குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் த.பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். கடந்த 11-09-2025அன்று நீதிமன்றில் கொழும்பு பிரதம சட்டவைத்திய அதிகாரியினால் சமர்பிக்கப்பட்டிருந்த செலவு நிதி அறிக்கை […]
இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளருக்கு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு இம்முறை ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு மத்தியிலும் கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் எழுத்தாளரின் கவர்ச்சியான தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது. லாஸ்லோ 1954ல் ஹங்கேரியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கியூலா என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இவரது முதல் நாவல்(Satantango, 2012) 1985ல் வெளியானது. அவர் எழுதிய ‘ஹெர்ஷ்ட் 07769’(Herscht 07769) என்ற நாவல், சமூக அமைதியின்மையை […]
இலங்கை பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா

இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நவராத்திரி விழா பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் இன்று (09) பாராளுமன்றத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அனுசரணையுடன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து இந்த […]
கனடாவில் மது போதையினால் பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நெருக்கடி

கனடாவில் மது போதையினால் பொலிஸ் அதிகாரி ஓருவர் பணியை இழக்க நேரிட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் வில்லியம்ஸ் லேக் (Williams Lake) பிரிவில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரி ஒலாவோ காஸ்ட்ரோ, மது போதையில் வாகனம் செலுத்தியதாகவும், பொதுமக்களிடம் துப்பாக்கியை காட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், தனது பதவியிலிருந்து விலகுமாறு காஸ்ட்ரோவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2022 ஜூலை 1 ஆம் திகதி அதிகாலை நேரத்தில் நடந்ததாக விசாரணை ஆணைக்குழு கண்டறிந்துள்ளது. ஆணைக்குழு உறுப்பினர் கெவின் எல். ஹாரிசன் […]
கனடாவில் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பீச்ச்லாண்ட் (Peachland) பகுதியில் உள்ள ஒரு வங்கியில் அதிகாலையில் ஏ.டி.எம் இயந்திரம் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் க்ளிமென்ட்ஸ் கிரசன்ட் (Clements Crescent) பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வெஸ்ட் கெலோனா பொலிஸார் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர். வங்கி கட்டிடத்தின் பக்கவாட்டில் இருந்த ஏ.டி.எம் வைப்பு பெட்டியை கொள்ளையர்கள் ஒரு முன்மாதிரி இயந்திரம் (front-end loader) மற்றும் ஒரு பிக்கப் லாரி பயன்படுத்தி வலுக்கட்டாயமாக இழுத்து […]
அணையா விளக்கு தூபி மீளமைப்பு

அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது அணையா விளக்கு ஏற்ப்பட்டு இருந்தது. போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணைய விளக்கு நினைவு தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது. குறித்த நினைவு தூபியை […]
யாழில் ஆசிரியர் மாணவிகளுடன் அங்கசேட்டை..

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்கும் பெண் மாணவிகளுடன் அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர் அங்க சேட்டையில் ஈடுபட்டமை தொடர்பில் பாடசாலை நிர்வாக நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடரபில் தெரிய வருவதாவது யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் தரம் பத்தில் கல்வி கற்கும் மாணவிகளுடன் அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர் […]
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – நால்வர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். குறித்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்த பின்னர் துப்பாக்கிதாரி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் […]
பூஸா சிறைச்சாலையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

சிறைச்சாலை புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு இன்று (09) நடத்திய கூட்டுச் சோதனையின்போது பூஸா சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் உயர் பாதுகாப்பு குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டுகளில் 29 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள “தெமட்டகொட சமிந்த” தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு கையடக்கத் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான “வெலே சுதா” மற்றும் […]
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் புதிய மைல்கல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், கரோட்டிட் எண்டார்டெரெக்டமி (Carotid Endarterectomy) அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றிலும், கிழக்கு மாகாணத்தின் வரலாற்றிலும் முதன்முறையாக குறித்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதான ஒருவருக்கே குறித்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு இடப்புற கரோட்டிட் எண்டார்டெரெக்டமி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியர் நதுன் மொஹோட்டி மற்றும் அவரது குழுவால் குறித்த சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.