யாழில் அணையா விளக்கு தூபி உடைப்பு

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது அணையா விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது. போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணைய விளக்கு நினைவு தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த நினைவு தூபியை விசமிகள் அடித்து உடைத்துள்ளனர்.
ஷேக் ஹசீனா கைதுசெய்ய உத்தரவு

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தமது பதவியை இராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். ஷேக் ஹசீனாவுக்கு, எதிராக இனப்படுகொலை மற்றும் பல ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர் மீது தொடர்பான வழக்குகளில் ஷேக் ஹசீனா முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் […]
10 ஆயிரம் வீட்டுத் திட்டம் 2027 இற்குள் நிறைவு பெறும் – காணி உரிமை வழங்குவது உறுதி

10 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தில் 2 ஆயிரத்து 56 வீடுகளுக்குரிய நிர்மாண பணி 12 ஆம் திகதி இடம்பெறும். 2026 இல் மேலும் 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். 2027 ஆகும்போது இந்த 10 ஆயிரம் வீட்டுத் திட்ட பணியை நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம் என பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். பெருந்தோட்டப்பகுதிகளில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வரையான குடும்பங்கள் லயன்களில் வாழ்கின்றன. மலையக […]
ஏழு லட்சம் ரூபாய் நிலுவை!! மகிந்த வசித்த வீட்டிற்கு மின் மற்றும் நீரை துண்டிக்க நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகள் துண்டிக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகள் நீர் இணைப்பை துண்டிக்க விஜேராம இல்லத்திற்கு சென்றிருந்தனர். அத்துடன், ஒரு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருந்ததால் மின்சார சபை ஊழியர்களும் மின்சார இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்தனர். விஜேராம இல்லத்தில் தற்போது பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே இருப்பதன் […]
தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து: கம்பனி பொறுப்பு கூற வேண்டும்

மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தேயிலை தொழிற்சாலை என்பது எமது மக்களின் வாழ்வாதாரம் என்பதோடு, அது எமது அடையாளம் எனவும்,அதை பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு கம்பனிகளுக்கு உள்ளது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேயிலை தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ள நிலையில் இதற்கு தொழிற்சாலை பொறுப்பதிகாரிகள், கம்பனியினரின் தான்தோன்றி தனமே […]
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரி யாரென தெரிந்துவிட்டது – ரவி செனவிரத்ன தகவல்!

ஈஸ்டர் தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தின் போது இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிஜாம் காரியப்பர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அக்டோபர் 8 ஆம் தேதி ரவி செனவிரத்னவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவது குறித்து குழு விவாதித்தபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். ரவி செனவிரத்னவை அழைப்பதற்கு முன்பு, […]
அஞ்சல் பெட்டியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்கள்

மத்தேகொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் அஞ்சல் பெட்டியிலிருந்து 47 T-56 தோட்டாக்களும் 9 மில்லிமீட்டர் துப்பாக்கி ரவைகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்து வீட்டின் உரிமையாளரால் வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (08) வீட்டின் உரிமையாளர் குறித்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அஞ்சல் பெட்டி பாதுகாப்பாக பூட்டுப் போடப்பட்டிருப்பதை கண்டுள்ளார். இந்நிலையில் அயல்வாசிகளின் உதவியுடன் அதனை திறந்துபார்த்தபோது இந்த வெடி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜெனீவா விடயத்தில் தடுமாறும் அரசு – சாணக்கியன் எம்.பி

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய இரண்டுவார கால அவகாசம் கோரிய நிலையில், ஜெனீவாவில் தாம் எடுத்த நிலைப்பாடு தொடர்பில் பதிலளிக்க முடியாமல் இருப்பதனாலேயே இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அரசாங்கம் நழுவிச் செல்கிறது என்று இலங்கை தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது சாணக்கியன் எம்.பியால் குறித்த […]
இலங்கைக்கான நீதி – IMF உடன் உடன்பாடு

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை அதிகாரிகள் ஊழியர்கள் உடன்பாட்டை எட்டியுள்ளனர். அதன்படி, IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் சீர்திருத்த திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. IMF நிர்வாகக் குழுவால் மதிப்பாய்வு அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கை தோராயமாக 347 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரியாலையில் 08 பேர் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்டார்கள் என குற்றம் சாட்டி 08 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியாலை பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியாலை மக்கள் நேற்றைய தினம் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான வாகனத்தில் குறித்த இடத்திற்கு கழிவுகளை கொண்டு வந்த […]