இராமர் பாலத்தை பார்வையிட படகுச் சேவை

மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடற்கரை பூங்காவானது மன்னார் பிரதேச சபையின் பராமரிப்பில் நீண்ட காலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வட மாகாணத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டு குறித்த இடம் மன்னார் பிரதேச சபையின் கண்காணிப்பிலேயே இதுவரை காலமும் இருந்து வந்தது. 2015 ஆம் ஆண்டு குறித்த கடற்கரை பூங்கா பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு உட்பட்ட பகுதியாக கொண்டு வரப்பட்டது. இதற்கு அப்பகுதி […]
ரணில் – தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் சந்திப்பு – நுவரெலியா உள்ளூராட்சி சபைகள் பற்றி உரையாடல்

நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி முறைகள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களை சந்தத்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப் போது சமகால அரசியல் நிலைமைகள் பற்றியும் உரையாடப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் ப்கொழும்பு ளவர் வீதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன் பிரதித் தலைவர் திகாம்பரம், மூத்த உறுப்பினர் வே. இராதாகிருஸ்ணன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி […]
போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரை நிறுத்த இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அமைதிக்கான முதல் கட்ட திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார். “ஒப்பந்தத்தின்படி அனைத்துப் பிணைக் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். அதேபோல் இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து மீட்டுக்கொள்ளும். அமைதிக்கான முதல் அடியை வலிமையாக எடுத்து வைத்துள்ளோம்,” என்று டிரம்ப் சுட்டிக்காட்டியள்ளார். “அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். இஸ்ரேல், அரபு மற்றும் முஸ்லிம் […]
மியான்மரில் ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் உயிரிழப்பு

மியான்மரில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சியை விரட்டி விட்டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பவுர்ணமியை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை மத்திய மியான்மரில் உள்ள சவுங் யூ நகரில் புத்த மதத்தினர் ஏராளமானோர் கூடி விழா கொண்டாடினர். அப்போது புத்த மதத்தினர் கூடியிருந்த பகுதிகளில் ராணுவத்தினர் பாராகிளைடர் மூலம் அடுத்தடுத்து குண்டுகளை வீசி தாக்குதல் […]
விவாகரத்து பெற்ற கணவன் பாலாபிஷேக கொண்டாட்டம்!

மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதை பாலாபிஷேகம் செய்து கணவர் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லியைச் சேர்ந்தவர் பிராடர் டி.கே. பிராடருக்கு அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்நிலையில் நீதிமன்றத்திலிருந்து அவருக்கு அண்மையில் விவாகரத்து கிடைத்துள்ளது. இதையடுத்து வீட்டுக்கு வந்த அவருக்கு தாய், பாலால் அபிஷேகம் செய்தார். இதுகுறித்து பிராடர் டி.கே. தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, “விவாகரத்து கிடைத்து விட்டது. நான் இப்போது தனியாக(சிங்கிள்) இருக்கிறேன். மகிழ்ச்சியாக […]
ஆந்திராவில் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

ஆந்திராவில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம், டாக்டர். பிஆர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ராயவரம் பகுதியில் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 40 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வந்தன. இதனிடையே, நேற்று காலை பட்டாசு கிடங்கில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆலையில் […]
நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

மும்பையைச் சேர்ந்த தீபக் கோத்தாரி என்ற தொழிலதிபரை ஏமாற்றி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு லுக் அவுட் சர்க்குலர் (எல்ஓசி) நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா செல்ல அனுமதி கேட்டும் லுக் அவுட் சர்க்குலர் நோட்டீஸை ரத்து செய்யவும் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், “முதலில் […]
நிலச்சரிவு நடந்த பகுதிக்கு ஜிப்லைனில் சென்ற டாக்டர்

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 28-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா சென்றார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். இதனால் இர்பான் மோல்லாவால் அங்கு செல்ல முடியவில்லை. […]
கனடாவில் பள்ளிக்கூட நுழைவாயிலில் மாணவி மீது கத்தி குத்து

கனடாவின் மான்ட்ரீயலில் உள்ள செயிண்ட்-லூக் உயர்நிலைப் பள்ளி நுழைவாயிலருகே ஒரு 14 வயது மாணவி கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். மான்ட்ரீயல் பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணியளவில், வகுப்புகள் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, நோட்ரே டேம் டி கிரேஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. காவல்துறைக்கு பல 911 அவசர அழைப்புகள் வந்ததையடுத்து பொலிஸார் விரைவாக சம்பவ இடத்துக்கு சென்றனர். சிறுமி கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளார். மேலும், அவரது கண் […]
“கிளாசிக் ரோஹித் நகைச்சுவை” – ரசிகர்களை ஈர்த்த முன்னாள் கேப்டன்

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா விலகியிருக்கலாம், ஆனால் அவரது வசீகரமும் நகைச்சுவை உணர்வும் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பங்கேற்ற ரோஹித் சர்மா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நிகழ்ச்சியின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்தியாவின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர் அருகில் அமர்ந்திருந்தார் ரோஹித் சர்மா. அப்போது அவர்களை, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான […]