294 தாதியர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள்

சுகாதார சேவையில் 294 புதிய தாதியர்களை உள்வாங்குவதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா நாளை (10) இடம்பெறவுள்ளது. இந் நியமனங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவின் முதல் மாடியில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது 9 பேச்சு பயிற்சியாளர்கள் மற்றும் 6 மருந்தாளுனர்களை சுகாதார சேவையில் இணைப்பதற்கான நியமனக் கடிதங்களும் அமைச்சரின் தலைமையில் இங்கு வழங்கப்பட உள்ளன. 2019 ஆம் […]
சட்டவிரோத புறாக்களுடன் இருவர் கைது

இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட புறாக்களின் தொகுதியுடன் இரண்டு பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இன்று (9) மேலதிக விசாரணைக்காக கண்டகுளிய வனவிலங்கு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கல்பிட்டிக்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட கப்பலின் நடத்துனர் மற்றும் மற்றொரு நபரை கைதுசெய்து சோதனை செய்தபோது படகில் உள்ள பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 149 புறாக்கள் மீட்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட புறாக்கள் இராமேஸ்வரம் அல்லது அருகிலுள்ள இடத்திலிருந்து இலங்கை கடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் […]
பிரான்ஸில் 48 மணிநேரத்தில் புதிய பிரதமரை நியமிக்க நடவடிக்கை

பிரான்ஸில் 48 மணிநேரத்தில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில திட்டங்களுக்கு எதிர்கட்சிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட செபஸ்டியன் லெகோர்னு கடந்த திங்கட்கிழமை (6) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவும், அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் விரைவில் புதிய பிரதமரை நியமிக்கவேண்டிய கட்டாயம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுக்கு உள்ளது. இதற்கிடையே […]
தொழிலாளர் பற்றாகுறை – தற்காலிக வேலை விசாக்களை வழங்க தயாராகும் பிரித்தானியா

தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, தற்காலிக வேலை விசாக்களுக்கான 82 வேலை வகைகளை பிரித்தானியா பட்டியலிட்டுள்ளது. இந்த விசாக்கள் அரை திறமையான வேலைகளுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்கி, கருத்துக் கணிப்புகளில் பின்தங்கிய பின்னர், குடியேற்றச் சட்டத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முயற்சித்துள்ளார். அதே நேரத்தில், பிரித்தானியா மந்தமான பொருளாதாரத்தையும் சில துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையையும் சந்தித்துள்ளது. இந்நிலையில், பட்டப்படிப்புக்குக் குறைவான தகுதிகளைக் கொண்ட வேலைகளுக்கு வெளிநாட்டு […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பரவும் செய்தி – பொலிஸார் மறுப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பரவி வரும் செய்தி தவறானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், அதனை கடுமையாக மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால் இருப்பதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன நாடாளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவிடம் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகின. […]
ஐரோப்பிய நாடுகளில் வேலை – இலங்கையர்களிடம் 200 மில்லியன் ரூபாய் மோசடி

ஐரோப்பிய நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, சுமார் 200 மில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் பல வருட அனுபவமுள்ள மாவனெல்லைச் சேர்ந்த ஒருவரும், கடவத்தையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவரும் அடங்குவர். மாவனெல்ல மற்றும் இம்புல்கொடவில் வைத்து இருவரும் கைது […]
மனித உரிமைகள் பேரவை தேவையற்ற அரங்கு – கட்சி அரசியலுக்கு அப்பால் இணைந்து செயல்பட தயார் ; கஜேந்திரகுமார்

தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதியை கிடப்பில் வைத்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தேவையற்ற அரங்கு எனவும் அதனை தாண்டி கட்சி அரசியலுக்கு அப்பால் செயற்படுபவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தந்தை செல்வா கலையரங்கில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் தமிழ் மக்களுடைய பொறுப்புக் கூறல் விவகாரம் பேசப்பட்டு […]
மின்சார கட்டண திருத்தம் – 500 பேரின் யோசனை சமர்ப்பிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 500 பேர் தமது யோசனைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்ததாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு, நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்தக் கருத்து சேகரிப்பு நடவடிக்கைகள் செப்டெம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமாகின. இறுதி அமர்வு மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு, நேற்று (08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த […]
விஜய் உயிருக்கு ஆபத்து? நேரடியாக களத்தில் இறங்கிய சிஆர்பிஎஃப் தலைமை அதிகாரி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக சி.ஆர்.பி.எஃப் தலைமை டிஜிபி மற்றும் கமாண்டன்ட் ஆகியோர் அவரது வீட்டில் நேரடி ஆய்வில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட பரப்புரை பயணத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு […]
ஊழல், மோசடி விசாரணைகளை குழப்புவதே எதிரணியின் நோக்கம்

“இலங்கையில் ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராகக் கைது செய்யப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளைக் குழப்புவதே அவர்களின் நோக்கமாகும்.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், “இலஞ்ச, ஊழல் தொர்பான விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அவரால் பதிலளிக்கப்பட்டுள்ளது. செயற்பாட்டு ரீதியில் அவர் அவரது நடவடிக்கைகளை […]