் ஒவ்​வொரு தீபாவளி பண்​டிகைக்​கும் அயோத்​தி​யில் லட்​சக் கணக்​கில் அகல் விளக்​கு​கள் ஏற்​றப்​படு​கின்​றன. இது உலக சாதனை​யாகப் பதி​வாகி வரு​கிறது. அந்த வகை​யில், தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு எதிர்வரும் 19-ம் திகதி 9-வது தீப உற்​சவம் நடை​பெற உள்​ளது. இவ்​விழாவை உத்தர பிரதேச அரசு சார்​பில் அயோத்​தி​யின் ராம் மனோகர் லோகியா அவத் பல்​கலைக்கழகம் நடத்​துகிறது. இதில், 29 லட்​சம் அகல் விளக்​கு​கள் ஏற்ற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதன்​முலம் கடந்த ஆண்​டின் […]

ஜனாதிபதி நிதியத்தின் டிஜிட்டல் திட்டத்திற்கான இரண்டு NBQSA விருதுகள்

ஜனாதிபதி நிதியத்தின் புதிய நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் திட்டம், மதிப்புமிக்க NBQSA (National Best Quality Software Awards) கணினி திட்ட விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை வென்றதன் மூலம் அதன் சிறப்பை உறுதிப்படுத்த முடிந்தது. அதன்படி, 2025 பிப்ரவரி 07 முதல் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஜனாதிபதி நிதியத்தின் குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்திய புதிய டிஜிட்டல் அமைப்பு, குடிமக்கள் சேவைகள் பிரிவில் வெண்கல விருதையும், அரச துறையில் சிறந்த பாராட்டு விருதையும் […]